நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs for TNPSC Exams 10-12 June 2020

TNPSC Current Affairs 10-12 June 2020

தமிழ்நாடு

  • சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 11-6-2020 அன்று திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
  • 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,157 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் 2020-21 நிதியாண்டில் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்திலுள்ள 1018  ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து அரசாணையை தமிழ் வளர்ச்சித்துறை 10-6-2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் சில இடங்களில் ஊரின் பெயர்கள் தமிழில் ஒரு மாதிரி உச்சரிக்கப்படுகின்றன. ஆனால் அதே பெயர்கள் ஆங்கிலத்தில் வேறு மாதிரியாக உச்சரிக்கப்படுவதுடன், எழுதவும் படுகின்றன. இனி அதை விடுத்தது
    • உதாரணமாக சென்னையில் உள்ள எழும்பூர் ரயில் நிலையமானது ஆங்கிலத்தில் எக்மோர் என்று அழைக்கப்படுவதுடன், EGMORE என்று எழுதப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் இனி எழும்பூர் (EZHUMBUR) என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்றும், உச்சரிக்க வேண்டும் என்றும் இந்த அரசாணையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்க கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். கோயம்புத்தூர் - KOYAMPUTHTHOOR, தரும‌புரி - THARUMAPURI, ஆலங்குளம் - AALANGGULAM, திருமுல்லைவாயல் - THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி - POOVIRUNTHAVALLI,ட மயிலாப்பூர் - MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை - CHINTHADHARIPETTAI சைதாப்பேட்டை - SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும்.
  • இந்திய அரசின் திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினரான தமிழகத்தைச் சேரத முனைவர் ஏ. வைத்தியநாதன் 10-6-2020 அன்று காலமானார். இவர் , 1962 முதல் 72 வரை திட்டக் குழுவில் திட்டமிடுதலுக்கான பிரிவில் வைத்தியநாதன் செயலாற்றியுள்ளார்.
  • சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (திமுக)  ஜெ. அன்பழகன் காலமானார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்(62) சிகிச்சை பலனின்றி 10-6-2020 அன்று காலை காலமானார்.
  • 2019-2020 ஆம் கல்வியாண்டின் 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் 11ம் வகுப்பிற்கான நிலுவையில் உள்ள தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80% வருகைப்பதிவுக்கு 20% கணக்கில் எடுத்துக் கொள்ளபடும் எனவும்  தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • லாக்டவுண் காரணமாக வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக https://tnskill.tn.gov.in என்ற இணைய தளத்தில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  சம்பந்த பட்டோர் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் பாக்கெட்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நொறுக்கு தீனிகளை அடைப்பதற்காக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் பாக்கெட் போன்ற அத்யாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு 51 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி 11லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இன்று மீதி 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ (Operation Desert Chase) என்ற பெயரில் வேவுபார்த்தலுக்கெதிரான நடவடிக்கையின் (anti-espionage operation) மூலமாக இந்திய இராணுவத்திலிருந்து தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு கடத்த முயன்ற இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு பாதுகாப்புத் துறை பணியாளர்களை இந்திய இராணுவ புலனாய்வுத் துறை அலுவல் இரகசிய சட்டம் 1923 (Official Secrets Act, 1923) இன் கீழ் கைது செய்துள்ளது. இந்த ’ஆபரேசன் பாலைவன வேட்டை’ 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும்.
  • ’ஹால்ட்வானி உயிரியல் பன்மை பூங்கா’ (Haldwani biodiversity park) உத்தரக்காண்ட் மாநிலத்தில் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி (2020) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
  • ”பாரத்மாலா திட்டத்தை” (Bharatmala Pariyojana) செயல்படுத்தி முடிப்பதற்கான கால இலக்கு 2021-2022 லிருந்து 2025-2026 ஆக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • கூ.தக. : பாரத்மாலா திட்டம் என்பது மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் சாலை மேம்பாட்டு திட்டமாகும். இந்த திட்டமானது குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் தொடங்கி பஞ்சாப், ஹரியானா செல்லும். பின்னர் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களை இணைத்து பின்னர் உத்தரப்பிரதேசம், பீகார் வழியாக சென்று சிக்கிம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர், மிஸோரம் மாநிலங்கள் வழியாக இந்தியா- மியான்மர் எல்லை வரை செல்கிறது. இந்த திட்டத்திற்கு ரூ.5.35 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது.
