நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 22 August 2020

Today's Current Affairs for TNPSC Exams 22-8-2020 
தமிழ்நாடு
☛ தவில் வித்வான் அடையாறு ஜி.சிலம்பரசனுக்கு ‘இந்தியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ சார்பில் உலக சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கர்னாடக இசையின் அங்கமான 108 தாளங்களையும் எப்படி கையாளவேண்டும் என்பதை காணொலியில் ஆவணப்படுத்தியதற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
☛ தேசிய நல்லாசிரியர் விருது 2020 க்கு தமிழகத்தில் இருந்து சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவரும் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
☛ தமிழ்நாடு போலீஸ் அகாடமி , போலீஸ் அகாடமி இயக்குனர் அந்தஸ்த்துடன் தனி அமைப்பாக செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அகாடமியின் திட்ட அதிகாரி இனி போலீஸ் அகடாமியின் இயக்குனர் என்று அழைக்கப்படுவார். தற்போது கூடுதல் டிஜிபி அந்தஸ்த்தில் அதிகாரி உள்ளார். அவர் இனி இயக்குனர் போலீஸ் அகாடமி என அழைக்கப்படுவார். இதன் முதல் இயக்குனர் என்ற பெருமையை கூடுதல் டிஜிபி அம்ரேஷ் புஜாரி பெறுகிறார்.
o கடந்த 2008-ம் ஆண்டு போலீஸ் அகாடமி உருவாக்கப்பட்டது. எஸ்.எஸ்.ஐ யிலிருந்து உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வுக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கான 9 வார பயிற்சியும், நேரடி உதவி ஆய்வாளர்களாக தேர்வானவர்களுக்கான ஓராண்டு பயிற்சியும், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் (கேட்டகிரி-1) டிஎஸ்பிக்களுக்கான ஓராண்டு பயிற்சியும், ஐபிஎஸ் தேர்வு முடிந்து தமிழக கேடர்களாக வருபவர்களுக்கான தமிழக ஏஎஸ்பிக்களாக நியமிக்கப்படும் முன் 5 வாரகால முன்பயிற்சி அனைத்தும் ஊனமஞ்சேரியில் உள்ள போலீஸ் அகடாமியில் அளிக்கப்படுகிறது.
இந்தியா
☛ தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் வளா்ப்பை கண்காணிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் (National Highways Authority of India (NHAI) ) ”பசுமைப் பாதை” (Harit Path) என்ற செயலி 21-8-2020 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
☛  இந்திய இளைஞர்களுக்கு அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் வேலைவாய்ப்புத்திறனை வழங்குவதற்கான இலவச டிஜிட்டல் கல்வி தளத்தை உருவாக்குவதற்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (National Skill Development Corporation(NSDC) ) ஐபிஎம் நிறுவனம் (IBM (International Business Machines Corporation)) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் eSkill India போர்ட்டல் வழியாக நடத்தப்படும்.
☛ கொரோனா ஃபைட்டர்ஸ் (Corona Fighters) என்ற பெயரிலான வீடியோ கேமை கோவிட்-19 நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
☛ இந்தியாவில் முதல் மாநிலமாக , மத்திய அரசினால் புதிதாக தொடங்கப்படவுள்ள ”தேசிய பணியாளா் தோ்வு முகமை” (National Recruitment Agency (NRA)) நடத்தும் , பொது தகுதித் தேர்வின் ( Common eligibility test (CET) ) மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலைகளை வழங்க போவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
☛ உத்தரபிரதேசத்தின் பண்டேல்கண்ட் பகுதியில் நீர்வள மேலாண்மையை மேம்படுத்துவதாக அம்மாநில அரசு இஸ்ரேல் நாட்டின் நீர்வள அமைச்சகத்துடன் இரண்டு ஆண்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
☛ கொச்சி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களிலிருந்து மாலத்தீவு நாட்டிற்கு நேரடி சரக்கு படகு சேவை செப்டம்பர் 2020 முதல் தொடங்கவுள்ளது .
சர்வதேச நிகழ்வுகள்
☛ துருக்கியின் கருங்கடலில் பெரிய அளவில் இயற்கை எரிவாயு இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் எர்டோகன் 21-8-2020 அன்று அறிவித்துள்ளார். துருக்கியின் துளையிடும் கப்பலான பாத்திஹ், சுமார் 3200 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்துள்ளது.இந்த இயற்கை எரிவாயு 2023-ம் ஆண்டு பொது பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
விருதுகள்
☛ 2020 ஆம் ஆண்டு சுதந்திரதின ஆன்லைன் குறும்படப் போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் :
o 1 அபிஜித் பால் ஆம் ஐ? (Am I?) முதல் பரிசு
o 2 தெபோஜோ சஞ்சீவ் அப் இந்தியா பனேகா பாரத் (Ab India Banega Bharat) 2வது பரிசு
o 3 யுவராஜ் கோகுல் 10 ரூபாய் (10 Rupees) 3வது பரிசு
☛  தேசிய விளையாட்டுத்துறை விருதுகள் 2020 விவரம் :
கேல்ரத்னா விருது 2020 :
o 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு , கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகிய 5 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னாவுக்கு ஒரே நேரத்தில் 5 போ் பெயா் பரிந்துரைக்கப்பட்டதும், அவா்கள் அனைவருக்கும் இந்த விருது வழங்கப்படுவதும் இதுவே முதல் முறையாகும்.
