நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 30-31 October 2020

Current Affairs for TNPSC Exams 30-31 October 2020

தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் லோக் அதாலத் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த என்.வைத்தியநாதன் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் குழு உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

o கூ.தக. : தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவராக உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி உள்ளார்.

நாட்டில் சிறப்பான ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்கு இரண்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

o முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவா் கே கஸ்தூரிரங்கன் தலைமையிலான பொது விவகார அமைப்பானது, நாட்டின் சிறந்த ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சமநிலை, வளா்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிா்வாக செயல்திறன், சூழல் குறியீட்டு திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் வெளியிடப்பட்டுள்ள.

o இந்தப் பட்டியலில் பெரிய மாநிலங்களின் பிரிவில் கேரள மாநிலம் (1.388 குறியீட்டு அலகு) முதலிடத்தையும், தமிழ்நாடு (0.912 குறியீட்டு அலகு) 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.இந்த இரு மாநிலங்களைத் தொடா்ந்து 0.531 குறியீட்டு அலகுடன் ஆந்திரம் 3-ஆம் இடத்தையும், 0.468 குறியீட்டு அலகுடன் கா்நாடகம் 4-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.

o அதேபோல் சிறிய மாநிலங்களின் பிரிவில் கோவா, மேகாலயம், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

o எதிா்மறைப் புள்ளிகளைப் பெற்ற உத்தர பிரதேசம், ஒடிஸா, பிகாா் மாநிலங்கள் பட்டியலில் இறுதி மூன்று இடங்களைப் பிடித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது மத்திய அரசின் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான புதிய புள்ளி விவரங்களை ஆய்வு முடிவுகளின் படி அறியப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் அந்த புள்ளி விவரத்தில் இடம் பெற்றுள்ளன.அதன்படி நாட்டிலேயே தமிழகத்தில் தான் மிகக் குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சைக்கு சராசரியாக ரூ.433 முதல் ரூ.520 வரை செலவாகிறது என்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ரூ.28,412 முதல் ரூ.41,566 வரை செலவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

o இந்தியாவில், கிராமப்புறங்களில் 56% பேர் அரசு மருத்துவமனைகளிலும், 41% பேர் தனியார் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 42% பேர் அரசு மருத்துவமனைகளிலும், 54% பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

o மேலும் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் நோய்த் தொற்று இல்லாத கை கழுவும் மையங்கள் அமைப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதன் படி, கைகளை கை கழுவிய பின் குழாய்களை மூடும் தீநுண்மியால் நோய்த் தொற்று பரவாமல் முன்மாதிரியாகத் தடுக்கும் வகையில் கால் அழுத்தக் கருவி மூலம் கைகளைச் சுத்தம் செய்துகொள்ளும் வகையில் கை கழுவும் மையங்கள் தொண்டு நிறுவனம் பங்களிப்புடன் திருவள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் 20 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

☞ மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 30-10-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இந்தியா

"என் தோழி”/ ”மேரே சாகேலி” (Meri Saheli) என்ற பெயரில் இரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கான திட்டத்தை, இரயில்வே பாதுகாப்பு படை (Railway Protection Force (RPF)) அனைத்து இரயில்வே மண்டலங்களிலும் தொடங்கியுள்ளது.

’இணையதளத்திற்கான பாதுகாப்பு செயலி’ (SECURE APPLICATION FOR INTERNET (SAI)) என்ற பெயரில் பாதுகாப்பான முறையில் குறுஞ்செய்திகள், ஒலி, ஒளி அழைப்புகள் சேவை வழங்குவதற்கான செயலியை இந்திய இராணுவம் உருவாக்கியுள்ளது.

”ஃபெனி பாலம்” (Feni Bridge) : ஃபெனி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த 1.8 கி.மீ. நீளமுடைய பாலமானது, இந்தியாவின், திரிபுரா மாநிலத்திலுள்ள சாப்ரம் எனுமிடத்தையும், வங்காளதேசத்தின் சிட்டகாங்கிலுள்ள ராம்கார்க் எனுமிடத்தையும் இணைக்கிறது.

பீகாரிலுள்ள, ”கபார்த்தல் சதுப்புநிலம்” / “கன்வார் ஜீல்” (Kabartal Wetland / Kanwar Jheel) சதுப்புநிலப் பகுதி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தலமாக சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்கான ‘ராம்சார் மாநாட்டின்’ (Ramsar Convention) மூலம் 16-10-2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

o கூ.தக. : தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, கபார்த்தல் சதுப்புநிலத்துடன் சேர்த்து, இந்தியாவில் மொத்தம் 39 ராம்சார் சதுப்புநிலங்கள் காணப்படுகின்றன.

