நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 8-9 October 2020

Current Affairs for TNPSC Exams 8-9 October 2020

தமிழகம்

கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ.399.93 கோடி வரப்பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் மேம்பட்ட உற்பத்தி மையம் (AMHUB - Advanced Manufacturing hub) உலக பொருளாதார மன்றம் மற்றும் ’கைடன்ஸ் தமிழ்நாடு ’ (Guidance Tamil Nadu) எனப்படும் தமிழக அரசின் முதலீட்டு வளர்ச்சி முகமையுடன் அமைப்புடன் இணைந்து தமிழ்நாட்டில் நிறுவப்படவுள்ளது.

இந்தியா

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார். ராம்விலாஸ் பாஸ்வான். பிகார் மாநிலத்தின் லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவராக இருந்தவர்.

☞ என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகங்களை இந்திய சைகை மொழியாக ( Indian Sign Language(ISL)) மாற்றுவதற்காக, புது தில்லியில் அமைந்துள்ள, இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ( Indian Sign Language Research and Training Center (ISLRTC)) மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (National Council of Educational Research and Training (NCERT) ) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

‘India PV Edge 2020’ என்ற பெயரில், இந்தியாவில் ‘ஒளிமின்னழுத்த’ (Photovoltaics (PV)) வாய்ப்புகளைக் குறித்த உலகளாவிய மாநாடு இணையவழியில் 6-10-2020 அன்று நடைபெற்றது.

‘விக்ராஹா’ (‘Vigraha’) என்ற பெயரிலான, இந்திய கடலோர காவல்படையின் ஏழாவது கடல் ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel (OPV)) சென்னை கட்டுப்பள்ளி துறைமுகத்தில் 6-10-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை லார்சன் & டூப்ரோ (எல் & டி) உருவாக்கியுள்ளது. இதனை எல் & டி (Larsen & Toubro (L & T)) நிறுவனம் கட்டமைத்துள்ளது.

’சர்வதேச பார்கோடு ஆஃப் லைஃப்’ (International Barcode of Life (iBOL)) எனப்படும் கனடா நாட்டைச் சேர்ந்த சுற்றுசூழல் சார்ந்த இலாப நோக்கற்ற நிறுவனத்துடம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India (ZSI)) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவிலுள்ள உயிரினங்கள் அவற்றின் மரபணுவை அடிப்படையாகக் கொண்டு டி.என்.ஏ. பார்கோடு (DNA barcoding) செய்யப்படவுள்ளன.

ஸ்டாக்ஹோம் மாநாட்டின் (Stockholm Convention) கீழ் பட்டியலிடப்பட்டுள்ள ஏழு இரசாயனங்களின் பயன்பாட்டை தடை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது . அந்த இரசாயனங்களின் பெயர்கள் வருமாறு, (i) குளோர்டெகோன் (Chlordecone) , (ii) ஹெக்ஸாப்ரோமோபிபெனைல்(Hexabromobiphenyl,), (iii) ஹெக்ஸாப்ரோமோடிபெனைல் ஈதர்(Hexabromodiphenyl ether) மற்றும் ஹெப்டாப்ரோமோடிபெனைலேதர்(Heptabromodiphenylether), (iv) டெட்ராப்ரோமோடிபினைல் ஈதர் (Tetrabromodiphenyl ether) மற்றும் பெண்டாப்ரோமோடிபினைல் ஈதர் (Pentabromodiphenyl ether), (v) பென்டாக்ளோரோபென்சீன் (Pentachlorobenzene), (vi) ஹெக்ஸாப்ரோமோசைக்ளோடோடேகேன் (Hexabromocyclododecane) மற்றும் (vii) ஹெக்ஸாக்ளோரோபூடாடின் (Hexachlorobutadiene) ஆகியவையாகும்.

  • கூ.தக. : ஸ்டாக்ஹோம் மாநாடு (Stockholm Convention) என்பது கேடு விளைவிக்கும் இராசாயனங்களின் பயன்பாட்டிலிருந்து இருந்து மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான ஒரு உலகளாவிய ஒப்பந்தமாகும்.
  • இந்தியா 2006 இல் ஸ்டாக்ஹோம் மாநாட்டை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மக்கள் சேவையில் எந்த வித இடைவெளியும் இல்லாமல் தனது 20’வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார்.முதலமைச்சர், பிரதமர் பதவிகள் என ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசின் தலைவராக தொடர்ந்து 19 ஆண்டுகளை நிறைவு செய்து 20 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள பிரதமர் மோடி, புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 2001 அக்டோபர் 7-ம் தேதி முதன்முறையாக குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் அமர்ந்த மோடி, தொடர்ந்து 2002, 2007 மற்றும் 2012 - என மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக தேர்வானார். மூன்றாம் முறையாக முதலமைச்சராக இருந்த போது, 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மோடி, நாட்டின் 14-வது பிரதமரானார். 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்ற மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வானார். இதன்மூலம், அரசின் தலைவராக மக்கள் சேவையில் இன்று 20வது ஆண்டில் பிரதமர் மோடி அடியெடுத்து வைத்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 88.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து 25.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் கவுதம் அதானியும் அவரைத் தொடர்ந்து 20.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் சிவ்நாடாரும் உள்ளனர்.

நாட்டில் முதன்முறையாக கேரளத்தில் விவசாயிகளுக்காக நல நிதிய வாரியம் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் தலைவராக டாக்டர் பி. ராஜேந்திரன் என்பவர் நியமிக்கப்படவுள்ளார்.

  • விவசாயம் மட்டுமல்லாமல், தோட்டப்பயிர், மருத்துவ தாவர சாகுபடி
  • நாற்றங்கால் மேலாண்மை, மீன், அலங்கார மீன், தேனீக்கள், பட்டுப்புழுக்கள், கோழி, வாத்துகள், ஆடுகள், முயல்கள், கால்நடைகள் மற்றும் நிலத்தை பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவற்றிற்காக இந்த நலவாரியம் அமைக்கப்பட உள்ளது.
  • இந்த வாரியத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுவதற்கு ரூ.100 கொடுத்து உறுப்பினராகி பின்னர் மாத சந்தாவாக ரூ.100 கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் தவறாமல் சந்தா கொடுக்க இயலாத விவசாயிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் சந்தாவை செலுத்தி நலவாரியத்தின் பயன்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு சார்பிலும் ஒவ்வொரு விவசாயியிக்கும் மாதம் ரூ.250 வரை ஒதுக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தின்கீழ் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட 10 செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், 6 மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை இந்தியாவில் புதிய ஆலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்பு அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • இத்திட்டத்தில் இந்தியாவைச் சோ்ந்த லாவா, மைக்ரோமேக்ஸ், பேட்ஜெட் எலெக்ட்ரானிக்ஸ், யுடிஎல், ஆம்டிமஸ் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ரூ.15 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் மட்டுமே இந்த நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
  • மேலும், இவற்றில் 60 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே உணவு தயாரிப்பு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐஆா்சிடிசி) இணைந்து வாடிக்கையாளா்களுக்கு ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வசதியை அளிக்க உள்ளதாக ‘அமேசான் இந்தியா’ அறிவித்தது.அமேசான் செயலி மூலம் விமான மற்றும் பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.

”ஆபரேஷன் 'பி-ஹன்ட்' “ : குழந்தைகளின் ஆபாச காணொளி வெளியிடும் நபர்களை கண்டுபிடிக்க, கேரள காவல்துறையின் மூலம் ஆபரேஷன் 'பி-ஹன்ட்' என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே இணைய பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இணைய பாதுகாப்புத் துறையில் திறன் மேம்படுத்துதல், முக்கிய உள்கட்டமைப்புகளை பாதுகாத்தல், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் அச்சுறுத்தல் மற்றும் இணைய வழிக் குற்றங்களை தடுப்பதற்கான வழி முறைகள், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான கூட்டு முயற்சிகள் ஆகியவற்றை இரு நாடுகளின் பரஸ்பர விருப்பத்திற்கேற்ப மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

உலகம்

ஜோர்டான் நாட்டின் புதிய பிரதமராக பிஷ் கசாவ்னேவை (Bishr al-Khasawneh) அந்நாட்டின் மன்னர் அப்துல்லா நியமித்துள்ளார்.