அா்ஜுனா விருது 2020:
o அா்ஜுனா விருதைப் பொருத்தவரை, வில் வித்தை வீரா் அதானு தாஸ், தடகள வீராங்கனை டுடீ சந்த், பாட்மிண்டன் வீரா்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராஜ் சந்திரசேகா் ஷெட்டி, கூடைப்பந்து வீரா் விஷேஷ் பிருகுவன்ஷி, குத்துச்சண்டை வீரா் சுபேதாா் மணீஷ் கெளஷிக், குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா போா்கோஹெய்ன், கிரிக்கெட் வீரா் இஷாந்த் ஷா்மா, கிரிக்கெட் வீராங்கணை தீப்தி ஷா்மா, குதிரையேற்ற வீரா் சாவந்த் அஜய் ஆனந்த், கால்பந்து வீரா் சந்தேஷ் ஜிங்கன், கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், ஹாக்கி வீரா் அகாஷ்தீப் சிங், ஹாக்கி வீராங்கனை தீபிகா, கபடி வீரா் தீபக், கோ-கோ வீரா் காலே சரிகா சுதாகா், படகுப் போட்டி வீரா் தத்து பாபன் போகனல், துப்பாக்கிச் சுடும் வீராங்கனை மானு பாகொ், துப்பாக்கி சுடுதல் வீரா் செளரவ் செளத்ரி, டேபிள் டென்னில் வீராங்கனை மதுரிகா சுஹாஸ் பட்கா், டென்னிஸ் வீரா் திவிஜ் ஷரன், குளிா்கால விளையாட்டு வீரா் சிவ கேசவன், மல்யுத்த வீராங்கனை திவ்யா காக்ரன், மல்யுத்த வீரா் ராகுல் ஆவாரே, மாற்றுத்திறனாளி பிரிவு நீச்சல் வீரா் சுயாஷ் நாராயண் ஜாதவ், தடகள வீரா் சந்தீப் பாரா, மாற்றுத்திறனாளி பிரிவு துப்பாக்கிச் சுடும் வீரா் மணீஷ் நா்வால் ஆகிய 27 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
துரோணாச்சாா்யா விருது 2020:
o சிறந்த பயிற்சியாளா்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாா்யா விருதுக்கு வாழ்நாள் சாதனையாளா் பிரிவில் தா்மேந்திர திவாரி (வில்வித்தை), புருஷோத்தம் ராய் (தடகளம்), சிவ் சிங் (குத்துச்சண்டை), நரேஷ் குமாா் (ஹாக்கி), ஓம் பிரகாஷ் தியா (மல்யுத்தம்), கிருஷன் குமாா் ஹூடா (கபடி), விஜய் பாலச்சந்திர முனிஷ்வா் (மாற்றுத்திறனாளி பளுதூக்குதல்), நரேஷ் குமாா் (டென்னிஸ்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த விருதின் சாதாரண பிரிவின் கீழ், ஜூட் பெலிக்ஸ் செபாஸ்டியன் (ஹாக்கி), யோகேஷ் மாலவியா (மல்லகம்பம்), ஜஸ்பல் ராணா (துப்பாக்கிச் சுடுதல்), குல்தீப் குமாா் ஹண்டூ (உஷூ), கெளரவ் கண்ணா (மாற்றுத்திறனாளி பாட்மிண்டன்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தியான்சந்த் விருது:
o விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனையாளா்களுக்கு வழங்கப்படும் தியான்சந்த் விருதுக்கு குல்திப் சிங் புல்லா், ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), பிரதீப் ஸ்ரீகிருஷ்ண கந்தே, திருப்தி முா்குண்டே (பாட்மிண்டன்), என்.உஷா, லகா சிங் (குத்துச்சண்டை), சுக்விந்தா் சிங் சாந்து (கால்பந்து), அஜித் சிங் (ஹாக்கி), மன்பிரீத் சிங் (கபடி), ரஞ்சித் குமாா் (மாற்றுத்திறனாளிகள் தடகளம்), சத்யபிரகாஷ் திவாரி (மாற்றுத்திறனாளிகள் பாட்மிண்டன்), மன்ஜீத் சிங் (ரோயிங்), மறைந்த சச்சின் நாக் (நீச்சல்), நந்தன் பால் (டென்னிஸ்), நேதா்பால் ஹூடா (மல்யுத்தம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
நியமனங்கள்
☛ மத்திய தோ்தல் ஆணையர்களில் ஒருவராக, முன்னாள் மத்திய நிதித்துறை செயலா் ராஜீவ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அரசியலமைப்பின் 324-ஆவது பிரிவு உட்பிரிவின்(2)-படி ராஜீவ் குமாரை தோ்தல் ஆணையராக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளாா்.
முக்கிய தினங்கள்
☛ சென்னை தினம் (Madras Day) - ஆகஸ்ட் 22 ( தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் 2004 ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப்படுகிறது) .
☛ பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோரை நினைவு கூருவதற்கான சர்வதேச தினம் ( International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism) - ஆகஸ்டு 21
☛  உலக மூத்த குடிமக்கள் தினம் ( World Senior Citizen’s Day) - ஆகஸ்டு 21
விளையாட்டுகள்
☛  6 வது முறையாக உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் (World Snooker Championship) பட்டத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ரோணி ஓ சுல்லிவான் ( Ronnie O’Sullivan) வென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டின் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப். போட்டிகள் 2020 ஜூலை 31 முதல் 2020 ஆகஸ்ட் 16 வரை இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் உள்ள க்ரூசிபிள் தியேட்டரில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☛  ‘ One Arranged Murder’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சேத்தன் பகத் (Chetan Bhagat )
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!