நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 28-29 October 2020

Current Affairs for TNPSC Exams 28-29 October 2020

தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 28-10-2020 அன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், புதிதாக சட்டப்படிப்பு முடித்து, வறுமை நிலையில் இருக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . மேலும், டாக்டர் சுதா சேஷய்யன்-எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், மத்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டாக்டர் சண்முகம் சுப்பையா - கே.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் உள்ளிட்டோர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

o கூ.தக. : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-இல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 2018-இல் மதுரை தோப்பூரில் இடம் தோ்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ. 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது.

இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையின் மூலம் 6 லட்சம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியா

பிணந்தின்னிக் கழுகு / பாறுக் கழுகு ( Vulture) பாதுகாப்பு மையங்கள் உத்தரப்பிரதேசம், திரிபுரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் அமையவுள்ளதாக தேசிய வனவிலங்குகள் வாரியம் (National Board for Wildlife) அறிவித்துள்ளது.

காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலையை (Minimum Support Price (MSP)/Base Price) நிர்ணயித்துள்ள முதல் மாநிலம் எனும் பெருமையை கேரளா பெற்றுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக சர்வதேச விமான பயணிகளுக்கு இ-போர்டிங் வசதி ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸின் சர்வதேச விமானங்களில் இந்த சேவை அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக ஹைதராபாதில் இருந்து வெளியேறும் சர்வதேச விமான பயணிகள், காகிதம் அல்லாமல் அனைத்து கோப்புகளையும் மிண்ணனு மூலம் காண்பித்து பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளதாக லண்டனைச் சேர்ந்த வர்கி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் சீனா உள்ளது. கானா இரண்டாவது இடத்திலும் சிங்கப்பூர் 3-வது இடத்திலும் உள்ளன. கனடா மற்றும் மலேசியாவுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகளுக்கான சுயசார்பு கடனுதவித் திட்டத்தின் (PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi) scheme) அதிக எண்ணிக்கையில் கடனுதவி வழங்கிய மாநிலங்களில் முதல் மூன்று இடங்களை முறையே உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் பெற்றுள்ளன.

வெளிநாட்டு உறவுகள்

மூன்றாவது, இந்தியா -அமெரிக்கா நாடுகளின் 2+2 பேச்சுவார்த்தை புது தில்லியில் 27-10-2020 அன்று நடைபெற்றது.

பார்சல் தொடர்பான சுங்கத் தகவல்களை எலக்ட்ரானிக் முறையில் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தபால் துறைகள் இடையே ஒப்பந்தம் 27-10-2020 அன்று கையெழுத்தாகியுள்ளது.

ராணுவத் தொழில்நுட்பங்கள், புவிசாா் வரைபடங்கள் ஆகியவற்றைப் பகிா்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் 27-10-2020 அன்று கையெழுத்திட்டுள்ளன.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பலுசிஸ்தானை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து சவூதி அரேபியா நீக்கியுள்ளது. இதன் மூலம், கில்கிட் மற்றும் பலுசிஸ்தான் என்று அழைக்கப்படுபவை உட்பட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை சவுதி அரேபியா வலியுறுத்தி உள்ளது.

மலபார் கடற்படை ஒத்திகை 2020” (Malabar Naval Exercise)ல் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா நாடுகளுடன் இந்த ஆண்டில் , புதிதாக ஆஸ்திரேலியா நாடும் இணையவுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ. நா. கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய தினங்கள்

சர்வதேச அனிமேஷன் தினம் (International Animation Day) - அக்டோபர் 28

இந்திய காலாட்படை தினம் (Infantry Day) - அக்டோபர் 27

உலக ஒலி ஒளி பாரம்பரிய தினம் (World Day for Audiovisual Heritage) - அக்டோபர் 27

விருதுகள்

ஐ.நா. உலக பருவநிலை செயல்பாட்டு விருது 2020’ (UN Global Climate Action Award) உலக இமாலய பயண ( Global Himalayan Expedition) அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம்

நிசார் மிஷன்” ( NISAR - NASA-ISRO Synthetic Aperture Radar)என்ற பெயரில் இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாஷா விண்வெளி ஆய்வு மையங்களின் கூட்டு ரேடார் இமேஜிங் செயற்கைக் கோள் 2022 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக இரு நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன. இரட்டை அதிர்வெண்ணைப் பயன்படுத்தும் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளானது, பனிக்கட்டி உருகுதல் போன்ற சுற்றுசூழல் பிரச்சனைகள் , சுனாமி , பூகம்பங்கள், நிலச்சரிவு மற்றும் எரிமலைகள் போன்ற பூமியின் மிகவும் சிக்கலான இயற்கை செயல்முறைகளை அளவிடும். புவியோடு பகுதியின் பரிணாமம் மற்றும் நிலை பற்றியும் இந்த செயற்கைக்கோள் ஆய்வு செய்யும்.இந்த திட்டத்திற்காக நாசா 808 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், இந்தியா 110 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளன.

நிலவில் சூரிய ஒளி படும் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை அமெரிக்காவின் தேசிய விண்கல மற்றும் விண்வெளி ஆய்வு மையம் (நாசா) 26-10-2020 அன்று உறுதி செய்துள்ளது.

o நாசாவின் பறக்கும் ஆய்வக விமானமான சோஃபியா (Stratospheric Observatory for Infrared Astronomy (SOFIA)) மேற்கொண்ட ஆய்வில் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

o சந்திரனின் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள, பூமியிலிருந்து தெரியும் மிகப் பெரிய பள்ளங்களில் ஒன்றான ‘கிளாவியஸ்’ பள்ளத்தில் நீரின் மூலக்கூறுகளை சோஃபியா கண்டறிந்துள்ளது.

கூ.தக. : இந்தியாவின் சந்திரயான் -1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டில் சந்திரனின் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீரைக் கண்டுபிடித்தது. இருப்பினும், ஆராய்ச்சியாளர்களால், அது நீரின் மூலக்கூறா அல்லது ஹைட்ராக்சில் மூலக்கூறா என கணிக்க முடியவில்லை.தற்போது நிலவில் தண்ணீர் இருப்பை நாசா உறுதி செய்திருக்கிறது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!