TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

New Test Batch Admission Going On
Download Test Schedule / Join

TNPSC Current Affairs 11 August 2020

Current Affairs for TNPSC Exams 11-08-2020

இந்தியா

☛  இந்திய இரயில்வேயின் “தூய்மை வாரம்” (‘Cleanliness Week’) 10 - 15 ஆகஸ்டு 2020 தினங்களில் அனுசரிக்கப்படுகிறது.
☛ தென் மேற்கு இரயில்வேயின் இரண்டாவது இரயில்வே மியூசியம் (railway museum) கர்நாடகாவின் ஹப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே, கர்நாடகா மாநிலத்தின் மைசூரில் ஒரு இரயில் மியூசியம் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
☛ நாட்டிலேயே முதல் முறையாக கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டத்தின் மூலம் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு அதிவேக இணையதள வசதி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி10-8-2020 அன்று காணொலி வாயிலாகத் தேசத்துக்கு அர்ப்பணித்தார்.
o சென்னையிலிருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு ரூ.1,224 கோடி மதிப்பில் கண்ணாடி இழை கேபிள்கள் பதிக்கும் திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கடலுக்குள் 2,312 கி.மீ. தொலைவில் அந்தத் திட்டம் நிறைவடைந்ததையடுத்து தற்போது பயன்பாட்டிற்உ வந்துள்ளது.
o இந்தத் திட்டத்துக்காக பிஎஸ்என்எல் நிறுவனம் வழக்கத்தைவிட 10 மடங்கு வேகமான 100 எம்பிஎஸ் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது. இதன் மூலம் 20 மடங்கு அதிகமாக டேட்டாக்களைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
o இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்வராஜ் தீப், லாங் தீவு, ராங்கத், லிட்டில் அந்தமான், கமரோட்டா, கார் நிகோபர், கிரேட்டர் நிகோபர் ஆகிய தீவுகளுக்கு இணையதள வசதி கிடைக்கும். வினாடிக்கு 400 ஜிகாபைட் அளவு வேகத்தில் போர்ட் ப்ளேயரிலும், மற்ற பகுதிகளில் 200 ஜிகா பைட் அளவு வேகத்திலும் இணையதள வசதி கிடைக்கும்''.

சர்வதேச நிகழ்வுகள்

☛ லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று, அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

விருதுகள்

☛  ”ஃபுட் விஷன் பரிசு 2020” (Food Vision 2050 Prize) பெறும் 10 இலட்சிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக ஹைதராபாத்திலுள்ள ”நாந்தி பவுண்டேசன்” (Naandi Foundation) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொண்டு நிறுவனம் மகேந்திரா வாகன நிறுவனத்தின் ஆனந்த் மகேந்திராவின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பவுண்டேசன் (Rockefeller Foundation) மூலம் இந்த பரிசு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசின் மதிப்பு 200,000 டாலர் ஆகும்.

முக்கிய தினங்கள்

☛  உலக உயிரி எரிபொருள் தினம் (World Biofuel Day) - ஆகஸ்டு 10
☛  75வது நாகஷாகி தினம் (Nagasaki Day) - ஆகஸ்டு 9 (9-8-1945 அன்று அமெரிக்கா ஜப்பானின் நாகஷாகி நகரின் மீது “குண்டு மனிதன் (“Fat Man”) என்ற பெயரிலான அணுகுண்டை வீசி 74000 மக்கள் பலியான நிகழ்வின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.)

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email:

Post Bottom ads