Post Top Ad

TNPSC குரூப் II, IIA 2021 Test Batch

45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

Download Test Schedule | Join Now
Tamil Medium | English Medium

TNPSC குரூப் IV & VAO 2021 Test Batch

Download Test Schedule | Join Now
Tamil Medium (120 தேர்வுகள்) | English Medium (100 Tests)

TNPSC Current Affairs 7 October 2020

TNPSC Current Affairs 7 October 2020

இந்தியா

தெருவோர உணவு விற்பனையாளர்களுக்கு தங்களது உணவுப் பொருட்களை ஆன்லைன் வழியாக விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காக ‘ஸ்விக்கி’ (Swiggy) உணவு டெலிவரி நிறுவனத்துடன் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ’பிரதமர் தெரு விற்பனையாளர் சுயசார்பு நிதி (PM SVANidhi - Prime Minister Street Vendor’s AtmaNibhar Nidhi (PM SVANidhi) மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது, முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஆமதாபாத், சென்னை, இந்தூர் மற்றும் வாரணாசி நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.

☞உத்தரபிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 115 ஆண்டுகள் பழமையான நவுகார்க் இரயில் நிலையத்திற்கு (Naugarh railway station) சித்தார்த்நகர் ரயில் நிலையம் (Siddharthnagar railway station) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிறு வர்த்தகர்களுக்கு டிஜிட்டல் சேவைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ”சிறியதை வலுவாக்குவோம்” (‘Make Small Strong’’) என்ற பெயரிலான பரப்புரையை கூகுள் இந்தியா (Google India ) நிறுவனம் Zoho, Instamojo, Dunzo மற்றும் Swiggy நிறுவனங்களின் ஒத்துழைப்பில் 30-9-2020 அன்று தொடங்கியுள்ளது.

”நமஸ்தே டிஜிட்டல்” (Namaste Digital) என்ற பெயரில், இந்தியாவில், சிறு, குறு வர்த்தகர்களுக்கான டிஜிட்டல் சேவைகளைபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தொலைக்காட்சி நிகழ்வை கூகுள் இந்தியா ((Google India )) தூர்தர்ஷனுடன் (Doordarshan) இணைந்து நடத்துகிறது.

இந்தியாவின் முதல் இயற்கை நறுமணப்பொருள் விதை பூங்காக்கள் (Organic Spices Seed Parks) குஜராத் மாநிலத்தின் பாதான் (Patan) மற்றும் பனஸ்கந்தா (Banaskantha) ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன. இந்த பூங்காக்களில் சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் விதைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

’டிஜிட்டல் சேவா சேது திட்டம்’ (Digital Seva Setu Programme) என்ற பெயரில் கிராம பஞ்சாயத்துக்களை கம்பிவட இணையம்(fibre network) மூலமாக இணைப்பதற்கான திட்டத்தை குஜராத் மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டமானது, மத்திய அரசின் ‘பாரத்நெட் திட்டத்தின்’ (BharatNet project) கீழ் செயல்படுத்தப்படுகிறது.

”ஐமெடிக்ஸ்”(iMediX) என்ற பெயரில் கோவிட்-19 நோயாளிகளுக்கான தொலைமருத்துவ சேவைக்கான தொழில்நுட்பத்தை (Telemedicine Homecare Technology for COVID-19) ஐ.ஐ.டி.காரக்பூர் (IIT Kharagpur) உருவாக்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பானது சோதனை முயற்சியாக மேற்கு வங்காள மாநிலத்தின் ‘ஸ்வஸ்த்யா பவனில்’ (Swasthya Bhawan) செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

டிராக்டர்கள் மற்றும் கட்டுமான உபகரண வாகனங்களுக்கான புதிய கார்பன் வெளியீட்டு விதிமுறைகளை (emission norms) அக்டோபர் 2021 வரை இந்திய அரசு நீட்டித்துள்ளது.

ரவி சோப்ரா குழு (Ravi Chopra Committee) : இந்து புனித தலங்களான கேத்ரிநாத்(Kedarnath), பத்ரிநாத்(Badrinath), கங்கோத்ரி(Gangotri) மற்றும் யமுனோத்திரி (Yamunotri) ஆகியவற்றை சாலை வழியாக இணைப்பதற்கான சார்தாம் பரியோஜனா (Chardham Pariyojana) திட்டத்தில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறுதல்களைப் பற்றி ஆராய ரவி சோப்ரா தலைமையிலான குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

உலகம்

சிங்கப்பூரில் கரோனா நெருடிக்கயால் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துபோனதால், அந்த நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத் தொகை வழங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மாலத்தீவு முன்னாள் துணை அதிபா் அகமது அடீபுக்கு, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில், அந்த நாட்டு குற்றவியல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

