நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 23-24 August 2020

Current Affairs for TNPSC Exams 23-24 August 2020
இந்தியா
☛ “இந்தியா மற்றும் மாநிலங்களின் மக்கள் தொகை கணிப்புகள் 2011- 2036” (Population projections for India and States 2011- 2036) : சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மக்கள் தொகை தொடர்பான தேசிய ஆணையம்(National Commission on Population), “இந்தியா மற்றும் மாநிலங்களுக்கும் மக்கள் தொகை கணிப்புகள் 2011- 2036” என்ற தலைப்பில் மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு,
இந்தியா மற்றும் மாநிலங்களுக்கான மக்கள் தொகை கணிப்புகள் 2011- 2036:
பாலின விகிதம் (Sex ratio) :
o பாலின விகிதம் 2011 இல் 943 ஆக இருந்தது 2036 இல் 957 ஆக அதிகரிக்கும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.
o 2011 உடன் ஒப்பிடும்போது, ​​கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தவிர 18 மாநிலங்களில் பாலின விகிதம் 2036 க்குள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
o 2036 ஆம் ஆண்டில், 899 என்ற மிகக் குறைந்த பாலின விகிதம் புது தில்லியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து குஜராத்தில் 900 மற்றும் ஹரியானாவில் 908 இருக்கும்.
குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) :
o i.குழந்தைகள் இறப்பு விகிதம் 2010 இல் 46 ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது, இது 2031-2035 ஆம் ஆண்டின் இறுதியில் 30 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
o ii. இந்தியாவில் அதிக குழந்தைகள் இறப்பு விகிதம் மத்தியப் பிரதேசத்திலும் ( 58,) அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் (57) காணப்படுகிறது. இது 2031-35 ஆம் ஆண்டில் முறையே 37 மற்றும் 38 ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
o iii. 2031-35 காலப்பகுதியில், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஒடிசா, சத்தீஸ்கர், மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 30-40 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
o iv. கேரளாவில் 2031-35 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 9 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில், மிகக்குறைந்த குழந்தைகள் இறப்பு விகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2011-15ல் 22 ல் இருந்து 2031-35 காலப்பகுதியில் 16 ஆக குறையும்.
கருவுறுதல் வீதம் (Fertility Rate ) :
o மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate - TFR) 2011-2015 ஆம் ஆண்டில் இருந்த 2.34 லிருந்து 2031- 35 ஆம் ஆண்டில் 1.73 ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
o கருவுறுதல் வீதம் குறைந்து வருவது இந்தியாவின் மக்கள்தொகையின் வயது புள்ளிவிவரங்களை மாற்றி, 2011 இல் 24.9 ஆக இருந்த நடுத்தர வயதை 2036 இல் 34.5 ஆக உயர்த்தும்.
o பீகார் மற்றும் உ.பி. ஆகியவை முறையே 3.5 மற்றும் 3.7 உடன் அதிக மொத்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளன, இது இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகித விட அதிகமாக உள்ளது (2.5).
இந்தியாவின் மக்கள் தொகை (Population of India):
o i. இந்தியாவின் மக்கள் தொகை 25 ஆண்டுகளில் 25.7% ஆக ஆண்டுக்கு 1% வீதத்தில் அதிகரிக்கும் என்று அறிக்கை கூறுகிறது, அதாவது 2011-36 ஆம் ஆண்டில் 121.1 கோடியிலிருந்து 151.8 கோடியாக உயரவுள்ளது.
o ii. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 368 முதல் 463 நபர்களாக அதிகரிக்கும்.
o iii. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியனாக இருந்தது, இது 2036 ஆம் ஆண்டில் 311 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இளையோர் மக்கள் தொகை (Youth Population) :
o i.இளையோர் மக்கள் தொகை (15-24 ஆண்டுகள்) 2011 ல் 23.3 கோடியிலிருந்து 2021 இல் 25.2 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் தொடர்ந்து 2036 இல் 22.7 கோடியாக குறையும்.
o ii. மொத்த மக்கள்தொகைக்கு இளைஞர் மக்கள் தொகை விகிதம் 2036 இல் 14.9% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் சரிவு:
o இந்தியா சீனாவை முந்திக்கொண்டு 2031 ஆம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று அறிக்கை கூறுகிறது. மேலும், 2021-2031 ஆம் ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 8.4% குறையும்.
