நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs for TNPSC Exams 01-03 March 2020

TNPSC Current Affairs 01-03 March 2020

தமிழ்நாடு

  • கீழடியில் நடக்கும், ஆறாம் கட்ட அகழாய்வில், கருப்பு, சிவப்பு பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கீழடியில், 19 பிப்ரவரி 2020 அன்று ஆறாம்கட்ட அகழாய்வு பணியில்  , 4 அடி ஆழத்தில், கருப்பு, சிவப்பு வண்ணமுடைய வட்டப்பானை, சிதிலமடைந்த நிலையில் கிடைத்துள்ளது.அதன் அருகிலேயே, சிறிய மண் பானையும் கிடைத்துள்ளது.  
  • இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழகப் பிரிவின் தலைவராக ஹரி கே. தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • ராமநாதபுரம் மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 1 மாா்ச் 2020 அன்று அடிக்கல் நாட்டினார்.
  • ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி ’ அமைப்பு பற்றி :  கவிஞா் கலைச்செல்வி புலியூா் கேசிகன்  என்பவர் நிறுவிய இந்த அமைப்பு  வெளிநாடுகளில்   வாழும் தமிழா்களின் இளம் தலைமுறைக்கு தமிழ்க்கல்வியை வழங்கி வருகிறது.  கனடா நாட்டின் வாழும் தமிழா்களின் இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ‘பிள்ளைத் தமிழ்க் கல்வி’” ஏப்ரல் 2020  மாதம் தொடங்கப்படவுள்ளதாக இவ்வமைப்பு அறிவித்துள்ளது.
  • நாட்டிலேயே முதன் முறையாக திருநங்கையருக்கான சிறப்பு இல்லம் , சென்னை பூந்தமல்லியில் திருநங்கையர் முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும், 'சகோதரன் அமைப்பு மற்றும்  நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரால்    அமைக்கப்படுகிறது.  இதற்காக, 1.5 கோடி ரூபாயை, பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வழங்கியுள்ளார்.'
  • [திருப்புதல்] தமிழ்நாட்டில்  ராணுவ தொழில் வழித்தடங்கள் :
    • இரண்டு ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்படும்’ என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 2018 பிப்ரவரி 2ல் நடந்த பட்ஜெட் உரையின் போது தெரிவித்திருந்தார்.  இதற்காக தமிழகமும் உத்தரபிரதேசமும் தேர்வு செய்யப்பட்டது. இது பல்வேறு  ராணுவ பாதுகாப்பு தொழிற்துறை அலகுகளிடையே இணைப்பதை உறுதி செய்வதாகும்.
    • தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திறக்கப்படுவதன் மூலம் சென்னை, ஓசூர், சேலம்,  கோவை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை  இணைக்கும் வகையில் அமையவுள்ளது. 
    • தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் துவக்க விழா 20-6-2020 அன்று  திருச்சியில் நடைபெற்றது.

இந்தியா

  • இந்தியாவில் தனிநபர் தண்ணீர் இருப்பு (Per Capita Availability of Water) 2021 ஆம் ஆண்டில் 1486 கியூபிக் மீட்டர்களாகவும்,  2031 ஆம் ஆண்டில் 1367 கியூபிக் மீட்டராகவும் இருக்கும் என  மத்திய நகர்புற மற்றும் வீட்டு வசதிகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  
    • கூ.தக. இந்தியாவில் தனிநபர் தண்ணீர் இருப்பு (Per Capita Availability of Water) 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் முறையே   1816 cubic meters மற்றும்  1545 cubic meter ஆக இருந்தது குறீப்பிடத்தக்கது.
  • தேசிய உயிரி எரிபொருள் கொள்கை (National Policy on Biofuels) வெளியிடப்பட்ட ஆண்டு - 2018
  • ”ஈகம் திருவிழா” (EKAM Fest) என்ற பெயரில் மாற்றுத் திறன் கொண்ட   நுண்கலை நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோரின் கைவினைப்பொருட்கள் மற்றும் இதர தயாரிப்புகளுக்கான ஒரு வார கண்காட்சி 2 மார்ச் 2020 அன்று புது தில்லியில்  தொடங்கி வைக்கப்பட்டது.  இந்த நிகழ்வை மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் கீழுள்ள  தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மேம்பாட்டு நிறுவனம் ( National Handicapped Finance Development Corporation (NHFDC)) நடத்துகிறது.
  • சபோஷிட் மா அபியான்’ (Suposhit Maa Abhiyan) திட்டம் 1 மார்ச் 2020 அன்று  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களால் இராஜஸ்தான் மாநிலம் கோட்டா  எனுமிடத்தில் தொடங்கப்பட்டது.  2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஊட்டச்சத்துக் குறைபாடற்ற நாடாக மாற்றவேண்டுமென்ற மத்திய அரசின் இலக்கினை அடையும்  நோக்கோடு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம்  பிரசவ காலத்திலுள்ள மகளிருக்கு ஊட்டச்சத்துள்ள உணவு ஒரு மாதத்திற்கு வழங்கப்படுகிறது.
    • கூ.தக. : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள்  இராஜஸ்தான் மாநிலம் கோட்டா (Kota) நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சர்வதேச நிகழ்வுகள்

  • அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் தடுப்புக் குழுவின் முக்கிய உறுப்பினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா வர்மாவை டிரம்ப் நிர்வாகம் நியமித்துள்ளது.
  • ஐ.நா பாதுகாப்பு அவையின் மார்ச் 2020 மாதத்தின் தலைவர் நாடாக சீனா மார்ச் 1 முதல் பதவி ஏற்றுள்ளது.  ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சாங்ஜுன் சீனாவின் சார்பாக பாதுகாப்பு அவையின் தலைவர் பதவி வகிக்கவுள்ளார்.
  • சிரியாவுக்கு எதிராக துருக்கி "ஸ்பிரிங் ஷீல்டு" ஆபரேஷன் : வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ரஷ்யா கூட்டுப்படைகளுடன் சேர்ந்து சிரியா நடத்திய வான்வழி தாக்குதலில் 34 துருக்கிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி நடத்திய தாக்குதலில் இரண்டு சிரியாவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதோடு. 100 டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை "ஸ்பிரிங் ஷீல்டு" என்கிற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச 2-3-2020 அன்று அரசாணை வெளியிட்டுள்ளார்.   
  • ஈராக்கின் பிரதமர் முகமது தவுபிக் அலாவி பதவியேற்ற ஒரு மாதத்தில்  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
  • அமெரிக்கா - தலிபான் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் : ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதியை ஏற்படுவதற்கு வகை செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் தலிபான் அமைப்பும் 29-02-2020 அன்று கத்தாா் தலைநகா் தோஹாவில் வைத்து கையெழுத்திட்டன. இதன்படி, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை இன்னும் 14 மாதங்களில் முழுமையாக விலக்கிக் கொள்ள அமெரிக்காவும், அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்பைத் துண்டித்துக் கொள்ள தலிபான் அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.இந்த ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போா் முடிவுக்கு வரக்கூடும்.
    • கூ.தக. : இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்த நிகழ்வில் இந்தியாவின் சார்பாக, கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர்  குமரன் (P. Kumaran) கலந்துகொண்டார்.
  • மலேசியாவின் 8 வது பிரதமராக முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் பின் ஹாஜி முகமது யாசின் (Muhyiddin bin Haji Muhammad Yassin ) 1-3-2020 அன்று பொறுப்பேற்றார்.
  • அமெரிக்க உளவுப்படைக்கு புதிய தலைவராக, ஜான் ராட்கிளிப்பியை அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
  • லக்சம்பர்க் நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இலவச பஸ் மற்றும் ரெயில் சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.  சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வருகிற வகையில், இந்த நாட்டில் இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இலவச பொதுபோக்குவரத்தை வழங்குகிற முதல் நாடு என்ற பெயரை  லக்சம்பர்க்  நாடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

  • இந்தியாவில் பிப்ரவரி 2020 மாதம் வேலையின்மை 7.78 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேலையின்மை மாா்ச்  2019 மாதம், நகா்ப்புறத்தில் 7.72 சதவீதமாகவும் கிராமப்புறத்தில் 6.15 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு 2019-20 நிதியாண்டில் 4.9 சதவீதமாக இருக்குமென ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது. முன்னதாக இந்நிறுவனம் , இந்திய பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்குமென கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

  • பூஜ்ஜிய பாகுபாடு தினம் (Zero Discrimination Day )  - மார்ச் 1  | மையக்கருத்து (2020)  - பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கெதிராக பூஜ்ஜிய பாகுபாடு (Zero Discrimination aganist Women & Girls)
  • உலக தற்காப்பு தினம் (World Civil Defence Day)   - மார்ச் 1

விருதுகள்

  • பெர்லின் திரைப்பட விழா 2020 ல் சிறந்த திரைப்படத்திற்கான ‘தங்க மான் விருதை’ (Golden Bear Award) ஈரான் நாட்டைச் சேர்ந்த   “There Is No Evil”  என்ற திரைப்படம் பெற்றுள்ளது. இதனை  ஈரானிய இயக்குநர்  மொகமத் ரசோலஃப்   (Mohammad Rasoulof)  இயக்கியுள்ளார்.

அறிவியல் தொழில்நுட்பம்

  • அண்டவெளியில் பூமியின் பல்வேறு தன்மைகளை ஒத்த “கேஐசி-7340288 ” என்று பெயரிடப்பட்டுள்ள இன்னொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். அமெரிக்காவின் கெப்ளா் விண்கலம் பதிவு செய்துள்ள தகவல்களை ஆய்வு செய்து, அவா்கள் கண்டறிந்துள்ள 17 புதிய கோள்களில் அதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

  • மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், மகளிா் பிரிவில் ஹீதா் வாட்ஸன் ஆகியோா் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினா்
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!