    • இந்த மிகப்பெரிய திட்டத்திற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்கள் துறைக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 38 ஆயிரம் கி.மீ கொண்ட இந்த திட்டத்தின் முதல் கட்டமானது 2021-2022ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு தாமதமாகும் என இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ஐசிஆர்ஏ) தெரிவித்துள்ளது.
  • பசுக்களை பாதுகாப்பதற்கான ‘உத்தரப்பிரதேச பசுவதை தடுப்புச் சட்டத்தில்( Uttar Pradesh cow slaughter act, 1955’) உத்தரப்பிரதேச அரசு திருத்தங்களை (Cow Slaughter Prevention (Amendment) Ordinance, 2020) மேற்கொண்டுள்ளது. இதன் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகப்பட்சமாக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ5 லட்சம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனுக்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் G கிருஷ்ணன் ரெட்டி (G Kishan Reddy) தலைமையில் 9 சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளடங்கிய புதிய குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
  • கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது ஆற்றிய உரையில், இந்தியாவில் இருந்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.இந்த திட்டத்தின்படி, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறபோது, 2022-ம் ஆண்டு, விண்வெளிக்கு 3 அல்லது 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்கு முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் செல்ல இருந்தது.இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்தாண்டு இறுதியில் செலுத்தப்படவிருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
  • இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
  • தேசிய உயர்கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (National Institutional Ranking Framework) தரவரிசைப் பட்டியல் 2020 11-6-2020 அன்று வெளியிடப்பட்டது.
    • இந்தியாவில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயா்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்க தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதற்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவா்கள் தோ்ச்சி விகிதம், கற்பித்தல், கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி உள்ளிட்ட 11 அம்சங்களை கொண்டு தரவரிசை உருவாக்கப்படும்.
2020 ஆம் ஆண்டில், வெவ்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற கல்வி நிறுவனங்களின் விவரம் வருமாறு,
பிரிவு : பொறியியல் கல்லுாரி
  1. சென்னை ஐ.ஐ.டி.,
  2. பெங்களூா் இந்திய அறிவியல் கழகமும்
  3. தில்லி ஐஐடி
பிரிவு: பல்கலைக்கழகங்கள்
1.இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு
2.ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி
பிரிவு: மேலாண்மை
1.இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத்
2.இந்திய மேலாண்மை கழகம், பெங்களூரு
3.இந்திய மேலாண்மை கழகம், கொல்கத்தா
பிரிவு: கல்லூரிகள்
1.மிரண்டா ஹவுஸ், புதுதில்லி
2.லேடி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரி, புதுதில்லி
3.இந்து கல்லூரி, புதுதில்லி
4.புனித ஸ்டீபன் கல்லூரி, புதுதில்லி
5.பிரசிடென்சி கல்லூரி, சென்னை
பிரிவு: கட்டிடக்கலை
1.இந்திய தொழில்நுட்ப மையம், காரக்பூர்
2.இந்திய தொழில்நுட்ப மையம், ரூரகே
3.இந்திய தொழில்நுட்ப மையம், கோழிக்கோடு
பிரிவு: மருந்தியல்
1.ஜமியா ஹம்தர்த், புதுதில்லி
2.பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
3.தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், மொஹாலி
பிரிவு: சட்டம்
1.இந்திய பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி, பெங்களூரு
2.தேசியசட்டப் பல்கலைக்கழகம், புதுதில்லி
3.நல்சர் சட்டப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் 2020 ல் தமிழகக் கல்வி நிலையங்களின் நிலை
  • பல்கலைக்கழக தரவரிசையிலும் 7-ஆவது இடத்தில் இருந்து 12-ஆவது இடத்துக்கும், பொறியியல் கல்லூரிக்கான தரவரிசையிலும் 9-ஆவது இடத்தில் இருந்து 14-ஆவது இடத்துக்கும் அண்ணா பல்கலை. தள்ளப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த உயா் கல்வி நிறுவனங்களில் பாரதியாா் பல்கலைக்கழகம் 21-ஆவது இடத்திலேயே உள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 33-ஆவது இடத்தில் இருந்து 41-ஆவது இடத்துக்கும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-இல் இருந்து 64-க்கும், மதுரை காமராஜா் பல்கலை., 69-இல் இருந்து 84-ஆவது இடத்துக்கும் சரிந்துள்ளன. திருச்சி பாரதிதாசன் 86-ஆவது இடத்தில் இருந்து 77-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர முதல் 100 இடங்களில், அமிா்தா விஸ்வ வித்யாபீடம் (13), திருச்சி என்ஐடி (24) வேலூா் விஐடி (28) உள்ளிட்ட 18 நிறுவனங்கள் உள்ளன
