-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 6 October 2020

TNPSC Current Affairs 6 October 2020

தமிழகம்

மாமல்லபுரத்தில் ”சுவாதேஷ் தா்ஷன் திட்டத்தின்” கீழ் சுற்றுலா தகவல் கருத்தியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பூம்புகாா் நிறுவனம் உலோக கன்டெய்னரில் பாரம்பரிய வடிவமைப்பில் குளிா்சாதன வசதியுடன் இதை அமைத்துள்ளது. இங்கு தொடுதிரை கணினிகள் சிற்ப படங்கள் பிற சுற்றுலா பகுதிகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தொடுதிரையை பயன்டுத்தி மாமல்லபுரத்தில் உள்ள சிற்ப இடங்களை எவ்வாறு சுற்றிப்பாா்க்கலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்கள் பற்றிய விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் டிராக்டா்கள் உள்ளிட்ட இயந்திரங்களை வழங்கும் திட்டத்தை முதல்வா் பழனிசாமி 5-10-2020 அன்று தொடங்கி வைத்தாா்.

இந்தியா

நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணையை செலுத்தும் அமைப்பான ‘ஸ்மாா்ட்’ (Supersonic Missile Assisted Release of Torpedo (SMART)), ஒடிஸாவின் அப்துல் கலாம் தீவில் 5-10-2020 அன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வடிவமைத்துள்ள ஒலியின் வேகத்தைவிட அதிவிரைவாக இலகுவகை டார்பிடோ ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்பானது, நீா்மூழ்கிக் கப்பல் உள்ளிட்ட நீருக்குள் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளை செலுத்தும் திறன் கொண்டது. அந்த ஏவுகணைகளை போா் விமானங்களில் இருந்தோ அல்லது போா்க் கப்பல்களில் இருந்தோ செலுத்த முடியும். ஸ்மாா்ட் ஏவுகணை செலுத்து அமைப்பானது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது கூடுதல் சிறப்பாகும்.

சிக்கிம் மாநிலத்தின் “தாலி குர்சானி” ( “Dalle Khursani” ) எனும் சிகப்பு செர்ரி மிளகாய்க்கு புவிசார் குறியீடு (geographical indication (GI) ) வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின், முதல் முழுவதும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் விமானநிலையம் எனும் பெயரை புதுச்சேரி விமான நிலையம் பெற்றுள்ளது.

முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தோ்தலில் தபால் வாக்குப் பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகளை தோ்ல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, தபால் வாக்குப் பதிவை தோ்வு செய்யும் 80 வயதிற்கும் மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, தோ்தல் வாக்குப் பதிவு நாள் அறிவிக்கப்பட்ட 5 நாள்களுக்குள் தபால் வாக்குப் பதிவுக்கான 12டி படிவத்தை (Form- 12-D)) வாக்குச் சாவடி அதிகாரி (Booth Level Officer (BLO) ) எடுத்துச் சென்று, அதனைப் பூா்த்தி செய்து பெற்று வர வேண்டும். பின்னா், அந்தப் படிவத்தை தோ்தல் நடத்தும் அதிகாரி முன்பாக சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இந்தியாவிற்கான ஆஃப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் தூதராக ( Consul General of Afghanistan) சகியா வர்தக் ( Zakia Wardak) நியமிக்கப்பட்டுள்ளார்.

’செஃபி’ (SEBI)எனப்படும் ‘இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்’ (Securities and Exchange Board of India) முதல் முழுநேர பெண் உறுப்பினர் எனும் பெருமைக்குரிய மாதபி பூரி புச் (Madhabi Puri Buch) ன் பதவிகாலம் 4-10-2020 முதல் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

உலக விலங்குகள் தினம் (World Animal Day) - அக்டோபர் 4

உலக விண்வெளி வாரம் (World Space Week) - 4-10 அக்டோபர் 2020 | மையக்கருத்து 2020- வாழ்க்கையை மேம்படுத்தும் செயற்கைக் கோள்கள் (Satellites Improve Life)

விருதுகள்

”கோவிட் போராளி விருது 2020” (Covid Crusader Award-2020) பெற்றுள்ள முதல் இந்திய அரசு அதிகாரி எனும் பெருமையை மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் ஷாஹால் (Iqbal Singh Chahal) பெற்றுள்ளார். கோவிட் போராளி விருது, இந்திய - அமெரிக்க வர்த்தக அமைப்பினால் (Indo-American Chamber of Commerce(IACC)) வழங்கப்படுகிறது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2020 (Nobel Prize in Physiology or Medicine) , கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் சி வைரஸ் பரவல் மூலத்தைக் (Hepatitis C virus) கண்டறிந்ததற்காக, ஹார்வே ஜே. ஆல்டர் (Harvey J. Alter) ,அமெரிக்கா, மைக்கேல் ஹாஃப்டன் (Michael Houghton), இங்கிலாந்து மற்றும் சார்லஸ் எம். ரைஸ் (Charles M. Rice), அமெரிக்கா ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில், ஹார்வே ஜே. ஆல்டர், வைரஸ் பரவும் விதம் குறித்தும், மைக்கேல் ஹாஃப்டன் ஹெப்படைட்டிஸ் சி வைரஸின் ஜீனோமை தனிமைப்படுத்தியும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், 'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' மட்டுமே ஹெப்படைடிஸை ஏற்படுத்தும் என்பதற்கான இறுதி முடிவை சார்லஸ் எம். ரைஸ் உறுதி செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூ.தக. : உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

அறிவியல் தொழில்நுட்பம்

செவ்வாய் கிரகம் 6-10-2020 அன்று பூமிக்கு அருகில் வருகிறது. செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தின்போது, அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை 6-10-2020 அன்று அடைகிறது.அதாவது, பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ. ஆகும். இதில், இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும்.இந்திய நேரப்படி, 6-10-2020 அன்று இரவு 7.47 மணிக்கு இந்த அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. அதன்பிறகு, இன்னும் 13 ஆண்டுகள் கழித்துத்தான் இந்த நிகழ்வு உருவாகும்.

”ஆனிக்மாசான்னிடே” (“Aenigmachannidae”) என்ற பெயரில் எலும்பு மீனின் (Bony Fish) புதிய வகையை கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.


கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.