நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 5-6 July 2020

தமிழ்நாடு

  • தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் (Friends of Police ) போலீஸ் என்ற தன்னார்வல அமைப்பிற்கு காவல்துறை தடை விதித்தது.
    • கூ.தக. : கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்த Friends of Police அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பாகும். இந்த அமைப்பின் நோக்கமே போலீசாரின் அதிகாரங்களை மக்களுக்கும் பங்கிட்டு கொடுப்பது தான். 1993-ம் ஆண்டு ராமநாதபுரம் எஸ்.பி.யாக இருந்த பிரதீப் வி.பிலிப் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பின்னர், 1994ல் தமிழகம் முழுவதும் விரிவடைந்தது.
  • மதுரையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டெடுக்கப்பட்டுள்ளது : மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே அமைந்துள்ள கிண்ணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏகநாதசுவாமி மடத்தில் இருந்த கல்தூண் ஒன்றில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கல்தூண் ஆண்டிப்பட்டி அருகே புலிமான் கோம்பையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல்லுக்கு இணையானது எனவும், கல் தூணில் இதுபோன்ற தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுவது மிக முக்கியமான கண்டுபிடிப்பு எனவும் தொல்லியல் அறிஞர்கள் தெரிவித்தனர். கல்தூணில் தமிழி எழுத்து என்பது அந்த காலகட்டத்தில் தமிழர்கள் பின்பற்றிய சமயம், பண்பாடு கட்டடக்கலை ஆகியவற்றை குறிப்பிடுவதாக உள்ளது. அதுமட்டுமன்றி கல்தூணில் உள்ள தமிழி எழுத்துக்களை ஏகன் ஆதன் கோட்டம் எனவும் கூறுகின்றனர். கோட்டம் என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் மட்டுமின்றி பிராமி வடிவில் கிடைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
  • கீழடி அகழாய்வில் எடை கற்கள் கண்டுபிடிப்பு : சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் 6 ம் கட்ட அகழாய்வில் 4-7-2020 அன்றூ எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, வணிகத்துக்கான ஆதாரமாக கருதப்படுகிறது.

இந்தியா

  • "விரிக்‌ஷாரோபன் திட்டம்- 2020” (‘Mission Vriksharopan-2020’) என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 25 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு 5-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • உலகிலேயே மிகப் பெரிய கரோனா சிகிச்சை மையமான சா்தால் படேல் கோவிட் கோ் சென்டரை ( Sardar Patel Covid Care Centre and Hospital (SPCCCH) ) தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் 5-7-2020 அன்று திறந்து வைத்தாா்.
    • தில்லியில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பு, தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள தங்களது தியானக் கூடத்தை தற்காலிக கரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்ற ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த தியானக் கூடம் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்ற்றப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் 200 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 50 படுக்கைகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீா், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பிரம்மாண்ட கரோனா சிகிச்சை மையத்தை இந்தோ திபேத் எல்லை போலீஸ் படை (Indo-Tibetan Border Police (ITBP) ) அமைத்துள்ளது.
  • "நிசர்கா புயல்" (Cyclonic Storm “NISARGA” ) - கிழக்கு மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் (01 – 04 ஜுன், 2020) நிலை கொண்டு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைத் தாக்கிய புயல்.
  • இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தை நிறுவியர் கிருஷ்ணா எல்லா ஒரு தமிழர்.  இவர் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அருகே நெமிலி என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, 'கோவாக்சின்' தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆக., 15ல் நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்யப்பட உள்ளது என, ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது.
    • இவரது பாரத் பயோடெக் நிறுவனம் தான், உலக அளவில் ஸிகா வைரசுக்கு முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. (நன்றி : தினமலர்)

பொருளாதாரம்

  • உலக வங்கியின் நாடுகள் மற்றும் கடன் குழுக்களில் வகைப்பாடு 2021 ல் இந்தியாவின் நிலை (India in World Bank Country and Lending Groups 2021)
    • 1 ஜீலை 2020 அன்று உலக வங்கி வெளியிட்டுள்ள மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருவாய் அடிப்படையிலான ( GNI per capita) உலக நாடுகளின் வகைப்பாட்டு பட்டியல் 2021 ல், இந்தியா கீழ் - நடுத்தர வருவாய் பொருளாதாரமாக (LOWER-MIDDLE INCOME ECONOMY) ( $1,036 முதல் $4,045 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita ) கொண்ட நாடுகள்) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதே வகைப்பாட்டில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
    • குறிப்பிடத்தக்க மாற்றமாக , நேபாளம் குறைந்த வருவாய் பொருளாதார நாடு என்ற நிலையிலிருந்து கீழ் - நடுத்தர வருவாய் பொருளாதாரமாக மாறியுள்ளது.
    • இலங்கை உயர் நடுத்தர வருவாய் நாடு அந்தஸ்திலிருந்து கீழ் நடுத்தர வருவாய் நாடாக இறங்கியுள்ளது.
கூ.தக. : உலக வங்கி நாடுகளின் பொருளாதார வகைப்பாட்டிற்கான அளவீடு (2019 ஆம் ஆண்டின் படி)
  • குறைந்த -வருவாய் பொருளாதாரம் (low-income economies) - $1,035 டாலருக்கு குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • கீழ் - நடுத்தர -வருவாய் பொருளாதாரம் (lower middle-income economies) - $1,036 முதல் $4,045 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • உயர்-நடுத்தர - வருவாய் பொருளாதாரம் ( upper middle-income economies) -$4,046 முதல் $12,535 டாலர் வரையிலான குறைவான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )
  • உயர்- வருவாய் பொருளாதாரம் ( upper income economies) - $12,535 டாலருக்கு அதிகமான மொத்த தேசிய வருமானம் சார் தனி நபர் வருமானம் (GNI per capita )

முக்கிய தினங்கள்

  • சர்வதேச கூட்டுறவு தினம் 2020 (International Day of Cooperatives) - ஜீலை 4 (ஜீலை மாதத்தின் முதல் சனிக்கிழமை) | மையக்கருத்து - பருவநிலை மாற்றத்திற்கான கூட்டுறவுகள் ( Cooperatives For Climate Action )

விளையாட்டுகள்

  • ”பிட் ஹே டு கிட் ஹே இந்தியா” (Fit Hai to Hit Hai India) என்ற பெயரில் ‘பிட் இந்தியா திட்டத்தின்’ கீழான பிரச்சாரத்தை மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜீ ஆகியோர் இணைந்து 3-7-2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், இந்த நோய்த்தொற்றுப் பரவல் காலத்தில் பள்ளி மாணவர்களிடையே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை உணரச் செய்வதாகும்.
  • ”டாப்ஸ்” (Target Olympic Podium Scheme (TOPS)) என்ற பெயரில் 2024 ஆம் ஆண்டில் பாரிஸில் நடைபெறவுள்ள மற்றும் 2028 ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்தியாவின் இளம் தடகள வீரர்களைப் பயிற்றுவிப்பதற்கான திட்டத்தை தொடங்கவுள்ளதாக மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சக இணையமைச்சர் கிரண் ரிஜீ (Kiren Rijiju) தெரிவித்துள்ளார்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!