  • கல்லூரிகளுக்கான தரவரிசையில் மாநிலக் கல்லூரி 3-ஆவது இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. அடுத்தபடியாக லயோலா கல்லூரி (6), கோவை அரசு கலைக் கல்லூரி(34) உள்ளிட்ட 32 கல்லூரிகள் 100 இடத்துக்குள் உள்ளன.
  • மருத்துவக் கல்லூரிக்கான தரவரிசையில் சென்னை மருத்துவ கல்லூரி 12-ஆவது இடத்தில் உள்ளது. முதல் 40 இடங்களில் 7 தனியாா் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் சட்டப் படிப்புக்கு தலைமையிடமாக விளங்கும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய முக்கிய கல்வி நிறுவனங்கள், தரவரிசையிலேயே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ”புராஜக்ட் பிரித்வி” (Project Prithvi) என்ற பெயரில் நாடுதழுவிய நீடித்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தை ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development Programme-UNDP) , ஹிந்துஸ்தான் கோகோகோலா நிறுவனம் (Hindustan Coca-Cola Beverages Pvt Ltd (HCCB)) மற்றும் ஹைதராபாத்தைச் சேரத ‘ரிசைக்கால்’ ("Recykal") ஆகியவை இணைந்து இந்தியாவில் அமல்படுத்தவுள்ளன.
  • மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் (2020-2021) ஒரு லட்சத்து ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
  • ஓட்டுனர் உரிமம், அனைத்து வித பர்மிட்டுகள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகன ஆவணங்களின் புதுப்பிப்பு காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • அனைத்து என்சிஇஆர்டி தொலைக்காட்சி சேனல்களிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, மின் கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி (NCERT) யும், ரோட்டரி இந்தியாவும் (Rotary India) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளன.இதன் படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்களை மின் கற்றல் மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல் வித்யா தான் 2.0 என்ற திட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி-யிடம் அளிக்கும்.மின் கற்றலுக்கான இந்தப் பாடங்கள் மத்திய அரசின் தேசிய அலைபேசி செயலியான தீக்ஷா மூலமாகவும் கிடைக்கும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவும், டென்மார்க்கும் மின்சக்தித்துறையில், சமநிலை, மறுபரிசீலனை, இருதரப்புக்கும் பலன் ஆகியவற்றின் அடிப்படையில், வலுவான, ஆழமான மற்றும் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கா ரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 5-6-2020-ம் தேதி கையெழுத்திட்டுள்ளன.
    • இந்தியத் தரப்பில் மின்சக்தித் துறையின் செயலர் திரு சஞ்சீவ் நந்தன் சகாயும், டேனிஷ் தரப்பில் இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் திரு. ஃப்ரெட்டி ஸ்வேனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
    • நீண்டகால எரிசக்தி திட்டமிடல், தொலைநோக்கு, மின்சக்தி விநியோகத்தில் தளர்வு உள்ளிட்ட மின்சக்தித் துறை தொடர்பான பல்வேறு அம்சங்களில் இருதரப்பும் இணைந்து செயல்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். இதற்காக இந்த ஒப்பந்தத்தின் கீழ் கூட்டு செயற்குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.
  • லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ் : கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்துப் பகுதி ஆகிய இடங்களில் இந்திய-சீன ராணுவங்கள் படைகளை திரும்பப் பெற்றுள்ளன. இதனால், இருநாட்டு எல்லையில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.அதே நேரத்தில், பாங்காங் ஏரி, தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் திரும்பப் பெறப்படவில்லை.
பின்னணி : லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் கடந்த மே மாத தொடக்கத்தில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக, பாங்காங் ஏரி பகுதியில் மே 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.இதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியில் சில இடங்களில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்தது. அவா்கள் கூடாரம் அமைத்து தங்கினா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தற்போது 3 இடங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பதற்றம் சற்று தணித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது. இதில் சர்வதேச அளவில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியின் அதிபா் பியொ் குரூன்ஸிஸா மாரடைப்பால் மரணமடைந்ததாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 56 வயதான அவா், 2005-ஆம் ஆண்டு முதல் புரூண்டியில் ஆட்சி செலுத்தி வந்தாா்.

