TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

TNPSC குரூப் IV & VAO 2021 Test Batch

குரூப் 4 & VAO 2021 தேர்விற்கான முழு பாடத்திட்டத்தையும் திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 120 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்)

Download Test Schedule (Tamil)
About Test Batch | Join Now

TNPSC Current Affairs 18-23 October 2020

Current Affairs for TNPSC Exams 18-23 October 2020

தமிழ்நாடு

இந்தியாவில் முதன் முறையாக கோவை இளைஞர் கலையரசனுக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . கோவையில் கல்லூரி மாணவர்களை வைத்து கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில், ‘கிராமிய புதல்வன்’ கலைக்குழுவை நடத்தி வருபவர் கலையரசன். தமிழக அரசின் கலைப்பிரிவில் தூதராகவும் உள்ள இவர், கிராமிய கலைகளில் பல உலக அளவிலான சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் இடம்பெறும் சட்டமன்ற தொகுதிகளின் விவரஙகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . (நன்றி:தினத்தந்தி)

தமிழகத்தில் சமீபத்தில் 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. காஞ்சீபுரம் மாவட்டம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களாக பிரிந்தது.விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களாகவும், நெல்லை மாவட்டம், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. அந்த வகையில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாகியுள்ளன. இந்த நிலையில், 4 மாவட்டங்கள் மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்ட 5 புதிய மாவட்டங்கள் ஆகியவற்றுக்கான சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

o தற்போதுள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகின்றன. அதிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்குள், சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன.

o வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும்; ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளும்; திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் அடங்குகின்றன.

o விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளும்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கரா புரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 தொகுதிகளும் வருகின்றன.

o நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும்; தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளும் அடங்குகின்றன.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனுக்கு இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ் ஆஃப் எடின்பரோ சாா்பில் கௌரவப் பட்டம் (எஃப்ஆா்சிஎஸ்) வழங்கப்பட்டுள்ளது . இதன் மூலம் அக்கல்லூரியின் சிறப்பு உறுப்பினா்களில் ஒருவராக அவா் அங்கம் வகிக்க உள்ளாா்.

இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் சி.என்.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா

“ஐஎன்எஸ் காவரட்டி” (INS Kavaratti) என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்க்கப்பல் (Anti-Submarine Warfare stealth corvette) 22-10-2020 அன்று விசாகப்பட்டிணத்தில் நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையில் கடல்சார் உளவுப் பணிக்காக டார்னியர் விமானத்தை இயக்கும் வகையில் திவ்யா சர்மா, சுபாங்கி ஸ்வரூப், சிவாங்கி ஆகிய 3 பேர் அடங்கிய முதல் குழு தயார் நிலையில் உள்ளது.

மேகாலய மாநிலத்தில் கிராமப்புற மக்களின் வசதிக்காக அவா்கள் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கும் ‘மைக்ரோ ஏடிஎம்’ சேவையை அம்மாநில முதல்வா் கான்ராட் கே.சங்மா 22-10-2020 அன்று தொடங்கிவைத்தாா். இந்த திட்டத்தின்படி சிறிய அளவிலான ஏடிஎம் இயந்திரங்கள் கிராமப்புற மக்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும். அவா்கள் தங்கள் பற்று அட்டைகளைப் பயன்படுத்தி அதில் இருந்து தேவையான பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். 84 சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு சுயஉதவிக் குழுவுக்கும் ஒரு மைக்ரோ ஏடிஎம் கருவி அளிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வுகள் இனி மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளாா்.

மூன்றாம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணை (ஏடிஜிஎம்) என்ஏஜி-யின் இறுதி பரிசோதனை பொக்ரான் பகுதியில் 23-10-2020 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.இந்த என்ஏஜி ஏவுகணை, நாமிகா என்ற ஏவுகணை செலுத்தும் வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. இலக்கு இடத்தில் நிறுத்தப்பட்ட டாங்கை இந்த என்ஏஜி ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.பகலில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் எதிரி டாங்குகளை தாக்கி அழிப்பதற்காக, அதி நவீன ஏடிஜிஎம் என்ஏஜி ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. மிக உயரமான இடங்களில் இருந்து எதிரி நாட்டு டாங்கிகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” (“Ayushman Sahakar” ) : கேரள மாநிலத்திலுள்ள கூட்டுறவு மருத்துவமனைகளை (cooperative hospitals) மாதிரியாகக் கொண்டு, ”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” என்ற பெயரில், இந்தியா முழுவதும் கூட்டுறவு சுகாதார கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 18-10-2020 அன்றூ தொடங்கியுள்ளது. இந்த திட்டமானது தேசிய கூட்டுறவு வளர்ச்சி நிறுவனத்தின் (National Cooperative Development Corporation (NCDC)) மூலம் ரூ.10,000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது.

காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு (Kaleshwaram lift irrigation project) தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal ) சுற்றுசூழல் ஒப்புதலை வழங்கியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் அமையவுள்ள இந்த திட்டமானது கோதாவரி ஆற்றின் மேல் கட்டப்படவுள்ளது.

இந்தியாவின் முதல் கடல் விமான ( seaplane) சேவை குஜராத் மாநிலத்திலுள்ள ஆமதாபாத்தில் 31-10-2020 அன்று தொடங்கப்படவுள்ளது . இதன் மூலம், ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள சபர்மதி ஆற்றிலிருந்து நர்மதா மாவட்டத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை (Statue of Unity) செல்வதற்கான கடல் விமான சேவை வழங்கப்படுகிறது.

”பிரம்மோஸ் ஏவுகணையின்” (BRAHMOS missile) கடல் பதிப்பு (Naval version) 18-10-2020 அன்று ஐ.என்.எஸ். சென்னை (INS Chennai) போர்க்கப்பலிலிருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையானது 290 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கை ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு வேகத்தில் சென்று தாக்க வல்லது.

பிரித்வி II ஏவுகணையின் (PRITHVI II missile) இரவுநேர சோதனை 18-10-2020 அன்று ஒடிஷாவின் பாலசோர் சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணையின் முதல் சோதனை கடந்த செப்டம்பர் 2020 ல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய துத்தநாக உருக்காலை திட்டம் (World biggest Zinc Smelter Project) குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் இந்துஸ்தான் சிங் லிமிடட் நிறுவனம் (The Hindustan Zinc Limited ) ரூ.10,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

”CuRED” ( CSIR Ushered Repurposed Drugs ) என்ற பெயரில் அறிவியல் மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி கவுண்சிலின் (CSIR, Council of Scientific and Industrial Research) மூலம் மறுபயன்பாடு செய்யப்படும் மருந்துகளின் விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கான இணையதள சேவையை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் 20-10-2020 அன்று தொடங்கியுள்ளது.

இந்தியா இரத்த சோகை குறியீட்டை (anaemia Mukt Bharat index) ’யுனிசெஃப்’ எனப்படும் ஐ.நா.குழந்தைகள் நிதியத்துடன் (UNICEF - United Nations Children's Fund) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இணைந்து வெளியிட்டுள்ளது. இரத்த சோகை முகத் பாரத் குறியீட்டில் 46.7 மதிப்பெண்களுடன் ஹரியானா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவின் மிக நீளமான துரித பேருந்து போக்குவரத்து அமைப்பு (Bus Rapid Transit System (BRTS)) எனும் பெருமையை, 108 கி.மீ. தூரத்துடன் , குஜராத் மாநிலத்தின் சூரத் திலுள்ள துரித பேருந்து போக்குவரத்து அமைப்பு பெற்றுள்ளது.

6 வது இந்தியா -சர்வதேச அறிவியல் திருவிழா 2020 (6th India International Science Festival 2020) 22-25 டிசம்பர் 2020 தினங்களில் இணையவழியில் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆசியாவில் மிக வலிமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திலுள்ளதாக ’லோவி நிறுவனத்தின் ஆசிய வலிமை குறியீடு 2020’ (’ Lowy Institute Asia Power Index 2020’) ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.

பி.உமேஷ் குழு ( P Umesh panel) : இந்தியாவில் இணைய பாதுகாப்பிற்கான காப்பீட்டின் (Cyber Liability Insurance) தேவையைப் பற்றி ஆராய்வதற்காக பி.உமேஷ் தலைமையிலான குழுவை இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) அமைத்துள்ளது.

இந்திய நெடுஞ்சாலை பொறியாளர் கல்வி நிறுவனம் ((Indian Academy of Highway Engineers)) அமைந்துள்ள இடம் - நொய்டா, உத்தரப்பிரதேசம் ( 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது)

2019 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள மாநிலமாக உத்தரப்பிரதேச மாநிலமும் அடுத்தடுத்த இடஙளை முறையே கேரளா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவை பெற்றுள்ளதாகவும் மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘இந்திய சுற்றுலா புள்ளிவிவர அறிக்கையில்’ (Indian Tourist Statistics) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர விவரங்கள் :

o 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா வருகை 2.2% அதிகரித்துள்ளது. 

o இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் முதல் ஐந்து மூல நாடுகள் பங்களாதேஷ், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் கனடா.

o உலகளாவிய சுற்றுலா குறியீட்டு 2019 இல் இந்தியா 34 வது இடத்தில் உள்ளது.

2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை மாறுகொழுப்பு (Trans Fat) பயன்பாடற்ற நாடாக மாற்றுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்குள் மாறுகொழுப்பை (Trans Fat) ஒழிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (United Nations World Food Programme (UN-WFP)) வெளியிட்டுள்ள “உணவுத் தட்டு -2020” (“The Cost of a Plate of Food-2020”) அறிக்கையின் படி, சராசரியாக ஒரு இந்தியர் தனது அன்றாட வருமானத்தில் 3.5% ஐ ஒரு தட்டு உணவுக்காக செலவிடுகிறார். 36 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 28 வது இடத்தைப் பெற்றுள்ளது.

”மூபே” (‘mooPay) என்ற பெயரில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கான முதலாவது தானியங்கி மின்னணு பணப்பரிமாற்ற செயலியை ’ஸ்டெல்லாப்ஸ்’ (Stellapps) எனப்படும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் உதவியுடனான தொழில் முனைவு நிறுவனம் ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

”சாண்ட் ஏவுகணை” (”SANT Missile -Standoff Anti-Tank Guided Missile”) எனப்படும் வானிலிருந்து 15கி.மீ. முதல் 20 கி.மீ. வரையிலான நிலத்திலுள்ள எதிரிகளின் இலக்கினைத் தாக்க வல்ல ஏவுகணையினை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO)) 19-10-2020 அன்று ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD -Organisation for Economic Co-operation and Development) நாடுகளுக்கு அதிக அளவில் புலம் பெயர்ந்த நாட்டு மக்களின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது.

o கூ.தக. : 30 செப்டம்பர் 1961 அன்று தொடங்கப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ளது. இவ்வமைப்பில் தற்போது, 37 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தியாவின் முதல் “பல்நோக்கு நவீன தளவாடங்கள் பூங்காவை” (Multi-modal Logistic Park) அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோகிகாபோவி ல் (Jogighopa) அமைப்பதற்கு 20-10-2020 அன்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரசார செலவுத் தொகையை 10 சதவிகிதமாக உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

o தேர்தல் வேட்பாளர் செலவினத்தை 10 சதவிகிதமாக உயர்த்த மத்திய சட்டத்துறை அமைச்சகமானது 1961 தேர்தல் சட்ட விதிமுறையில் மாற்றம் செய்துள்ளது.

o இதன்படி நாடாளுமன்ற தேர்தலில் தற்போது ரூ.70 லட்சமாக இருக்கும் செலவுத் தொகை ரூ.77 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

o மாநிலத்திற்கு மாநிலம் செலவினத் தொகை மாறுபடும். தமிழகத்தைப் பொருத்தவரையில் வேட்பாளர் செலவின வரம்பு சட்டமன்றத் தேர்தலுக்கு ரூ.30.80 லட்சமும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.77 லட்சமாகவும் உயருகிறது.

இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்ற விங் கமாண்டர் (ஓய்வு) டாக்டர். விஜயலஷ்மி ரமணன் காலமானார் .

ஹைட்ரஜன் கலந்த சிஎன்ஜி எரிவாயுவை அரசு பேருந்துகளில் பயன்படுத்தும் சோதனை திட்டத்தை தில்லி அரசு 20-10-2020 அன்று தொடங்கியுள்ளது . ஹைட்ரஜன் இயற்கை வாகன எரிவாயு (எச்சிஎன்ஜி) உற்பத்தி நிலையத்தை ராஜ்காட்டில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்தா் பிரதான், தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ஆகியோா் 20-10-2020 அன்று திறந்து வைத்தனா்.இந்தியன் ஆயல் நிறுவனமும் தில்லி போக்குவரத்து நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ள இந்த தொழிற்சாலையில் தினமும் நான்கு டன் எச்சிஎன்ஜி உற்பத்தி செய்யப்படுகிறது.

சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் 2020 ல் (Global Hunger Index 2020) இந்தியா 94 வது இடத்தில் உள்ளது.

o இந்த பட்டியலில், இந்தியாவில் பட்டினியாக வாழும் மக்களின் விகிதம் மிகவும் கவலைதரும் வகையில் உள்ளது. அதாவது 27.2 ஆக இருப்பதாக அந்தப் பட்டியல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

o சா்வதேச பட்டினி குறியீடு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு, உயரத்துக்கேற்ற உடல் எடை காணப்படாத 5 வயதுக்குள்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை, வயதுக்கேற்ற உயரம் காணப்படாத 5 வயதுக்குள்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை, சிறுவா்கள் இறப்பு விகிதம் ஆகிய மூன்று காரணிகளின் அடிப்படையில் பட்டினி குறியீடானது கணக்கிடப்பட்டு வருகிறது.

o கடந்த ஆண்டு (2019) ஆய்வு நடத்தப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 102-ஆவது இடத்தில் இருந்தது நினைவுகூரத்தக்கது.

o வெல்த்தங்கெர்ஹைல்ஃப் மற்றும் கன்சர்ன் வேர்ல்ட்வைட் இணைந்து வெளியிட்டடுள்ள இந்த பட்டியலில், அண்டை நாடுகளான இலங்கை 64-ஆவது இடத்திலும், நேபாளம் 73-ஆவது இடத்திலும், வங்கதேசம் 75-ஆவது இடத்திலும், மியான்மா் 78-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 88-ஆவது இடத்திலும் உள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

”ஸ்லினெக்ஸ் -20” ( SLINEX-20) என்ற பெயரில் இந்தியா-இலங்கை கடற்படைகளுக்கிடையேயான எட்டாவது வருடாந்த இருதரப்பு கடல்சார் பயிற்சி இலங்கையின் திருகோணமலையில் 19 - 21 அக்டோபர் 2020 வரையில் நடைபெற்றது.

சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் அவையின் மூன்றாவது கூடுகை (Assembly of the International Solar Alliance) 14-16 அக்டோபர் 2020 தினங்களில் இணையவழியில் நடைபெற்றது . இக்கூடுகையின் போது, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் தலைவர் மற்றும் உப தலைவர் பொறுப்பிற்கு மறுபடியும் இரண்டாண்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கூடுகையின் போது, சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் பின்வரும் விருதுகள் (ISA Solar Awards ) வழங்கப்பட்டன.

o கல்பனா சாவ்லா விருது (Kalpana Chawla Award) - பீம் சிங் (Dr. Bhim Singh), ஐ.ஐ.டி, தில்லி மற்றும் ஆயிஷா அல்னாய்மி ( Dr. Aaesha Alnuaimi ), துபாய்

o விஷ்வஸ்வராயா விருது (visvesvaraya Award) - மகேந்திர ஜெயின் (Mahendra Jain) , கர்நாடகா

o திவாகர் விருது (Diwakar Award) - அர்பான் நிறுவனம் (Arpan Institute) , ஹரியானா மற்றும் ஆருஷி சொசைட்டி (Arushi Society) , மத்திய பிரதேசம் (Haryana) and (Madhya Pradesh).

o கூ.தக. : மேற்கண்ட விருதுகள் இந்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்திலிருந்து (University of Pennsylvania) பெற்ற 25,000 டாலர் தொகையின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - நெதர்லாந்து நாடுகளுக்கிடையே டிஜிட்டல் சுகாதாரத் துறையில் (e-health sector) பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை அக்டோபர் 16, 2020 அன்று நடைபெற்றது.

விண்வெளித் துறையில் புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் அமைதியான நோக்கங்களுக்காகவும் இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 21-10-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. நைஜீரியாவின் அபுஜாவிலுள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (என்ஏஎஸ்ஆர்டிஏ) கடந்த ஆகஸ்ட் 13, 2020-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ( Institute of Chartered Accounts of India (ICAI)) மற்றும் மலேசியாவின் மிக்பா (Malaysian Institute of Certified Public Accountants (MICPA)) ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 21-10-2020 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சர்வதேச நிகழ்வுகள்

சர்வதேச நாணைய நிதியத்தின் ( International Monetary Fund (IMF)) 190 வது உறுப்பினராக ஆண்டோரா (Andorra) 16-10-2020 அன்று இணைந்துள்ளது.

o கூ.தக. : ஆண்டோரா (Andorra) நாடானது, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும்.

