நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 14,15 August 2020

Today's Current Affairs for TNPSC Exams 14,15-8-2020

தமிழ்நாடு

☛  மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல்தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
☛  2020-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் பெற்றோர் விவரம் வருமாறு,
o 1. ஜி.நாகஜோதி காவல் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்
o 2. இரா.குமரேசன், காவல் துணை கண்காணிப்பாளர், 'கியூ' பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை
o 3. தி.சரவணன், காவல் உதவி ஆணையர், வடக்கு சரகம் (குற்றம்), சேலம் மாநகரம்
o 4. எஸ்.கே.துரை பாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர், காட்பாடி உட்கோட்டம், வேலூர் மாவட்டம்
o 5. ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ், காவல் ஆய்வாளர், ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, திருச்சி மாநகரம்
o 6. பி.எஸ்.சித்ரா, காவல் ஆய்வாளர், மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் , திருச்சி மாநகரம்
o 7. கா. நீலாதேவி, காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம், சிவகங்கை மாவட்டம்
o 8. ச.பச்சையம்மாள், காவல் ஆய்வாளர், அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலையம், இருப்புப்பாதை காவல் சென்னை
o 9. ப.உலகராணி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, திருநெல்வேலி
o 10. பி.விஜயலட்சுமி, காவல் ஆய்வாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு, திருநெல்வேலி
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.
☛  2020 ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தையொட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
o 1. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐபிஎஸ், கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில்நுட்பப் பணிகள், சென்னை, முன்னாள் காவல் ஆணையர், மதுரை மாநகரம்
o 2. கி.சங்கர், ஐபிஎஸ், காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை
o 3. ச.சரவணன், காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்
o 4. ச.தீபா கணிகர், ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்
o 5. பி.ஜெகன்நாத், தலைமை காவலர் 19917, வேலைவாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்
☛  அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  14-8-2020 அன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதன் முறையாக கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான  இந்த முன்னொடி திட்டத்தின் படி, நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் 2 ஆயிரத்து 500  ரூபாய் செலுத்தினால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி, மருந்துகள், 14 முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினி அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப்படும். இவற்றை பயன்படுத்தி அறிகுறி உள்ளவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

☛  முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பெயரில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ரூ. 200 கோடி மதிப்பில் மருத்துவ பல்கலைக்கழகம் (Atal Bihari Vajpayee Medical University (ABVMU)) உத்தரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
☛  ‘கர்மா சாதி பிரகல்பா’ (‘Karma Sathi Prakalpa’) எனும் பெயரில் 1 லட்சம் வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கான கடன் மற்றும் மானியங்கள் வழங்கும் திட்டத்தை மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
☛  ” கடற்படை கண்டுபிடிப்பு மற்றும் சுதேசமயமாக்கல் நிறுவனம்” (Naval Innovation and Indigenization Organization (NIIO)) என்னும் புதிய அமைப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் 14-8-2020 அன்று தொடங்கி வைத்தார்.
☛  ”சர்தாக்” (Indian Coast Guard Ship ‘Sarthak’) என்ற பெயரில் இந்திய கடலோர காவல்படைக்கான புதிய ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel (OPV) ) கோவாவில் நாட்டிற்கு 13-8-2020 அன்று அற்பணிக்கப்பட்டுள்ளது.
☛  கோவாவின் ஹார்மல் மிளகாய் (Harmal Chillies) ,மொய்ரா வாழைப்பழங்கள் ( Moira bananas) மற்றும் காஜே ( Khaje ) பாரம்பரிய இனிப்பு ஆகியவற்றிற்கு புவியியல் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

☛ இந்தியாவில் நீண்டாக காலம் பிரதமராக இருந்தவர்களில் 4-வது இடத்தையும், காங்கிரஸ் அல்லாத பிரதமர்களில் நீண்டகாலம் காலம் பிரதமராக இருந்தவர்களில் முதலிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமே நீண்டகாலம் காங்கிரஸ் அல்லாத பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை வைத்திருந்தார். வாஜ்பாய் 2,272 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார், அவரின் சாதனையை பிரதமர் மோடி 13-8-2020 அன்று முறியடித்தார்.
☛  ”அம்ருட்” (AMRUT) எனப்படும் புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (Atal Mission for Rejuvenation and Urban Transformation (AMRUT) ) திட்டத்தை செயல்படுத்துவதில் ஒடிசா மாநிலம் முதலிடத்தை தக்க வைத்துத்துள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றூம் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே சண்டிகர் மற்றும் தெலுங்கானா அரசுகள் பெற்றுள்ளன.
கூ.தக. :
o அம்ருத் (AMRUT) என அழைக்கப்படும் நகர மேம்பாட்டுத் திட்டத்தை (Atal Mission for Rejuvenation and Urban Transformation) 25.06.2015 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
o இத்திட்டத்தின் கீழ், குடிநீர் சப்ளை, மழை நீர் வடிகால்வாய் வசதி, பாதாள சாக்கடை வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து வசதி, ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது.
o திட்ட மொத்த மதிப்பீட்டில், 50 சதவீதத்தை, மத்திய அரசு வழங்கும்; மாநில அரசு, 50 சதவீதம் வழங்கும்.
o தமிழகத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 12 மாநகராட்சிகள்; அம்ருட் திட்டத்தின் கீழ், 20 நகராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

☛  இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கிடையே விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் 13-8-2020 அன்று செய்துகொள்ளப்பட்டது.
☛  லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் 4-8-2020 அன்று நடைபெற்ற வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா 58 டன் அவசர மனிதாபிமான நிவாரண உதவிகளை விமானப்படை விமானத்தில் லெபனானுக்கு அனுப்பியுள்ளது.
☛ மாலத்தீவில் ‘கிரேட்டர் மாலே கனெக்ட்டிவிட்டி புராஜெக்ட்’   என்ற பெயரிலான மிகப்பெரிய பாலம் மற்றும் 3 தீவுகளை இணைக்கும் திட்டத்திற்கு ரூ.3,745 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் 6.7 கி.மீ. தூரத்துக்கு பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தால் வில்லின்கிலி, கலிபஹு, திலபுஷி ஆகிய குட்டித் தீவுகள் மாலேவுடன் இணைக்கப்படும். இவற்றில் கலிபஹு தீவில் உள்ள துறைமுகத்துடன் மாலே இணைக்கப்படுவது மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

☛  காஷ்மீா் பிரிவினைவாதத் தலைவா் சையத் அலி ஷா கிலானிக்கு(90), பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் உயரிய விருதான”நிஷான்-ஏ-பாகிஸ்தான்” விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
☛  ”ஆர்ரோவ்-2” (Arrow-2 ) என்ற பெயரில் பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பை ஏவுகணையை இஸ்ரேல் நாடு வெற்றிகரமாக சோதித்துள்ளது.
☛ இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜ்ஜீய ஒப்பந்தம் ஏற்பட்டதாக 13-8-2020 அன்று  அறிவிக்கப்பட்டது.இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்

☛  இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியம் (Board of the Reserve Bank of India (RBI)) 2019-2020 ஆம் ஆண்டின் கணக்கீட்டு ஆண்டுக்கு, 57,128 கோடி உபரி நிதியை மத்திய அரசிற்கு வழங்கும் முடிவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
o கூ.தக. : கடந்த 2018-2019 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி 76 1.76 லட்சம் கோடி உபரி நிதியை மத்திய அரசிற்கு வழங்கியது , இதில்1.23 லட்சம் கோடி ஈவுத்தொகையாகவும், 52,637 கோடி கூடுதல் ஒதுக்கீடாகவும் வழங்கப்பட்டது.

விருதுகள்

☛   இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான (President’s Police Medal for Distinguished Service) காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையின் அலுவலர்கள் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளன.அவர்களின் பெயர் பின்வருமாறு:
o (1) ஆண்டனி ஜான்சன் ஜெயபால், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல் 2ஆம் அணி, ஆவடி.
o (2) ரவிசந்திரன், தளவாய், தமிழ்நாடு சிறப்புக்காவல்.

முக்கிய தினங்கள்

☛  சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம் ( International Left handers ) - ஆகஸ்டு 13

அறிவியல் & தொழில்நுட்பம்

☛  ஒமேகா சென்டாரி கிளஸ்டரில் (Omega Centauri cluster) ஹீலியம் அதிக அளவு ஹீலியம் கொண்ட ஒளிரும் சில நட்சத்திரங்களை இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் (Indian Institute of Astrophysics (IIA) ) விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
o கூ.தக. இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Indian Institute of Astrophysics (IIA) இன் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது.
☛   ”டெஸ்” (TESS -Transiting Exoplanets Survey Satellite) எனப்படும் நாசாவின் (NASA) புறக்கோள்கள் ( exoplanets) ஆராய்ச்சி செயற்கைக்கோள் புதிதாக 66 புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. ஜூலை 4, 2020 இல் முடிவடைந்த அதன் முதற்கட்ட ஆய்வுப் பணியின் போது வானத்தின் 75 சதவீத விண்மீன்களை ஸ்கேன் செய்தது. இதன் மொத்த ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 2022 இல் முடிவடையும்.
☛   நிலவின் “சாராபாய்” பள்ளம் (“Sarabhai” Crater) : சந்திராயான் -2 ன் ஆர்பிட்டர் (Chandrayaan 2 Orbiter) சந்திரனின் “சாராபாய்” பள்ளத்தின் (“Sarabhai” Crater) புகைப்படத்தை எடுத்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இஸ்ரோ ஆதாரங்களின்படி, 3 டி படங்களில் கைப்பற்றப்பட்ட சாராபாய் பள்ளம் அதன் உயரமான விளிம்பிலிருந்து எடுக்கப்பட்ட பள்ளம் சுமார் 1.7 கி.மீ ஆழத்தில் இருப்பதையும், பள்ளம் சுவர்களின் சாய்வு 25 முதல் 35 டிகிரி வரை இருப்பதையும் காட்டுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் பிறந்த தின நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவாக (ஆகஸ்டு 12) அவருடைய பெயர் சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பள்ளத்திற்கு சூட்டப்ப்ட்டுள்ளது. இந்த பள்ளத்திற்கு கிழக்கே 250 முதல் 300 கிலோமீட்டர் தொலைவில் தான், அமெரிக்காவின் அப்பல்லோ 17 மற்றும் ரஷியாவின் லூனா 21 பயணங்கள் தரையிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!