பொருளாதாரம்

  • நடப்பு நிதியாண்டில் (2020-21) இந்தியப் பொருளாதாரம் கொரோனாவால் 3.2 சதவீத வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வில் (ஜீன் 2020) மதிப்பிட்டுள்ளது. கடந்த 2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.2 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருந்ததாகவும், இந்த ஆண்டில் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறையும்பட்சத்தில் அடுத்த 2021-22 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பிருப்பதாக உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விருதுகள்

  • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ வின் உயரிய விருதான ’நாசா சிறந்த பொது சேவைக்கான பதக்கம்’ (‘NASA Distinguished Public Service Medal’ ) இந்திய வம்சாவளி (கேரளத்தைச் சேர்ந்த) அமெரிக்க தொழிலதிபர் ரஞ்சித் குமாருக்கு ( Renjith Kumar ) வழங்கப்பட்டுள்ளது.
  • "ஆசியாவின் நோபல்" என்றழைக்கப்படும் ரமோன் மகசேசே விருது, கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய்லாந்து தலைநகா் மணிலாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மகசேசே அறக்கட்டளை கூறுகையில், கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகமே முடங்கிப் போயுள்ளதால் அந்த விருதுக்குரியவா்களைத் தோ்ந்தெடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளது. இந்த விருது ரத்து செய்யப்படுவது, கடந்த 60 ஆண்டுகளில் இது முன்றாவது முறையாகும்.
    • கூ.தக. : 2019 ஆம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருது இந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமார் உட்பட ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது. மியான்மரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கோ ஸ்வே வின், தாய்லாந்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அங்க்கனா நீலாபஜித், பிலிப்பின்ஸைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரேமுண்டோ புஜன்ட்டே கயாபியாப், வன்முறை மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த சேவையில் ஈடுபட்டுள்ள தென் கொரியாவைச் சேர்ந்த கிம் ஜோங் - கீ ஆகியோரும் இந்த விருது 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

முக்கிய தினங்கள்

  • உலக அங்கீகாரமளித்தல் தினம் (World Accreditation Day) - ஜீன் 9

அறிவியல் & தொழில்நுட்பம்

  • உலகில் முதல் முறையாக ஒரு கோள் உருவாவதை படம் பிடித்துள்ளதாக பிரான்சு நாட்டை சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். அவர்கள், பூமியிலிருந்து 520 ஒளியாண்டு தொலைவில் உள்ள ‘ஆரிகா’ (Auriga) பால்வெளித் திரளிலுள்ள ‘AB Aurigae’என்ற நட்சத்திரத்தினருகில் ஒரு புதிய கோள் உருவாவதைப் European Southern Observatory’s Very Large Telescope (ESO’s VLT) தொலைநோக்கி மூலம் படம்பிடித்துள்ளார்கள்.
  • கொரோனா நோயாளிகளுக்கு ‘ரிமோட்’ வெண்டிலேட்டரை போலந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.தொலைவில் இருந்து கொண்டு இதை டாக்டர்கள் இயக்க முடியும்.
  • சூரியன் மற்றும் பூமியை ஒத்த, கெப்ளர் - 160 (Kepler-160) எனும் நட்சத்திரம் மற்றும் ”KOI-456” எனும் கோளையும் ஜெர்மனியைச் சேர்ந்த Max Planck Institute for Solar System Research (MPS) , University of Göttingen, அமெரிக்காவின் University of California, மற்றும் NASA வின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தியாவில் பரவும் கொரோனா எங்கிருந்து தோன்றியது என்பது குறித்து, இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குமார் சோமசுந்தரம், மைனக் மொண்டல், அங்கிதா லாவர்டே உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆய்வின் படி, இந்தியாவில் பரவி வருகிற கொரோனா வைரஸ், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஓசியானியா என்றழைக்கப்படுகிற ”பசிபிக் பெருங்கடல் தீவு நாடுகள்” மற்றும் ”தெற்காசிய பிராந்தியங்களில்” தோன்றி வந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த நாடுகள்தான் அதிகளவில் பயணம் மேற்கொள்ளப்பட்ட நாடுகள் என்று இந்த ஆராய்ச்சி குழுவினர் தெரிவித்தனர்.
  • "அனன்யா” (ANANYA) என்ற பெயரில் கிருமி நாசினி ஸ்பிரேயை (disinfectant spray)   பூனேவிலுள்ள  அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ( Defence Institute of Advanced Technology (DIAT)) கண்டுபிடித்துள்ளது.

விளையாட்டுகள்

  • ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதியின் ஆசியப் போட்டி தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தோஹாவில் நடந்த ஆசியப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது முதற்கட்ட சோதனையில் உறுதியான நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவர் போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
    • இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்கு அவர் போட்டியில் பங்கேற்க அத்லெடிக் இன்டெக்ரிடி யூனிட் அமைப்பு தடை விதித்துள்ளது.
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!