நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 15 October 2020

 Today's Current Affairs for TNPSC Exams 15-10-2020

தமிழ்நாடு

  • ”இந்தியா சாட்” (India Sat) என்ற பெயரில் கருர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள்  உருவாக்கிய சோதனை செயற்கைக்கோள், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஷாவின் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த செயற்கைக் கோளை ,கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்த அத்னான், நாகம்பள்ளியைச் சேர்ந்த கேசவன் மற்றும் தென்னிலையைச் சேர்ந்த அருண் ஆகிய மூன்று மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
    • கூ.தக. : முன்னதாக, 2017-ம் ஆண்டில் ஷாரூக்கின் குழு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவாக ‘கலாம்சாட் (Kalamsaat)’ எனும் செயற்கைக்கோளை நாசா வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா 

  • ”சுரக்‌ஷா கவச்” (Suraksha Kavach) என்ற பெயரில் தீவிரவாதத் தாக்குதலுகெதிரான கூட்டு ஒத்திகை இந்திய இராணுவம் மற்றும் மகாராஷ்டிர மாநில காவல்துறை இடையே பூனேவில் 9-10-2020 அன்று நடைபெற்றது.
  • ஆர்டன் கேபிட்டலின் (Arton Capital) உலகின் மிக வலிமையான கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் (Passport Index) இந்தியா 58 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தும், இரண்டாமிடத்தை, ஜெர்மனி, ஆஸ்திரியா, லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளும், மூன்றாமிடத்தை ஸ்வீடன், பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகளும் பெற்றுள்ளன. 
  • ராஜீவ் காபா  குழு (Rajiv Gauba Committee): தகவல் தொடர்பு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பகிர்மானத்திற்கான (Telecom Spectrum Allocation) வழிமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காக மத்திய கேபினட் செயலர் ராஜீவ் காபா தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 
  • எம்.எஸ்.ஆனந்த் குழு (M.S. Ananth Committee) :  தொழில்முறை பொறியாளர்கள் மசோதாவை (Professional Engineers Bill) தயாரிப்பதற்காக, சென்னை ஐ.ஐ.டியின் முன்னாள் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழு (All India Council for Technical Education (AICTE)) அமைத்துள்ளது. 
  • ஷாங்காய் அமைபின் (Shanghai cooperation organisation) நீதித்துறை அமைச்சர்களின் கூடுகையை 16-10-2020 அன்று இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்  தலைமை தாங்கி நடத்தவுள்ளார். 
  • ஐக்கிய நாடுகளவையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (United Nations Food and Agriculture Organization)  75-வது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் ரூ.75 சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி 16-10-2020 அன்று வெளியிடவுள்ளார். மேலும், இந்தியாவில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய  8 பயிர்களின் 17 ரகங்களையும்  (bio-fortified varieties)பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 
    • கூ.தக. : ரோம் (இத்தாலி) நகரைத் தலைமையிடமாகக் கொண்ட உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பு 16 அக்டோபர் 1945 ல் தொடங்கப்பட்டது.
    • இவ்வமைப்பின் தற்போதைய பொது இயக்குநராக (Director-General) , சீனாவைச் சேர்ந்த  கியூ டோங்கு (Qu Dongyu) உள்ளார். 
    • இந்தியாவின் குடிமைப் பணி அதிகாரி டாக்டர் பினய் ரஞ்சன் சென், இந்த அமைப்பின் தலைமை இயக்குநராக 1956 முதல் 1967 வரை பணியாற்றினார். 2020-ம் ஆண்டின் நோபல் பரிசு வென்ற உலக உணவு திட்டம், அவரது காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 
    • 2016-ம் ஆண்டை சர்வதேச பருப்பு வகை ஆண்டு எனவும், 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் யோசனையை உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஏற்றுக் கொண்டது.

உலகம்

  • ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சீனா, நேபாளம், பாகிஸ்தான் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டன.  தேர்தலில் சவுதி அரேபியா தோற்கடிக்கப்பட்டது. 

பொருளாதாரம்

  • 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி  (gross domestic product (GDP)) யின் வளர்ச்சியானது -10.3% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) , தனது ’உலக பொருளாதாரப் பார்வை’ (World Economic Outlook) அறிக்கையில் கணித்துள்ளது. 

முக்கிய தினங்கள் 

  • உலக தர தினம் (World Standards Day) - அக்டோபர்  14 
  • சர்வதேச  மின்கழிவு தினம் (International E-Waste Day) - அக்டோபர்  14 
  • உலக மாணவர் தினம் (World Students Day) - அக்டோபர் 15 (முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினம்) | மையக்கருத்து 2020 - மக்கள், செல்வம் மற்றும் அமைத்திக்காக கற்றல் (Learning for people, prosperity and peace)  

தகவல் மற்றும் தொழில்நுட்பம்

  • விண்வெளி பயணத்தில் சாதனையாக, 3 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை எம்.எஸ்-17  ரஷிய விண்கலம் 3 மணி நேரத்தில் சென்றடைந்துள்ளது.
    • விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    • எம்.எஸ்-17 விண்கலத்தில் ரஷியாவின் ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செர்ஜி ரைஜிகோவ் மற்றும் செர்ஜி குட்-ஸ்வெர்கோவ் மற்றும் நாசாவின் கேத்லீன் ரூபின்ஸ் ஆகியோர் பயணித்தனர்.கஜகஸ்தானில் ரஷியவால் இயக்கப்படும் பைகோனூர் ஏவுதளத்திலிருந்த இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷியா இரண்டு விண்வெளி வீரர்கள் மற்றும் நாசா விண்வெளி வீரருடன் ரஷியாவின் சோயுஸ் எம்.எஸ்-17 விண்கலம் 14-10-2020 அன்று ஏவப்பட்டது. ஏவப்பட்ட 3 மணி நேரத்தில் விண்கலம் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் சென்றடைந்தது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!