Current Affairs for TNPSC Exams 8,9 June 2020

TNPSCPortal.In
0
TNPSC Current Affairs 8, 9 June 2020

தமிழ்நாடு

 • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், பழமை வாய்ந்த 2 முதுமக்கள் தாழிகள் 8-6-2020 அன்றூ கண்டெடுக்கப்பட்டன.
 • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மனித எலும்பு  8-6-2020 அன்று கண்டெடுக்கப்பட்டது.
 • தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய தலைவராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ள அவருக்கு, மின் வாரியத்தின் தலைவா் பதவி முழுக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா

 • ஐ.சி.சி.எஸ் சுஜய் ( Indian Coast Guard Ship ‘Sujay’ ) என்ற ரோந்துக் கப்பல், கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல்படை சென்னை மண்டலத்தில் 8-6-2020 அன்று இணைக்கப்பட்டது. இந்த ரோந்துக் கப்பல் , இதற்கு முன்னர் ஒடிஸா மாநிலம், பாராதீப் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்தது.
 • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) 2019-2020 ஆம் ஆண்டிற்கான  மாநிலங்களுக்கான உணவு பாதுகாப்பு குறியீடு (State Food Safety Index (SFSI))  வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில்
  • பெரிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே குஜராத், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும்,
  • சிறிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா  
  • யூனியன் பிரதேசங்களில் முதல் மூன்று இடங்களை முறையே சண்டிகர், டெல்கி மற்றும் அந்தமான் தீவுகள் ஆகியவையும் பெற்றுள்ளன.
 • இந்தியாவின் முதல் ஆன்லைன் கழிவு மாற்று திட்டம் (online waste exchange programme) ஆந்திர மாநில அரசினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விஷத்தன்மை உடைய மற்றும் மட்கா கழிவுகளை பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்வது அல்லது அழிப்பதற்கான இந்தத் திட்டத்தை ஆந்திர பிரதேச சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் (Andhra Pradesh Environment Management Corporation or APEMC )செயல்படுத்துகிறது.
 • ”குரோ-பாட்” (Coro-bot) என்ற பெயரில் உலகின் முதல் இணையதளம் வழியாக கட்டுப்படுத்தப்படும் ரோபோவை மகாராஷ்டிர மாநிலம் தானே வைச் சேர்ந்த பொறியாளர் பிரதிக் திரோட்கர் (Pratik Tirodkar) என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோ கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்குவதுடன் , அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • உத்தர்காண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக காயிர்செயின் (Gairsain) நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரத்திற்கு ’ஃபராரிசென்’ (Bhararisen) என்ற பெயரும் உண்டு. ஏற்கனவே அம்மாநிலத்திற்கு தலைநகராயிருந்த டேராடூன் (Dehradun) அம்மாநிலத்தின் குளிர்கால தலைநகராக இருக்கும்.
 • சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு ( Environment Performance Index ) 2020ல் இந்தியா 168 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இங்கிலாந்தின் யேல் பல்கலைக்கழகத்தின் (Yale University) மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. முதல் மூன்று இடங்களை முறையே, டென்மார்க், லக்‌ஷம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பருவநிலை மாற்ற பிரிவில் இந்தியா உலகளவில் 106 ஆவது இடத்தையும் தெற்காசிய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
  • கூ. தக. 2018 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா 177 வது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 • BS-6 மாசு நெறிமுறைகளுடன் வெளிவரும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தனித்துவமான வண்ணங்கள் கொண்ட இலக்கத்தகடு (நம்பர் ப்ளேட்) பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த எரிபொருள் வகையினதும் BS -6 மாசுக் கட்டுபாட்டு நெறிமுறை வாகனங்களுக்கான பதிவு விவரங்களை எடுத்துச் செல்லும் தற்போதைய ஸ்டிக்கரின் மேல் 1 செ.மீ அகலமுள்ள பச்சை நிறத்துண்டு ஒன்றைக் கட்டாயமாக்குகிறது, அதாவது பெட்ரோல் அல்லது இயற்கை எரிவாயு (CNG)வில் இயங்கும் வாகனங்களுக்கு வெளிர் நீல வண்ண ஸ்டிக்கர் மற்றும் டீசல் வாகனம் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இப்போது BS – 6 வாகனங்களில் இந்த ஸ்டிக்கர்கள் மீது 1 செ.மீ மேலே பச்சை நிறத் துண்டு இருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
  • கூ.தக. : BS-6 மாசு கட்டுப்பாடுத் தரநிலைகள் ஏப்ரல் 1, 2020 முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

 • ’மிஷன் சாகர்’ (Mission Sagar) எனும் திட்டத்தின் கீழ் கோவிட்-19 பாதிக்கப்பட்ட இந்தியாவின் நட்பு தீவு நாடுகளான மாலத்தீவு, மெளரிசியஸ் , மடகாஸ்கர், காமரோஸ் மற்றும் செஷல்ஸ் நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு மே 2020 தொடங்கியது.
  • கூ.தக : SAGAR - Security and Growth for All in the Region
 • இந்தியா மற்றும் பூட்டான் இடையிலான சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை 3-6-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பரஸ்பர நலன், அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பொருத்தமான வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பராமரித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நீண்டகால ஒத்துழைப்பை உருவாக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தாகும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதுடன், பத்தாண்டு காலத்துக்கு செயல்பாட்டில் இருக்கும்.

முக்கிய தினங்கள்

 • உலக மூளை இரத்தக்கட்டு  நோய் தினம் (World Brain Tumor Day) 2020 –  ஜீன் 8
 • உலக பெருங்கடல்கள் தினம் (World Oceans Day) - ஜீன் 8 | மையக்கருத்து 2020 - நீடித்த பெருங்கடல்களுக்கான கண்டுபிடிப்பு (Innovation for a Sustainable Ocean)


Post a Comment

0 Comments

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top