அக்டோபர் 5, 2020 அன்று நடைபெற்ற, உலக சுகாதார அமைப்பின் (World Health Organization (WHO)) நிர்வாகக் குழுவின் ( Executive Board ) 5 வது சிறப்பு அமர்வுக்கு, அக்குழுவின் தற்போதைய தலைவர் (Chairman of the Executive Board of the World Health Organization (WHO)) என்ற முறையில், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார் இந்த அமர்வின் முக்கிய நோக்கம் கோவிட்-19 தடுப்பிற்கான உலக சுகாதார சட்டமன்றத்தின் ( (World Health Assembly) ) தீர்மானம் எண் 73.1 ன் விதிமுறைகளை முழுமையாகவும் திறமையாகவும் செயல்படுத்துவதை உறுதி செய்வதாகும்.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூடுகை (Quad foreign ministers meet) 6-10-2020 அன்று டோக்கியோ நகரில் நடைபெற்றது, இந்தியாவின் சார்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

வெளிநாட்டு உறவுகள்

”பாங்கோசாஹர்” (Bongosagar) என்ற பெயரில் இந்தியா-வங்காளதேச நாடுகளிடையே இரண்டாவது, கூட்டு கடற்ப்டை ஒத்திகை 3-10-2020 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையேயான, மூன்றாவது, ”கோர்பட்” (Coordinated Patrol (CORPAT) ) என்ற பெயரிலான கூட்டு கடலோர ரோந்து பயிற்சி 4-5 அக்டோபர் 2020 தினங்களில் நடைபெற்றது.

நியமனங்கள்

பாரத ஸ்டேட் வங்கியின் (State Bank of India (SBI)) தலைவராக தினேஷ் குமார் காராவை (Dinesh Kumar Khara) மத்திய அரசு 6-10-2020 அன்று நியமித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (monetary policy committee) புதிய உறுப்பினர்களாக ஆஷிமா கோயல்(Ashima Goyal), சஷங்கா பைட் (Shashanka Bhide) மற்றும் பேராசிரியர் ஜெயந்த் வர்மா (Jayanth Varma) ஆகியோர் அடுத்த நான்கு ஆண்டுகாலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழுவில் இதர அலுவல்ரீதியான உறுப்பினர்களாக (ex-officio members ) மைக்கேல் பத்ரா மற்றும் ஜானகி ராஜ் ஆகியோர் உள்ளனர்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் (Bureau of Civil Aviation Security (BCAS)) இயக்குநர் ஜெனரலாக (Director General) எம்.ஏ.கணபதி (M.A. Ganapathy) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

கங்கை நதி டால்பின்கள் தினம் (Ganga River Dolphin Day) - அக்டோபர் 5

கூ.தக. : இந்த ஆண்டு (2020) கங்கை நதி டால்பின்கள் தினமத்தையொட்டி, ‘எனது கங்கை , எனது டால்பின்’ (“My Ganga My Dolphin campaign”) எனும் பரப்புரை, தேசிய கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் , இந்திய வனவிலங்குகள் நிறுவனம் ஆகியவற்றின் மூலம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்றது.

விருதுகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவன கணிப்பை கண்டுபிடித்ததற்காக ரோஜர் பென்ரோசுக்கும் (இங்கிலாந்து), விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் ஜென்செல் (ஜெர்மனி), ஆன்ட்ரியா கெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அண்டவெளியில் காணப்படும் கருந்துளைகள், விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சாா்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவானவை என்று கணித முறையில் நிரூபித்தமைக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸ், இந்த ஆண்டு இயற்பியல் நோபல் பரிசின் பாதியை (50 சதவீதம்) பெறுகிறார்.
  • நமது பால்வெளி மண்டலத்தின் மையமாக கருந்துகள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னதற்காக விஞ்ஞானிகள் ரெயின்ஹார்டு ஜென்சல்லும் (ஜெர்மனி), ஆண்ட்ரியா கெஸ்சும் (அமெரிக்கா) தலா 25 சதவீதம் பெறுகிறார்கள்.

அறிவியல் தொழில்நுட்பம்

”ஃபாரம் சித்தி” (PARAM-Sidhi) என்ற பெயரில், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக திறன்கொண்ட செயற்கை நுண்ணறிவு சூப்பர் கம்பியூட்டரை (HPC-AI (High Performance Computing and Artificial Intelligence) supercomputer), அதிநவீன கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் Centre for Development of Advanced Computing (C-DAC), 5-10-2020 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளது. திரு.அபிஷேக் தாஸ் (Abhishek Das) தலைமையிலான குழுவினர் இந்த கணிணியை உருவாக்கியுள்ளனர்.


No comments:

Post a Comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email: