TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

New Test Batch Admission Going On
Download Test Schedule / Join

TNPSC Current Affairs 4,5 June 2020

TNPSC Current Affairs 4,5 June 2020

தமிழ்நாடு

 • தமிழக தலைமைச் செயலர் திரு K சண்முகம் அவர்களுக்கு  மூன்று மாதம் (1 ஆகஸ்டு 2020 முதல் 31 அக்டோபர் 2020) பதவி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
 • இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் ‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம் : ‘நேச்சர் இன்டெக்ஸ்’ என்ற அமைப்பு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தேசிய அளவில் 21-வது இடத்தையும், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. இந்த நிறுவனம் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், அவை சமர்ப்பிக்கும் ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அதன் தரத்தை நிர்ணயித்து, பட்டியலிடுகிறது.
 • அகஸ்தியன், கடுகு என்கிற புனைப்பெயா்களில் எழுதிய பிரபல நகைச்சுவை எழுத்தாளா் பி.எஸ்.ரங்கநாதன் (88) 2-6-2020 அன்று அமெரிக்காவில் உள்ள நியூஜொ்சியில் காலமானாா்.இவரது சொந்த ஊா் செங்கல்பட்டு. கணினி மீது ஆா்வம் கொண்ட இவா், எழுத்துருக்களை உருவாக்கி அதற்கு கதைகளின் கதாபாத்திரப் பெயா்களையே சூட்டினாா்.
 • முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 25% படுக்கைகளை காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ15000 மட்டுமே வசூலிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

இந்தியா

 • ’இணையதள சேவைக்கான அணுகலை அடிப்படை மனித  உரிமையாக மாற்றிய இந்தியாவின் முதல் மாநிலம்’  எனும் பெருமையை கேரளா பெற்றுள்ளது.  அம்மாநிலத்தில்  பாரத் மின்னணு நிறுவனத்தின் உதவியுடன் அமலாக்கப்படும் ‘கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வர்க்’ (Kerala Fiber Optic Network(K-FON) ) திட்டத்தின் மூலம் டிசம்பர் 2020 க்குள் அனைத்து குடிமக்களுக்கும் இணைய சேவை உறுதி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • 'விமல் ஜீல்கா குழு’ (Bimal Julka Committee) : திரைப்பட கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்காக விமல் ஜீல்கா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 2-6-2020 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
 • பெண்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் இறுதி தவணையாக ரூ.500 செலுத்தும் பணிகள் 5-6-2020 அன்று முதல் தொடங்கவுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.கரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் விதமாக, பெண்களின் ஜன் தன் வங்கி கணக்குகளில் மூன்று மாதங்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாா்ச் 26-ஆம் தேதியன்று அறிவித்தன் படி இந்த தொகை வழங்கப்படுகிறது.
 • கரோனா பொது முடக்க காலத்தில் விசா விதிமுறைகளை மீறி இந்தியாவுக்குள் தங்கியிருந்த வெளிநாடுகளைச் சோ்ந்த 2,550 தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்டவா்களாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ரே சமயத்தில் இத்தனை பேரை இந்தியா கருப்புப் பட்டியலில் வைப்பது இதுவே முதல்முறையாகும். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ரஷியா, சீனா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உள்பட 40 நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
 • ”துலிப்” (TULIP - The Urban Learning Internship Programme) என்ற பெயரில் புதிதாக தொழிற்கல்வி  பயின்ற பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு  ‘ஸ்மார்ட் சிட்டி’  திட்டங்களில்  ‘இண்டர்ன்ஷிப்’ எனும் உள்ளிருப்புப் பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும்,  அனைத்திந்திய தொழிற்கல்வி கவுண்சில் ( All India Council for Technical Education (AICTE)) மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது.
 • ’ஸ்வதேஷ்’ (Skilled Workers Arrival Database for Employment Support(SWADES)) என்ற பெயரில், வேலை வாய்ப்பு உதவிக்கான திறன் பணியாளர்கள் தரவு தளம் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் (Vande Bharat Mission)  கீழ் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த திட்டமானது    மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம், மத்திய உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அமல்படுத்தப்படுகிறது. 
  • கூ.தக. : வந்தே பாரத் திட்டம் என்பது, கொரோனாவையொட்டி, சர்வதேச ஊரடங்கினால், வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை விமானங்களின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்துவருவதற்கான திட்டமாகும்.

வெளிநாட்டு உறவுகள்

 • உலக தடுப்பூசி கூடுகையில் ( மெய்நிகர்) (Global Vaccine Summit ) பிரதமர் மோடி அவர்கள் 4-6-2020 அன்று கலந்து கொண்டார்கள். இங்கிலாந்து நாட்டினால் கூட்டப்பட்ட இந்த கூடுகையில், இந்தியாவின் சார்பாக ‘உலக தடுப்பூசி கூட்டமைப்பு அமைப்பிற்கு’ (GAVI - Global Alliance for Vaccines and Immunization) 15 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமாா் ரூ.113.13 கோடி)  வழங்குவதாக இந்தியாவின் சார்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
  • கூ.தக. : ’GAVI’ எனப்படும் உலக தடுப்பூசி கூட்டமைப்பு  2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ளது.
 • இந்தியா, ஆஸ்திரேலியாவிலுள்ள ராணுவப் படைத்தளங்களை பரஸ்பரம் இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் 4-6-2020 அன்று கையெழுத்தானது. இதுபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூா் ஆகிய நாடுகளுடன் இந்தியா ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது. இது, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள உதவும் என பார்க்கப்படுகிறது.
  • இந்திய - ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு முதன்முறையாக மெய்நிகர் மாநாடாக 4-6-2020 அன்று நடைபெற்றது.இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து பொது சீர்திருத்தங்கள், பாதுகாப்பு, முக்கியமான தொழில்நுட்பம் தொடர்பான இரு நாடுகளிடையே 7 ஒப்பந்தகள் கையெழுத்தாகின. 
 • இந்தியாவுக்கு நன்கொடையாக 100 வென்டிலேட்டர்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

விருதுகள்

 • இந்திய எழுத்தாளர் கிருத்திகா பாண்டே (Indian writer Kritika Pandey) ஆசியாவிற்கான காமன்வெல்த் சிறு கதை  பரிசை (Asia in 2020 Commonwealth short story prize) அவரது  “The Great Indian Tee and Snakes” என்ற சிறுகதைக்காக வென்றுள்ளார்.

நியமனங்கள்

 • இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவராக (Confederation of Indian Industry (CII)) கோட்டக் மகிந்திரா வங்கியின் நிா்வாக இயக்குநா் உதய் கோட்டக் 3-6-2020 அன்று  பொறுப்பேற்றாா்.
 • பின்லாந்துக்கான இந்திய தூதராக ரவீஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • பிரதமர் மோடி அவர்களின் தனிச் செயலராக (Private Secretary) 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய ராஜீவ் டோப்னோ (Rajeev Topno) உலக வங்கியின்  செயல் இயக்குநருக்கான மூத்த   ஆலோசகராக (Senior Advisor to the Executive Director of the World Bank)  நியமிக்கப்பட்டுள்ளார். 

முக்கிய தினங்கள்

 • உலக மிதிவண்டி தினம் (World Bicycle Day) - ஜீன் 3
 • சர்வதேச பாலியல் தொழிலாளர் தினம் (International Sex Workers Day) - ஜீன் 2

அறிவியல் & தொழில்நுட்பம்

 • சரிகம இந்தியா நிறுவனத்துடன் ஃபேஸ்புக் நிறுவனம் சா்வதேச அளவிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஃபேஸ்புக் பயனாளா்கள் தாங்கள் இடும் பதிவுகளில் பல்வேறு தரப்பட்ட இசையையும் பாடல்களையும் இணைக்க முடியும். சரிகம செயலியில் 25 இந்திய மொழிகளைச் சோ்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான பாடல்கள் உள்ளன. திரையிசைப் பாடல்கள் முதல் பக்திப் பாடல்கள் வரை பலதரப்பட்ட பாடல்கள் காணப்படுகின்றன.

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads