TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

New Test Batch Admission Going On
Download Test Schedule / Join

TNPSC Current Affairs 12 August 2020

 Current Affairs for TNPSC Exams 12-8-2020

இந்தியா

☛  மத்திய ஜவுளித் துறையின் கீழிருந்த “பஞ்சு ஆலோசனை வாரியம்” (Cotton Advisory Board (CAB)) 10-8-2020 அன்று ஒழிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் “குறைந்தபட்ச அரசு மற்றும் அதிகபட்ச ஆளுகை” (Minimum Government and Maximum Governance) என்ற கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் , முன்னதாக இந்த வாரியத்தின் கீழ் இயங்கிய எட்டு ஜவுளி ஆராய்ச்சி சங்கங்களும் (Textiles Research Associations) இனிமேல் மத்திய ஜவுளித் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கவுள்ளன.
☛  தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் திறந்த வெளி கழிப்பறையற்ற நிலை (Open defecation-free (ODF)) அனைத்து கிராமங்கள், மாவட்டங்கள் மாநிலங்களிலும் 2 அக்டோபர் 2019 அன்று எய்தப்பட்டது.
☛  பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவைப் போற்றும் 9 அருங்காட்சியங்கள் ( tribal freedom fighters museums) 2022 ஆம் ஆண்டிற்குள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அருங்காட்சியகங்களில் மிகப் பெரியது குஜராத்தின் ராஜ்பிப்லாவில் ரூ .102.55 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதர அருங்காட்சியங்கள் ராஞ்சி (ஜார்க்கண்ட்) , லம்பசிங்கி (ஆந்திரா), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), கோழிக்கோடு (கேரளா), சிந்த்வாரா (மத்தியப் பிரதேசம்), ஹைதராபாத் (தெலுங்கானா), சேனாபதி (மணிப்பூர்) மற்றும் கெல்சி (மிஷோராம்) ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ளன.
☛  குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு 11-8-2020 அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.
பின்னணி :
o 1956-ல் ‘இந்து வாரிசு உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தம் ( Hindu Succession (Amendment) Act, 2005) செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 25.3.1989-க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர உரிமை உண்டு. எனினும் சொத்து பாகப்பிரிவினை 25.3.1989-க்கு முன்பு செய்யப்பட்டிருந்தால் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டது.
o இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், ‘இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால் பெண்கள் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
o இதற்கிடையே டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தநிலையில் 11-8-2020 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு வழங்கினர். ஒரு இந்து குடும்பத்தில், அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை இந்து வாரிசு உரிமை சட்டம்-2005 திருத்தத்துக்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு , ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

☛  ”ஸ்புட்னிக் V" (‘Sputnik V’) என்ற பெயரில் நாவல் கரோனா வைரஸுக்கு (COVID-19) எதிரான தடுப்புசிக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்கிய உலகின் முதல் நாடாக ரஷ்யா உருவாகியுள்ளது. இந்த தடுப்பூசியை மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் (Gamaleya Institute) தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
o கூ.தக. :”ஸ்புட்னிக்" என்பது ரஷியாவினால் 1957 ஆம் ஆண்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட உலகின் முதல் செயற்கைக் கோளாகும்.
☛  இந்தோனேசியாவின் மவுண்ட் சினாபுங் எரிமலை ( Mount Sinabung volcano ) 10-8-2020 அன்று வெடித்தது.
கூ.தக. : எரிமலைகள் எவ்வாறு வெடிக்கின்றன?
o ஒரு எரிமலை செயலில், செயலற்ற அல்லது அழிந்துபோகும். பூமியின் கவசம் உருகும்போது உருவாகும் மாக்மா (அடர்த்தியான பாயும் பொருள்) உயரும்போது ஒரு வெடிப்பு நிகழ்கிறது. மாக்மா திடமான பாறையை விட இலகுவானதாக இருப்பதால், அது பூமியின் மேற்பரப்பில் உள்ள துவாரங்கள் மற்றும் பிளவுகளின் மூலம் உயர முடியும். அது வெடித்த பிறகு, அது எரிமலை என்று அழைக்கப்படுகிறது.
o அனைத்து எரிமலை வெடிப்புகளும் வெடிக்கும் தன்மை கொண்டவை அல்ல, ஏனெனில் வெடிப்பு என்பது மாக்மாவின் கலவையைப் பொறுத்தது.
☛   கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தொடா்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

முக்கிய தினங்கள்

☛   சுய சார்பு இந்தியா வாரம் ( Atma Nirbhar Week ) 2020 7-14 ஆகஸ்டு 2020 தினங்களில் அனுசரிக்கப்படுகிறது.
☛   சர்வதேச இளைஞர் தினம் (International Youth Day) - ஆகஸ்ட் 12 | மையக்கருத்து - “உலகளாவிய நடவடிக்கைக்கான இளைஞர் ஈடுபாடு” (Youth Engagement for Global Action)
☛   உலக யானைகள் தினம் (World Elephant Day) - ஆகஸ்டு 12
☛   உலக சிங்கங்கள் தினம் (World Lion Day) - ஆகஸ்டு 10

அறிவியல் & தொழில்நுட்பம்

☛   ஆர்டீசியா இனத்தைச் சார்ந்த “ஆர்டிசியா ராமசாமி” (“Ardisia ramaswamii” ) என்ற புதிய தாவர இனத்தை , தமிழ்நாட்டின் அனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அக்கமலை காடு எனுமிடத்தில், கேரளாவின் பாலோடிலுள்ள ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute (JNTBGRI)) ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 5 மீட்டர் வரையில் வளரும் இந்த “ஆர்டிசியா ராமசாமி” (“Ardisia ramaswamii” ) தாவரத்தின் குடும்பம்: ப்ரிமுலேசி(Primulaceae), பேரினம்: ஆர்டிசியா ( Ardisia) ஆகும்.
o கூ.தக. : 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாவரவியலாளர் எம்.எஸ்.ராமஸ்வாமி (M.S. Ramaswami) யின் பெயர் இந்த தாவரத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

☛   ‘Connecting, Communicating, Changing’ என்ற பெயரில், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் மூன்றாண்டு பதவி நிறைவை அனுசரிப்பதற்கான புத்தகத்தின் மின் பதிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.
☛   ”Our Only Home: A Climate Appeal to the World” என்ற பெயரில் காலநிலை மாற்றம் பற்றிய புத்தகத்தை தலாய் லாமா (Dalai Lama) மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஊடகவியலாளர் ’ஃபிரான்ஸ் ஆல்ட்” (Franz Alt) ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email:

Post Bottom ads