’பன்னா உயிர்க்கோளக் காப்பகம்’ (Panna Biosphere Reserve) , மத்திய பிரதேசம் யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பு கவுண்சிலின் (UNESCO’s International Coordinating Council (ICC))மனிதன் மற்றும் உயிர்க்கோள அமைப்பு திட்டத்தில் (Man and the Biosphere (MAB) programme) 29-10-2020 அன்று சேர்க்கப்பட்டுள்ளது.

கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை (Anti-Ship Missile) ஐ.என்.எஸ். கோரா (INS Kora) போர்க்கப்பலிலிருந்து வங்காள விரிகுடா கடல் பகுதியில், இந்திய கடற்படை 30-10-2020 அன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது.

நாட்டின் முதல் நீர்வழி விமான சேவையை குஜராத் மாநிலம் கெவாடியாவில் பிரதமர் மோடி அவர்கள் 31-10-2020 அன்று தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை இடையே இந்த விமான சேவை ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது. "உடான்' திட்டத்தின் கீழ், இந்த விமானங்களில் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 1,500 ஆகும்.

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பப்ஜியை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இனி பயன்படுத்த முடியாது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியா பகுதியின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆரோக்கிய வனம், ஆரோக்கிய மையம், ஒற்றுமை வணிக வளாகம் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா ஆகியவற்றை பிரதமர் தொடக்கி வைத்தார்.

o ஆரோக்கிய வனம் திட்டத்தில், 17 ஏக்கர் பரப்பளவில், 380 வெவ்வேறு வகையான 5 லட்சம் தாவரங்கள் இடம் பெற்றுள்ளன.

o ஆரோக்கிய மையத்தில், பாரம்பரிய சிகிச்சை வசதிகள் உள்ளன. இங்குள்ள சாந்திகிரி உடல் நல மையத்தில் ஆயுர்வேதம், சித்தா, யோகா மற்றும் பஞ்சகர்மா அடிப்படையிலான சிகிச்சைகளை அளிக்கப்படும்.

o ஒற்றுமை வணிக வளாகத்தில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை குறிக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான பாரம்பரிய மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

o குழந்தைகளுக்கான ஊட்டசத்து; கண்ணாடி பிரமை:உலகிலேயே முதன் முதலாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான ஊட்டசத்து பூங்கா குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 35,000 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation (SCO)) 19வது பொருளாதார மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர்களின் கூடுகை இணைய வழியில் 28-10-2020 அன்று இந்தியாவின் மூலம் நடத்தப்பட்டது இந்த கூடுகையில் இந்தியாவின் சார்பில், மத்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பியூஸ் கோயல் பியூஸ் கோயல் கலந்து கொண்டார்.

இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சி வங்காள விரிகுடாவில் விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் 3 முதல் 6 நவம்பா் 2020 வரை நடைபெறவுள்ளது .இதைத் தொடா்ந்து 2-ஆவது கட்டமாக அரபிக் கடலில் நவம்பா் 17 முதல் 20-ஆம் தேதி வரை இந்த நாடுகளின் கடற்படைகள் மீண்டும் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றன.

சர்வதேச நிகழ்வுகள்

தற்போதைய சீன அதிபா் ஷி ஜின்பிங் (67) மேலும் 15 ஆண்டுகள் (2035 வரை) அதிபா் பதவியில் தொடருவதற்கு அந்நாட்டில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்தது .கடந்த 2012-ஆம் ஆண்டு சீன அதிபராகப் பொறுப்பேற்ற ஷி ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-இல் முடிவடைய இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பதவியில் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளாா்.

முக்கிய தினங்கள்

சர்வதேச இணையதள தினம் (International Internet Day) – அக்டோபர் 29

உலக பக்கவாத விழிப்புணர்வு தினம் (World Stroke Day) - அக்டோபர் 29

தேசிய ஒருமைப்பாடு தினம் / ராஷ்ட்ரிரிய எக்தா திவாஸ் (Rashtriya Ekta Diwas / National Unity Day) - அக்டோபர் 31 (சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினம் , 2014 ம் ஆண்டு முதல் தேசிய ஒருமைப்பாடு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.)

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!