TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

New Test Batch Admission Going On
Download Test Schedule / Join

TNPSC Current Affairs 13 August 2020

Current Affairs for TNPSC Exams 13-8-2020

தமிழ்நாடு

☛  மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படும் சிறந்த புலனாய்வு பணிக்கான விருது 2020ல் தமிழக காவல்துறையை சேர்ந்த 6 பேர் இடம்பெற்று உள்ளனர். அவர்களின் பெயர்கள் மற்றும் விருது பெற்ற போது பணிபுரிந்த காவல்நிலையங்களின் விவரம் வருமாறு:-
o ஜான்சிராணி - இவர், ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி போலீஸ் நிலையத்தில் மகளிர் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
o கவிதா - இவர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆவார்.
o பொன்னம்மாள் - இவர், நீலகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் இன்ஸ்பெக்டராக பணி செய்கிறார்.
o சந்திரகலா - இவர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ளார்.
o வினோத்குமார் - இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
o கலா - இவர், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

இந்தியா

☛  தூய்மை இந்தியா இயக்க அகாடமியை (Swachh Bharat Mission(SBM) Academy) ஜல் சக்தி துறைக்கான மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் (Gajendra Singh Shekhawat) புது தில்லியில் தொடங்கி வைத்தார். கண்டகி முக்தபாரத் (‘GandagiMukt Bharat’) என்ற ஒரு வார கால இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து இந்த எஸ் பி எம் அகாடமியை அமைச்சர் தொடங்கி வைத்தார். ஸ்வச்சாக்கிரஹிக்கள் இதர களப்பணியாளர்கள், அனைத்து பங்குதாரர்களின் திறன் மேம்பாட்டுக்காகவும், நடவடிக்கை மாறுதல்களைத் தொடர்வதற்காகவும் அலைபேசி இணைய வழி கற்றல் மூலம் இந்த வகுப்புகள் நடைபெறும். ஓ டி எஃப் பிளஸ் பற்றி பாடங்கள் நடைபெறும். எஸ் பி எம் (ஜி) இரண்டாம் கட்டக் குறிக்கோள்களை அடைவதற்கு இவை முக்கிய பங்காற்றும்.
☛  புதிய கல்விக்கொள்கையின்படி, ஒரு பல்கலைக்கழகம் 300 கல்லூரிகளுக்கும் அதிகமாக இணைக்க முடியாது. மாறாக கல்லூரிகளுக்கு அதிகமாக சுயாட்சி அந்தஸ்துகளை வழங்கலாம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது 45 ஆயிரம் கல்லூரிகள் இருக்கின்றன, இதில் 8ஆயிரம் கல்லூரிகள் மட்டுமே தன்னாட்சி பெற்றவை.
☛  நாட்டின் பாதுகாப்பு தொடா்பான விவரங்கள் கசிந்த விவகாரத்தில் தவறாகக் கைது செய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்கியது.
☛  மின்கலன்கள் (பேட்டரிகள்) பொருத்தாத மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்கும், அவற்றைப் பதிவு செய்வதற்கும் அனுமதியளிக்கபடுவதாக மத்திய அரசு 12-8-2020 அன்று அறிவித்துள்ளது . மின்சார வாகனத்துக்கான மொத்த விலையில் 30 முதல் 40 சதவீதம் அளவு மின்கலன்களுக்கானதாக உள்ளது. எனவே, தற்போதைய அறிவிப்பினால் மின்சார வாகனங்களின் விலை குறையும் என்பதுடன், நாடு முழுவதும் அந்த வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் தெரிகிறது. இதன் மூலம், மின்கலன்களை பொருத்தாமல் மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்கும், அதைப் பதிவு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட வாகனத்தை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மின்கலன்களை தனியே வழங்கலாம்.மின்சார வாகன பதிவின்போது அதில் பொருத்தப்படும் மின்கலன்கள் குறித்த எந்தவொரு தகவலையும் குறிப்பிட வேண்டியதில்லை.
☛  இந்தியாவின் முதல் தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace), தனது முதல் மேல் நிலை ராக்கெட் எஞ்சின் (Upper Stage Rocket Engine) "ராமன்" (“Raman”) ஐ வெற்றிகரமாக 8-8-2020 அன்று பரிசோதித்துள்ளது . இந்த ராக்கெட் எஞ்சினுக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
☛  COVID-19 தடுப்பூசி கொள்முதல், நிர்வாகத்திற்கான தேசிய அளவிலான வல்லுநர் குழுவை (National Expert Group on Vaccine Administration) நிதி அயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் (Dr VK Paul ) தலைமையில் 11-8-2020 மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்து மாநில அரசுகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல், தளவாடங்கள், கொள்முதலுக்கான நெறிமுறைகளை வகுத்தல் மற்றும் COVID-19 தடுப்பூசியை நிர்வகித்தல் போன்ற நடவடிக்கைகளில் இந்த குழு ஈடுபடும்.

வெளிநாட்டு உறவுகள்

☛  COVID 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கூட்டுறவு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட , ‘அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் உயர்நிலை உபகரணங்களை’ புதுடெல்லி எய்ம்ஸ் (AIIMS, New Delhi) மருத்துவமனையுடன் பகிர்ந்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

☛   உலகின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்காவைத் தாண்டிய சீனா : பார்ச்சூன் இதழ் ஆகஸ்டு 10ஆம் நாள் வெளியிட்ட உலகத்தின் மிகப் பெரிய 500 தொழில் நிறுவனங்களின் பெயர் பட்டியலில், 133 சீனத் தொழில் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்க்கப்பட்ட சீனப் பெருநிலப்பகுதியின் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 124 ஆகும். அமெரிக்காவின் 121 தொழில் நிறுவனங்கள் இப்பட்டியலில் உள்ளன.
☛   அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கலிபோர்னியாவின் செனட்டராகவுள்ள கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும்நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ எதிர்த்து ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது.
o இதன் மூலம், அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் போட்டியிடும் கருப்பினத்தைச் சோ்ந்த முதல் பெண் வேட்பாளா் எனும் பெருமையையும், ஒட்டுமொத்தத்தில் துணை அதிபா் தோ்தலில் போட்டியிடும் மூன்றாவது பெண் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.
o இவர், ‘கலிபோர்னியாவின் அரசு தலைமை வக்கீலாக தேர்வு செய்யப்பட்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்’, அமெரிக்க செனட் சபைக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த பெண் என்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.
o 55 வயதான கமலா ஹாரிசின் தந்தை டெனால்டு ஹாரிஸ் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜமைக்காவைச் சேர்ந்தவர்; இந்தியரான அவரது தாய் சியாமளா கோபாலன் ஹாரிஸ் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு கிராமத்தை சேர்ந்தவர்கள்.
கூ.தக. : கமலா ஹாரிஸ் கடந்த 2019-ம் ஆண்டில் ட்ரூஸ் வி ஹோல்டு (Trues We Hold) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

நியமனங்கள்

☛  சர்வதேச பொருளாதார உறவுகள் தொடர்பான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் ( Indian Council for Research on International Economic Relations(ICRIER)) புதிய தலைவராக பிரமோத் பாசின் (Pramod Bhasin) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

☛   சர்வதேச உடல் உறுப்பு தான தினம் (World Organ Donation Day) - ஆகஸ்டு 13
கூ.தக. :
o உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
o இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் ((TRANSTAN) என்ற முன்னோடி அமைப்பு 12.12.2014 அன்று உருவாக்கப்பட்டது.

1 comment:

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email:

Post Bottom ads