நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 09 August 2020

Current Affairs  for TNPSC Exams 9-8-2020 

இந்தியா

  • ☛ இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் கரோனா தடுப்பு மருந்துகளை ரூ.225-க்கு (3 அமெரிக்க டாலர்) வழங்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், கரோனா தடுப்பு மருந்துக் கண்டுபிடிப்பில் முன்னணியில் இருந்துவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவில் மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் கிளினிக்கல் பரிசோதனை 2-வது மற்றும் 3-வது கட்ட ப் பரிசோதனைகயை விரைவில் தொடங்க உள்ளது.
  • ☛ தூய்மையான பாரதம் குறித்து ஒருவார காலத்துக்கான ”கடாங்கி முக்த் பாரத்” (Gandagi Mukt Bharat) என்ற தூய்மை பிரச்சாரத்தை பிரதமர் 8-8-2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரம் 2020 ஆம் ஆண்டின்   சுதந்திர தினம் (15-8-2020)  வரை  செயல்படும்
  • ☛ ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை (Rashtriya Swachhata Kendra)  என்ற பெயரில், தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையத்தை  புதுடெல்லி ராஜ்காட்டில் காந்தி ஸ்மிர்தி மற்றும்  தரிசன சமிதியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 8-9-2020   அன்று தொடங்கி வைத்தார். மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் வகையில் இதற்கான திட்டத்தை , காந்திஜியின் சம்பரண் சத்யாகிரகத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது , 2017 ஏப்ரல் 10 ஆம் தேதி பிரதமர் திரு. மோடி இதை அறிவித்திருந்தார்.  
ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திரா (Rashtriya Swachhata Kendra) ஒரு பார்வை
ஆர்.எஸ்.கே. எனப்படும் இந்த மையத்தில் தூய்மையான பாரதம் திட்டத்தின் பல நிலைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. 2014ஆம் ஆண்டில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தும் நிலையில் இருந்து யாருமே திறந்தவெளிக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற நிலையை 2019இல் எட்டியது வரையிலான மாற்றங்கள் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.  மகாத்மா காந்தி தலைமையில் தூய்மை உறுதி மொழி ஏற்றல், ஜார்க்கண்ட் கிராமப்புற ராணி மிஸ்ட்ரிகள், தூய்மையான பாரதம் திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழந்தைகளைக் குறிக்கும் வகையில் 3 காட்சி அரங்குகள் அங்கே அமைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நிகழ்வுகள்

  • ☛ இந்தியாவைத் தொடா்ந்து அமெரிக்காவிலும் சீன நிறுவனங்களின் டிக்-டாக், விசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

  • ☛ டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விருது  2020 (Dr. M.S. Swaminathan Award  for  Environmental Protection 2020)   ஆர்.எஸ். பரோடா (R.S. Paroda)  விற்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுண்சிலின் (Indian Council for Agricultural Research)  முன்னாள் இயக்குநராராவர்.  

முக்கிய தினங்கள்

  • ☛ வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் (Quit India movement)  78 வது ஆண்டு விழா ஆகஸ்ட் 8, 2020 அன்று அனுசரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 8, 1942 அன்று, மும்பையில் நடந்த  இந்திய  தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது  மகாத்மா காந்தி வெளியேறு இயக்கத்தை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
  • ☛ உலக பழங்குடியினர் தினம் (World Tribal Day) (அல்லது) சர்வதேச பழங்குடி மக்கள் தினம் (International Day of the World’s Indigenous Peoples)  - ஆகஸ்டு 9 | மையக்கருத்து 2020 - : கோவிட்-19 மற்றும் பழங்குடியின மக்களின் எதிர்கொள்ளும் திறன் ( COVID-19 and indigenous people resilience)
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!