”சிர்கான்” (Tsirkon (Zircon)) என்று பெயரிடப்பட்டுள்ள ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை (Hypersonic Cruise Missile) ரஷியா 7-10-2020 அன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஒலியை விட வேகமாகப் பயணிக்கும் இந்த ஏவுகணை 450 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கவல்லது.

2,000 ஆண்டுகளுக்கு முன்பு வெசுவியஸ் எரிமலை வெடிப்பில் பலியான மனிதனின் மண்டை ஓட்டில் அப்படியே மூளை செல்கள் இருப்பதை ஹெர்குலேனியம் என்ற பண்டைய ரோமானிய நகரத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஃபின்லாந்தின் ‘ஒரு நாள் பிரதமராக’ 16 வயதுப் பெண் ஆவா முா்தோ பொறுப்பேற்றுக் கொண்டார். பாலின சமநிலை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக, ‘பெண் குழந்தைகளுக்கான சா்வதேச தினத்தை’ (அக்டோபா் 11) முன்னிட்டு, ஃபின்லாந்தில் பிரதமா் சன்னா மரீன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

குவைத் தேசிய பாதுகாப்புப் படையின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஷேக் மெஷால் அல்-அகமது அல்-ஜாபா் அல்-சபா, அந்த நாட்டின் புதிய பட்டத்து இளவசராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

பொருளாதாரம்

இந்தியாவில் 2020-2021 ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியி ல் கூர்மையான சரிவு ஏற்படும் என உலக வங்கி கணித்துள்ளது அது முன்பு கணிக்கபட்ட 3.2 சதவீதத்தை விட 9.2 சதவீதமாக அதிகமாக இருக்கும்.

நியமனங்கள்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய மற்றும் 4 வது துணை ஆளுநராக எம்.ராஜேஸ்வர் ரா (M Rajeshwar Rao) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிதி ஒழுங்குமுறைகளுக்கு (Financial regulations) பொறுப்பாக இருப்பார்.

  • கூ.தக. : ரிசர்வ் வங்கியின் சட்டம், 1934 இன் படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். இவர்களில் இருவர் ரேங்க் அடிப்படையிலும், ஒருவர் வணிக வங்கியாளராகவும், ஒருவர் பொருளாதார நிபுணராகவும் இருக்க வேண்டும்.
  • தற்போது, ரிசர்வ் வங்கியின் உள்ள மற்ற 3 துணை ஆளுநர்கள் பிபு பிரசாத் கனுங்கோ(Bibhu Prasad Kanungo), மகேஷ்குமார் ஜெயின் (Mahesh Kumar Jain) மற்றும் மைக்கேல் டெபப்ரதா பத்ரா (Micheal Debabrata Patra).
  • இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர்– சக்தி காந்த தாஸ்
  • இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம்- மும்பை, மகாராஷ்டிரா

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக டாக்டர் கே.எஸ். ஜவஹர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஜெ.வெங்கட்ராமு நியமிக்கப்பட்டுள்ளாா்.அவா் அடுத்த 3 ஆண்களுக்கு இப்பதவியில் இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூ.தக. :

  • இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா்.
  • கிராமப்புற மக்களின் வீடுகளையும் வங்கிச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அஞ்சல் துறை மூலம் நடத்தப்படும் இந்த பேமெண்ட் வங்கிக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலே சேமிக்க முடியும்.
  • நாடு முழுவதும் உள்ள அஞ்சல சேமிப்புக் கணக்குகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பணப்பரிமாற்றம், பல்வேறு வகைக் கட்டணங்களை செலுத்துவது, நேரடி நிதியுதவித் திட்டத்தில் பயன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்த பேமெண்ட் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

முக்கிய தினங்கள்

உலக பருத்தி தினம் (World Cotton Day) - அக்டோபர் 7

  • கூ.தக. : இந்தியாவின் உயர்தர பருத்தி (Premium Cotton) உலக பருத்தி வர்த்தகத்தில் ‘கஸ்தூரி காட்டன்’ (‘Kasturi Cotton’) என்று அறியப்பட உள்ளது.
  • உலகளவில் இந்தியா 2 வது பெரிய பருத்தி உற்பத்தியாளர் மற்றும் உலகின் மிகப்பெரிய பருத்தி நுகர்வோர் ஆகும்.
  • இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6.00 மில்லியன் டன் பருத்தியை உற்பத்தி செய்கிறது, இது உலக பருத்தியில் 23% ஆகும்.
  • உலகின் மொத்த இயற்கை பருத்தி உற்பத்தியில் இந்தியா சுமார் 51% உற்பத்தி செய்கிறது.

உலக கண்பார்வை தினம் (World Sight Day 2020) - அக்டோபர் 8

உலக அஞ்சல் தினம் (World Post Day) - அக்டோபர் 9 (சர்வதேச அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union) தொடங்கப்பட்ட தினத்தில்(9-10-1874) அனுசரிக்கப்படுகிறது.)

கூ.தக. : சர்வதேச அஞ்சல் ஒன்றியத்தின் (Universal Postal Union) தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் (Bern) நகரில் உள்ளது.

☞ இந்திய விமானப்படை தினம் (Indian Air Force Day ) - அக்டோபர் 8

விருதுகள்

‘எா்த்ஷாட் பரிசு’ என்ற பெயரில், சுற்றுச்சூழல் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளுக்கு புதுமையான தீா்வுகளை அளிப்பவா்களுக்கான புதிய பரிசை பிரிட்டன் இளவரசா் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு தலா 10 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.9.48 கோடி) மதிப்புடைய அந்தப் பரிசு அளிக்கப்படும்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2020 அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் (Louise Gluck) என்பவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • கூ.தக. : 1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமான இவரது படைப்புகள் தெளிவுக்கான முயற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ‘அவெர்னோ(Averno)’ (2006) ‘Faithful and Virtuous Night’ (2014) உள்ளிட்ட பல படைப்புகளை தந்துள்ளார்.

வேதியியலுக்கான நோபல் பரிசு 2020, இம்மானுவேல் சர்பென்டியர் (Emmanuelle Charpentier),பிரான்ஸ் மற்றும் ஜெனிபர் டவுட்னா (Jennifer A. Doudna),அமெரிக்கா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், ஒரு செல் அல்லது உயிரினத்தின் மரபணுவில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்வதற்கான (ஜெனோம் எடிட்டிங்) ‘சிஆா்ஐஎஸ்பிஆா்/கேஸ்9’ (CRISPR/Cas9 genetic scissors) எனும் முறையை கண்டுபிடித்ததற்காக வேதியியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீராங்கனை மந்தனாவுக்கு 4-ம் இடம் கிடைத்துள்ளது. மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், 10-ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி 5-ம் இடத்தில் உள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும் இந்திய அணி 2-ம் இடத்திலும் உள்ளன.

அறிவியல் தொழில்நுட்பம்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தட்டான் பூச்சியின் புதைபடிமத்தை மேற்குவங்க விஞ்ஞானிகள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். சித்தோ-கன்ஹோ-பிர்ஷா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உதவி பேராசிரியர் மகாசின் அலிகான் தலைமையிலான மேற்கு வங்கத்தின் நான்கு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சோட்டானக்பூர் பீடபூமியின் வண்டல் பகுதிகளில் புதைபடிவங்களை ஆய்வு செய்து இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!