--> Skip to main content
TNPSC குரூப் I & II 2020-21 (New Syllabus) Test Batches

Tamil & English Mediums | 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

Download Test Schedule / Join

TNPSC Current Affairs 16-17 October 2020

TNPSC Current Affairs 16-17 October 2020

தமிழகம்

 • மருத்துவப் படிப்பிற்கான ’நீட்’ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று தேனி மாணவர் ஜீவித்குமார் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா
 • ”கபிலா” (‘KAPILA’ Kalam Program for IP Literacy) என்ற பெயரில் அறிவுசார் சொத்துரிமை விழிப்புணர்வு பரப்புரையை (Intellectual Property (IP) Literacy and Awareness campaign) அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினமான 15-10-2020 அன்று மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியா 15-23 அக்டோபர் 2020 தினங்கள் அறிவுசார் சொத்துரிமை வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

 • 2018-2019 ஆண்டில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ‘பேட்டன்ட்’ (Patent) காப்புரிமை பதிவு செய்த தனி பல்கலைக்கழகம் எனும் பெருமையை சண்டிகார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

 • 2019 ஆம் ஆண்டிற்கான ஜனபீட விருதைப் (Jnanpith Award) பெற்ற மலையாள கவிஞர் மகாகவி அக்கிதம் அச்சுதம் நம்பூதிரி (‘Mahakavi’ Akkitham Achuthan Namboothiri) காலமானார்.

 • காருண்யா சுகாதார காப்பீட்டு திட்டம் (Karunya Arogya Suraksha Pathadi - KASP) : கேரளாவில் பொது மக்களுக்குச் சிகிச்சையளிக்க, மருத்துவ நிதி உதவி வழங்கிட மாநில அரசு காருண்யா சுகாதார காப்பீட்டு திட்டம் (Karunya Arogya Suraksha Pathadi - KASP) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், ஒரு குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் வரையில் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.

 • இ-வேஸ்ட் எனப்படும் மின்பொருள் (எலக்ட்ரானிக்) கழிவுகளை அதிகமாக உருவாக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடம் பெற்றுள்ளது. இந்தியா கடந்த 2019 ஆம் ஆண்டில் 32 லட்சம் டன் மின்பொருள் கழிவுகளை உருவாக்கி உள்ளதாக தெரியவந்து உள்ளது. உலக அளவில் நான்கில் ஒரு பங்கு மின்பொருள் கழிவுகள் இந்தியாவில் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

  • கூ.தக. : மின்கழிவு தினம் (‘இ-வேஸ்ட் தினம்’) - அக்டோபர் 14

 • ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமைக்குரிய மும்பையை சேர்ந்த பழம்பெரும் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா 15-10-2020 அன்று காலமானார்.

  • கூ.தக. : 1990-ம் ஆண்டு வெளியான ‘லெக்கின்’, 2001-ம் ஆண்டு வந்த ‘லகான்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதையும், 1983-ம் ஆண்டு ரிச்சர்ட் அட்டென்பரோ இயக்கிய ‘காந்தி’ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றிருந்தார்.

 • கடந்த 30 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக லான்செட் இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய மக்களின் சராசரி ஆயுள்காலம் 1990ஆம் ஆண்டில் 59.6 ஆண்டுகளாக இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டில் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்
 • பொதுமக்கள் தொடர் போராட்டங்களையடுத்து, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பாய் ஜீன்பேகோவ் 15-10-2020 அன்று பதவி விலகினார்.

வெளிநாட்டு உறவுகள்
 • ”ஐ.என்.எஸ்.சிந்துவீர்” (“INS Sindhuvir”) என்ற பெயரிலான நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா, மியான்மர் நாட்டிற்கு வழங்கவுள்ளது. ’சாகர்’ (SAGAR - Security and Growth for All in the Region)திட்டத்தின் கீழ் இந்த நீர்மூழ்கிக்கப்பல் வழங்கப்படவுள்ளது.

 • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development) துணைத் தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எக்தா கபூர் (Dr Ekta Kapoor) அவ்வமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கூ.தக. : 30 செப்டம்பர், 1961 அன்று தொடங்கப்பட்ட பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது.

 • பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி முகமைக்கு (United Nations Relief and Works Agency in Near East (UNRWA) for Palestine refugees) இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.7.3 கோடி) நன்கொடை வழங்கியுள்ளது.

பொருளாதாரம்
 • ”சரல் ஜீவன் பீமா” ( ‘Saral Jeevan Bima’) என்ற பெயரில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்குமான கட்டாய காப்பீட்டு சேவையை 1 ஜனவரி 2021 ஆம் தேதி முதல் தொடங்குவதற்கான வழிமுறைகளை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) வெளியிட்டுள்ளது.

  • கூ.தக. : 1999 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையிடம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.

  • இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக சுபாஷ் சந்திர குந்தியா (Subhash Chandra Khuntia) உள்ளார்.

 • ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்காக மத்திய அரசே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது.

நியமனங்கள்
 • ஐக்கிய நாடுகளவைக்கான இந்தியாவின் நிரந்தர ஆணைப்பேராள் குழுவின் நிரந்தர பிரதிநிதியாக (Permanent Representative of India to UNESCO’s Permanent Delegation of India) விஷால் வி சர்மா (Vishal V. Sharma) நியமிக்கப்பட்டுள்ளார்.

 • தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC Limited - National Thermal Power Corporation Limited) தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக (Chairman and Managing Director(CMD)) பொறுப்பு வகித்துவரும் குர்தீப் சிங்கின் (Gurdeep Singh) பதவிகாலம் ஜீலை 2025 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 • இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த டாக்டா் ஜெ.ஏ.ஜெயலால் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்
 • அறிவுசார் சொத்துரிமை வாரம் (Intellectual Property (IP) Literacy Week) - 15-23 அக்டோபர் 2020

 • உலக உணவு தினம் (World Food Day) - அக்டோபர் 16

 • தேசிய பெண் விவசாயிகள் தினம் (Rashtriya Mahila Kisan Diwas) - அக்டோபர் 15

 • சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் (International Day of Rural Women ) - அக்டோபர் 15

 • உலக கைகழுவுதல் தினம் (Global Handwashing Day) - அக்டோபர் 15

 • இந்தியா-சர்வதேச உணவு & வேளாண் வாரம் 16-22 அக்டோபர் 2020 தினங்களில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை முன்னிட்டு ”அன்ன தேவோ பவா” என்று தலைப்பிடப்பட்ட இயக்கத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், உணவு பதப்படுத்தும் தொழில்துறை, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.

 • தேசிய பாதுகாப்பு வீரர் படையின் (National Security Guard (NSG)) நிறுவன தினம் - அக்டோபர் 16

அறிவியல் தொழில்நுட்பம்
 • ”பெபிகொலம்போ விண்வெளி கலம்” (BepiColombo Space Craft) என்பது புதன் ( Mercury ) கிரகத்தை ஆராய ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேசன் ஏஜன்ஸி (Japan Aerospace Exploration Agency) மற்றும் “ஐரோப்பிய விண்வெளி முகமை” (European Space Agency) ஆகியவற்றால் இணைந்து அனுப்பப்படும் விண்கலமாகும். 2025 ஆம் ஆண்டில் புதன் கிரகத்தை சென்றடையும், இந்த விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தின் மூலம், Mercury Planetary Orbiter மற்றும் Mercury Magentospheric Orbiter என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்
 • “The Battle of Belonging” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சஷி தரூர்

Comment Policy: Dear Visitor, this is your area. You can post your queries, suggestions and feedback.
Open Comments
Close Comments