Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தேசிய குழந்தைகள் பகல் காப்பக திட்டம் (National Creche Scheme)

தேசிய குழந்தைகள் பகல் காப்பக திட்டம் (National Creche Scheme) பற்றி ...

  • ராஜிவ் காந்தி தேசிய குழந்தைகள் பகல் காப்பகம்   திட்டம் (Rajiv Gandhi National Creche Scheme)  என்ற பெயரில் 1 ஜனவரி 2006 ல் தொடங்கப்பட்டது. 
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் அமல்படுத்தப்படும்  
  • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பணிபுரியும் மகளிரின் ஆறு மாதம்  முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு    பகல் நேர காப்பக வசதியை வழங்குவதாகும்.
  • 2017 ஆம் ஆண்டு இந்த திட்டமானது,   தேசிய குழந்தைகள் பகல் காப்பக திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு குழந்தைகளுக்கும்,  வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மகளிரிடமிருந்து  மாதம் ரூ.20/- ம்,    மாதம் ரூ.12000/- (பெற்றோர்கள் இருவரின் வருமானத்தையும் சேர்த்து)  க்கு கீழ் வருமானம் கொண்ட பெண்களிடமிருந்து ஒரு குழந்தைக்கு மாதம் ரூ. 100/- ம் கட்டணமாகவும்,  மாதம் ரூ.12000/- (பெற்றோர்கள் இருவரின் வருமானத்தையும் சேர்த்து)  க்கு மேல் வருமானம் கொண்ட பெண்களிடமிருந்து ஒரு குழந்தைக்கு மாதம் ரூ. 200/- ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.