நகர மக்கள் தொகை (Urban Population) :
o 2011 ஆம் ஆண்டில் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 31.8% ஆக இருந்தது, இது 2036 ஆம் ஆண்டில் 38.2% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2036 ஆம் ஆண்டில் மொத்த மக்கள் தொகை வளர்ச்சியில் 73% பங்களிக்கும்.
o 2011 இல் 98% நகர்ப்புற மக்கள்தொகை கொண்ட டெல்லி 2036 ஆம் ஆண்டில் 100% நகர்ப்புறமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
o தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகியவை 2036 க்குள் 50% க்கும் அதிகமான நகர்ப்புற மக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் எதிர்பார்ப்பு (Life Expectancy) :
o ஆண்களுக்கு ஆயுட்காலம் 66 முதல் 69 ஆக அதிகரிக்கும் என்றும் பெண்களுக்கு இது 71 முதல் 74 ஆக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
o 2036 க்குள் பெண்களின் ஆயுட்காலம் 80 க்கும் ஆண்களுக்கு 74 க்கும் மேலான ஒரே இந்திய மாநிலமாக கேரளா இருக்கும்.
o வடகிழக்கு மாநிலங்களில் 2036 க்குள் பெண்களுக்கு 77 மற்றும் ஆண்களுக்கு 73 ஆயுட்காலம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
☛ குழாய் குடிநீர் விநியோக முறைக்கான வரைவு தரத்தை இந்திய தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards (BIS)) தயாரித்துள்ளது . ‘குடிநீர் விநியோக தர மேலாண்மை அமைப்பு - குழாய் குடிநீர் விநியோக சேவைக்கான தேவைகள்’ ( ‘Drinking water supply quality management system — requirements for piped drinking water supply service’) என்று பெயரிடப்பட்ட இந்த வரைவானது, இந்திய தரக் குறியீடு 10500 (Indian Standard (IS) 10500) ஐ பூர்த்தி செய்வதை வலியுறுத்துவதுடன், 2024 ஆம் ஆண்டளவில் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதற்கான மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
o கூ.தக. : Indian Standard (IS) 10500 தர எண் என்பது, ஆர்சனிக் போன்ற உலோகங்கள் மற்றும் நீரின் pH மதிப்பு, அதில் உள்ள மொத்தக் கரைந்த திடப்பொருள்கள் மற்றும் நிறம் மற்றும் வாசனை போன்ற பிற அளவுகள் உட்பட குடிநீரில் பல்வேறு பொருட்களின் ஏற்றுக்கொள்ளத்தக்க வரம்பை கோடிட்டுக் காட்டுகிறது.
சர்வதேச நிகழ்வுகள்
☛ இணையதள தொழில்நுட்ப நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகியவை பிரசுரிக்கும் செய்திகளுக்கு அந்த செய்திகளை தயாரித்த செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி கட்டணம் வழங்குவதற்கான சட்டத்தை உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா நாடு இயற்றவுள்ளது.
விருதுகள்
☛  அமெரிக்க-இந்தியா ஸ்டிராடஜிக் ஃபார்ட்னர்ஷிப் மன்றத்தின் (US-India Strategic Partnership Forum -USISPF) தலைமைத்துவ விருதுகள் 2020 மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் அடோஃப் (Adobe ) நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயென் (Shantanu Narayen) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தினங்கள்
☛ பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் ( International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism) - ஆகஸ்டு 21
☛ மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களின் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூருவதற்கான சர்வதேச தினம் (International Day Commemorating the Victims of Acts of Violence Based on Religion or Belief ) - ஆகஸ்டு 22
☛ அடிமை வர்த்தகத்தை நினைவுகூர்வது மற்றும் ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for the Remembrance of the Slave Trade and Its Abolition) - ஆகஸ்டு 23
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!