‘IOWa e20’ (Indian Ocean Wa e2020) என்ற பெயரில் மாதிரி சுனாமி ஒத்திகையை (Mock Tsunami Drills) யுனெஸ்கோவின் (UNESCO-United Nations Educational, Scientific and Cultural Organization) இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்புக்கான இடை-அரசு ஒருங்கிணைப்புக் குழு ( Intergovernmental Coordination Group for Indian Ocean Tsunami Warning and Mitigation System (ICG/IOTWMS)) 6,13 மற்றும் 20 அக்டோபர் 2020 தினங்களில் நடத்தியுள்ளது.

இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்குவதற்கு வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 20ஏ திருத்தத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் 22-10-2020 அன்று ஒப்புதல் அளித்தது.இதன் மூலம், இலங்கை நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறைந்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவின் கைகளில் அதிகாரம் குவியவுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO - North Atlantic Treaty organisation) புதிய விண்வெளி மையம் (Space Centre) ஜெர்மனியின் ராம்ஸ்டீனில் (Ramstein) அமைக்கப்படவுள்ளது.

o கூ.தக. : 4 ஏப்ரல், 1949 அன்று தொடங்கப்பட்ட நேட்டோ (NATO) அமைப்பின் தலைமையிடம் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரில் உள்ளது. இவ்வமைப்பில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போதைய பொது செயலராக நார்வே நாட்டைச் சேர்ந்த ஜென்ஸ் ஸ்டோலன்பர்க் (Jens Stoltenberg) உள்ளார்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பெரிய ராட்சத பூனை வரைபடம் பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள் எனும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 37 மீட்டர் நீளமுள்ள இந்த பூனை வரைபடம் கிமு 500 முதல் கிபி 200 வரையிலான காலத்தைச் சேர்ந்தது.

முதலாவது மெய்நிகர் ஜி 20 (G20 (Group of Twenty)) - இளைஞர் 20 உச்சிமாநாடு (Youth 20 (Y20) Summit) 15-17 அக்டோபர் 2020 தினங்களில் சவூதி அரேபியா நாட்டினால் இணைய வழியில் நடைபெற்றது. மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜிஜு இந்த கூடுகையில் கலந்து கொண்டார்.

தேசிய அடையாள தரவுத்தளத்தில் முக சரிபார்ப்பை (Facial verification in National Identification Database) இணைக்கும் முதல் நாடாக சிங்கப்பூர் உருவாகியுள்ளது . “SingPass Face verification” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முறைமையுடன், அந்நாட்டின் பல்வேறு அரசு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்தின் பிரதமராக, அந்நாட்டின் தொழிற்கட்சியின் (Labour Party) தலைவர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

கரோனா வைரஸின் முள் போன்ற புரோட்டீன் பகுதியைக் கட்டுப்படுத்தி செயலிழக்க செய்யும் மூலக்கூறு ஒன்றை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிகா செப்ராலு (14) வெற்றி பெற்றுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

முக்கிய தினங்கள்

சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் (International Stuttering Awareness Day ) - அக்டோபர் 22

தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) - பிப்ரவரி 10 மற்றும் அக்டோபர் 20 தினங்களில் அனுசரிக்கப்படுகிறது.

காவலர் நினைவு தினம் (Police Commemoration Day) - அக்டோபர் 21

உலக அயோடின் குறைபாட்டு நோய்கள் தடுப்பு தினம் (Global Iodine Deficiency Disorders Pre☞ention Day) - அக்டோபர் 21

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் (International Day for the Eradication of Po☞erty) - அக்டோபர் 17 | மையக்கருத்து 2020 - அனைவருக்கும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதியை அடைய ஒன்றாக செயல்படுவது (Acting together to achieve social and environmental justice for all)

இந்தியாவில் வறுமை :

o 2011 ஆம் ஆண்டில் தேசிய வறுமைக் கோட்டின் படி, இந்தியாவில் சுமார் 21.9% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். இந்தியாவின் தற்போதைய தேசிய வறுமைக் கோடு கிராமப்புறங்களில் மாதத்திற்கு ரூ .1,059 ஆகவும் நகர்ப்புறங்களில் மாதத்திற்கு ரூ .1,286 ஆகவும் உள்ளது.

o இந்தியாவில் வறுமை மதிப்பீடானது, நுகர்வு செலவினங்களை அடிப்படையாகக் கொண்டது, வருமான அடிப்படையில் அல்ல.

இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்துள்ள முக்கிய குழுக்கள் :

o அலாக் குழு (Alagh Committee) (1979 இல் நிறுவப்பட்டது) வயது வந்தோருக்கான குறைந்தபட்ச தினசரி தேவையை 2400 முதல் 2100 கலோரிகளாக இது தீர்மானித்தது.

o ரங்கராஜன் குழு (2012) 2014 ஆம் ஆண்டில் சமர்ப்பித்த அறிக்கையையின் படி, நகர்ப்புறங்களில் மாதத்திற்கு ரூ .1,407 ஆகவும், கிராமப்புறங்களில் மாதம் ரூ .2992 ஆகவும் வறுமைக் கோட்டை மதிப்பிட்டுள்ளது. ரங்கராஜன் கமிட்டியின் கூற்றுப்படி, இந்தியாவில் 454 மில்லியன் மக்கள் வறுமையில் உள்ளனர்.

o இவை தவிர லக்டவாலா குழு, 1993 (Lakdawala Committee) மற்றும் தெண்டுல்கர் குழு 2019 (Tendulkar Committee) ஆகியவையும் இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்துள்ள முக்கிய குழுக்களாகும்.

உலக விபத்து காயங்கள் தினம் (World Trauma Day) - அக்டோபர் 17

சர்வதேச சமயல் கலைஞர்கள் தினம் (International Chefs Day) - அக்டோபர் 20

உலக எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) தினம் (World Osteoporosis Day) - அக்டோபர் 20

உலக புள்ளியியல் தினம் (World Statistics Day) - அக்டோபர் 20

முக்கிய நியமனங்கள்

இந்திய வங்கிகள் சங்கத்தின் (Indian Banks’ Association (IBA)) தலைவராக, யூனியன் ஃபாங்க் ஆப் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ஜி. ராஜ்கிரண் ராய் (G Rajkiran Rai) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருதுகள்

2020-ம் ஆண்டின் அரசியல், பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது பெண்மணி பல்கீஸ் தாதி மற்றும் மனித உரிமைப் போராளி ஹர்ஷ் மாந்தர் தலைமையில் செயல்படும் காரவானே முஹப்பத் (அன்பிற்கான ஊர்தி) என்ற அமைப்புக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அறிவியல் தொழில்நுட்பம்

மனித தொண்டையில் ஒரு புதிய உறுப்பை, நெதர்லாந்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 1.5 அங்குல நீளம் கொண்ட அந்த புதிய உறுப்புக்கு ”டியூபேரியல் உமிழ்நீர் சுரப்பிகள்” (Tubarial salivary glands) என்று பெயரிட்டுள்ளன. இந்த சுரப்பியின் பண்புகள் உமிழ்நீர் சுரப்பிகளைப் போன்றது.

”ஓசிரிஸ் - ரெக்ஸ்’ (OSIRIS-REx) : சூரியனைச் சுற்றிவரும் “பென்னு குறுங்கோளை” (asteroid Bennu) ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாஷாவினால் 2016 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட ”ஓசிரிஸ் - ரெக்ஸ்’ (OSIRIS-REx) செயற்கைக் கோள் அந்த குறுங்கோளிலிருந்து குறைந்த பட்சம் 60 கிராம் மாதிரிகளை தனது 11 அடி நீளமுடைய ரோபோ கை மூலமாக கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிபிறக்கும் என்று கருதப்படுகிறது.எடுத்து .

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“On the Trails of Buddha: A Journey to the East” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - தீபாங்கர் ஆரோன் (Deepankar Aron)

“Portraits of Power: Half a Century of Being at Ringside” என்ற பெயரில் தனது சுயசரிதையை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.கே.சிங் (N K Singh) வெளியிட்டுள்ளார்.

விளையாட்டு

☞ வங்காள தேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (Bangladesh Shooting Sport Federation ) மெய்நிகர் வழியில் நடத்திய ’ஷேக் ரஸ்ஸல் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2020’ ( Sheikh Russel International Air Rifle Championship 2020) போட்டியின் பெண்கள் பிரிவில், இந்தியாவின் இளவேனில் வாலறிவான் (Elavenil valarivan) தங்கம் வென்றுள்ளார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஷாகு துஷார் மானெ (Shahu Tushar Mane) வெள்ளி வென்றுள்ளார்.

உலகிலேயே முதன்முறையாக கோவிட்-19 மாற்று வீரராக நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் களமிறங்கி சாதனை படைத்துள்ளார் .நியுசிலாந்து நாட்டின் மாகாணங்களுக்கு இடையே ப்ளங்கட் ஷீல்ட் கோப்பைக்கான போட்டியில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email: