TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

TNPSC குரூப் IV & VAO 2021 Test Batch

குரூப் 4 & VAO 2021 தேர்விற்கான முழு பாடத்திட்டத்தையும் திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 120 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்)

Download Test Schedule (Tamil)
About Test Batch | Join Now

TNPSC Current Affairs 3 October 2020

Current Affairs Today 3-10-2020

தமிழ்நாடு

☞ தமிழக மீனவர்களுக்கான கிசான் கிரெடிட் கார்டு கடன் திட்டத்தை (Kisan credit card loan scheme for fishermen in TamilNadu)  இந்தியன் வங்கி ( Indian Bank  ) 1-10-2020 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 7% வட்டி விகிதத்துடன் பணி மூலதனமாக ரூ .2 லட்சம் வரை கடன்களைப் பெற முடியும். இந்த கடன் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும். கடன் வாங்குபவர்களுக்கு ரூபாய் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

இந்தியா

☞ 4வது உலக பெண்கள் மாநாடு - பீஜிங் +25 ( Fourth World Conference on Women (FWCW) – Beijing +25 ) ல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இராணி 1-10-2020 அன்று இணையவழியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

☞ ஆயுஷ் கிரிட் திட்டம் (AYUSH Grid Project) :  ஆயுஷ் துறையில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும், பல்வேறு முக்கிய சுகாதார தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தவும், ஒட்டுமொத்த துறைக்கும் விரிவான தகவல் தொழில்நுட்ப முதுகெலும்பை உருவாக்குவதற்காக 2018-இல் ஆயுஷ் கிரிட் திட்டம் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்த ஆயுஷ் துறையின் டிஜிட்டல் மயமாக்கல் அனைத்து மட்டங்களிலும் சுகாதார சேவகளை வழங்குதல், ஆராய்ச்சி, கல்வி, சுகாதார திட்டங்கள் மற்றும் மருந்து கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கும்.  

☞ மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் நடைபெறும் ‘வைபவ்’ (Vaishwik Bhartiya Vaigyanik (VAIBHAV) Summit 2020) என்னும் கல்வி மேம்பாடு தொடா்பான உச்சி மாநாடு, 2-10-2020 அன்று தொடங்கி 30-10-2020 வரையில் நடைபெறுகிறது.  உலகின் பல்வேறு பகுதியிலுள்ள கல்வியாளா்களும் ஆராய்ச்சியாளா்களும் காணொலி வாயிலாக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில், பிரதமா் நரேந்திர மோடியும் காணொலி வாயிலாக கலந்து கொண்டு 2-10-2020 அன்று இதனைத் தொடக்கி வைத்தார்.

☞ ‘இண்டியா ஒன்’ போயிங் 777-300இஆா் விமானம் :  குடியரசுத் தலைவா், பிரதமா் போன்றவா்கள் பயணிக்க நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘இண்டியா ஒன்’ போயிங் 777-300இஆா் விமானம்  விவிஐபிகளை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு குழு(எஸ்பிஜி)வின் முழு ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்டுள்ளன. 

வெளிநாட்டு உறவுகள்

☞ “ஃபோங்கோசாகர்” (Bongosagar) என்ற பெயரில், இந்தியா - வங்காளதேச நாடுகளின் கடற்படைகளின் கூட்டு இராணுவ ஒத்திகை 3-10-2020 முதல் மூன்று நாட்களுக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நடைபெறுகிறது. 

☞ மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்தநாளையொட்டி 41 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பள்ளிப் பேருந்துகள் ஆகியவற்றை நேபாள நாட்டுக்கு இந்தியா நன்கொடையாக அளித்துள்ளது.

உலகம் 

☞ அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரில் 6.5 சதவீத்தினா் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

☞ பிரிட்டனில்  71 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சூப்பா் மாா்கெட் நிறுவனமான ஆஸ்டாவை   இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கோடீஸ்வர சகோதரா்களான குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட  மோஷின் மற்றும் ஷுபோ் இஸா ஆகியோர் கையகப்படுத்தவுள்ளனா்.

முக்கிய தினங்கள்

☞ முதலாவது, உலக அஞ்சல் அட்டை தினம் (World Postcard Day)   - அக்டோபர் 1 

அறிவியல் தொழில்நுட்பம் 

☞ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO)  தனது  வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான “சுக்ரயான் -1” (“Shukrayaan-1”) திட்டத்தை பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையத்துடன் (CNES- National Centre for Space Studies; French) இணைந்து  2025 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்படுத்த, பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையம் மற்றும் ரஷியாவின் ரோஸ்கோஸ்மோஸ் மற்றும்  லாட்மோஸ் (LATMOS (Atmospheres, Milieux, Observations Spatiales Laborator) ) இணைந்து உருவாக்கியுள்ள “VIRAL” (Venus Infrared Atmospheric Gases Linker / வெள்ளி அகச்சிவப்பு வளிமண்டல வாயு இணைப்பான்) எனும் கருவியை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தேர்வு செய்துள்ளது. 

☞ சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களை ஏற்றிக் கொண்டு ‘கல்பனா சாவ்லா’ விண்கலத்தை விண்ணில் செலுத்தும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

கூ.தக. : 

    • சா்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவைப்படும் பொருள்களை ஏற்றிக் கொண்டு, தனது ‘சிக்னஸ்’ ராக்கெட் மூலம் விண்கலனை 1-10-2020 அன்று  விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டிருந்தது.
    • அந்த விண்கலத்துக்கு, கடந்த 2003-ஆம் ஆண்டு விண்வெளி விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயரிடப்பட்டிருந்தது.
    • வா்ஜீனியா மாகாணம், வாபாப்ஸ் தீவிலுள்ள ஏவுதளத்திலிருந்து அந்த விண்கலம் ஏவப்படுவதாக இருந்தது.எனினும், கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

விருதுகள்

☞ மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் (Mahatma Gandhi National Foundation(MGNF) )  ”காந்தி விருது 2020” (Gandhi Award 2020) , ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்  சஞ்சய் சிங்கிற்கு (Sanjay Singh) அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூ.தக. : மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் தற்போதைய தலைவர் - எபி ஜெ ஜோஸ் (Eby J Jose) 

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email: