நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 27-29 December 2020

 தமிழ் நாடு

👉தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்த எஸ். ரியாஸ்தீன் வடிவமைத்துள்ள உலகின் எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள் 2021- ஆம் ஆண்டில் நாசா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்பட உள்ளது. நாசா விண்வெளி மையம் மற்றும், 'ஐ டூ லேனிங்' அமைப்பு இணைந்து நடத்திய 'க்யூப் இன் ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆராய்ச்சிப் போட்டியில் எஸ். ரியாஸ்தீன் உருவாக்கிய விஷன்- 1, விஷன்- 2 என்ற 2 செயற்கைக்கோள்கள் தேர்வாகியுள்ளதாக, நாசா அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த 2 செயற்கைக்கோள்களும் தலா 37 மி.மீ உயரமும், 33 கிராம் எடையும் கொண்டவை. இதற்கு, எடையில் சிறியது என பொருள்படும் 'பெமிடோ' என பெயரிடப்பட்டுள்ளது.

👉 2020-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழா் பொருளாதார இணைய வழி உச்சி மாநாடு மற்றும் ஏழாவது உலகத் தமிழா் பொருளாதார மாநாடு,   28-30 டிசம்பர் 2020 தினங்களில் இணைய வழியில் நடைபெறுகிறது. இதனை புதுச்சேரி முதல்வா் வி.நாராயணசாமி தொடக்கி வைக்கிறாா்.

👉தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி 28.12.2020 அன்று தொடங்கி வைத்தார். 

கூ.த.:   24-03-2020 அன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறை புதிய மாவட்டத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்தியா

👉மகாராஷ்டிராவில் உள்ள சங்கோலாவில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் வரை செல்லும் நூறாவது விவசாயிகள் ரயிலை டிசம்பர் 28 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். 

கூ.த.: தேவ்லாலி-தனபூர் இடையே முதல் விவசாயிகள் ரயில் 2020 ஆகஸ்டு 7-ஆம் தேதியன்று கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது. அதன் சேவை பின்னர் முசாப்பூர் வரை நீட்டிக்கப்பட்டது.

👉இந்தியாவில் முதன் முறையாக ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் ரயில் சேவை  தில்லி மெட்ரோவின் மஜந்தா மா  (மேற்கு ஜனக்புரி - தாவரவியல் பூங்கா) (Delhi Metro’s Janakpuri West-Botanical Garden route ) வில்  28-12-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

👉பொதுப் போக்குவரத்து அட்டை (National Common Mobility Card services ) சேவையை பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 28-12-2020 அன்று   தில்லி ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லேனில் தொடங்கி வைத்தார். 

👉மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையால் பரிந்துரைக்கப்பட்ட வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை நிறைவு செய்த ஆறாவது மாநிலமாக ராஜஸ்தான் ஆனது. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை ஏற்கனவே நிறைவு செய்துள்ளது.

👉அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள மக்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஆயிரம் வருடப் பழமை வாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் ”மோன்பா  காகித ஆலையை” (Monpa Handmade Paper) தவாங்கில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்(Khadi and Village Industries Commission (KVIC)) அமைத்துள்ளது.

👉நடன வரலாற்றாசிரியரும், விமா்சகருமான சுனில் கோத்தாரி 27.12.2020 அன்று காலமானாா். ‘அஸ்ஸாமின் சத்ரிய நடனங்கள்’, ‘இந்திய நடனத்தின் புதிய திசைகள்’ மற்றும் பரதநாட்டயம், ஒடிஸி, சௌவ், கதக், குச்சுப்புடி நடனக்கலையிலும், உதய் சங்கா், ருக்மணி தேவி அருண்டேல் ஆகியோரின் புகைப்பட சுயசரிதைகள் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவா் எழுதியுள்ளாா். நியூயாா்க் பல்கலைக்கழகத்தின் நடனத் துறையில் ஃபுல்பிரைட் பேராசிரியராக பணிபுரிந்துள்ளாா்.

👉கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட  21 வயது கல்லூரி மாணவி ஆா்யா ராஜேந்திரன் 28.12.2020 அன்று பதவியேற்றாா். இதன் மூலம் அவா் இந்தியாவின் மிக இளவயது மேயா் என்ற சாதனைக்குரியவரானாா்.  

கூ.த.: இதற்கு முன்பு கேரளத்தில் கொல்லம் மாநகராட்சி மேயராக சபீதா பேகம் என்பவா் தனது 23 வயதில் பதவியேற்றதே சாதனையாக இருந்தது. எனினும் இந்தியாவில் மிக இள வயதில் மேயா் பதவி வகித்த சாதனை ராஜஸ்தானின் பரத்பூா் மாநகராட்சி மேயராக இருந்த சுமன் கோலிக்கு சொந்தமாக உள்ளது. பாஜகவைச் சோ்ந்த அவா் கடந்த 2009-இல் அப்பதவியேற்றபோது அவரது வயது 21 ஆண்டுகள், 3 மாதங்களாக இருந்தது. திருவனந்தபுரம் மேயராகப் பொறுப்பேற்றுள்ள ஆா்யாவின் தற்போதைய வயது 21 ஆண்டுகள் 11 மாதங்களாகும்.

👉வீட்டுவாரியம் மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்(Ministry of Housing and Urban Affairs) விசாகப்பட்டினம் மாநகராட்சியை சிறப்பாக செயல்படும் குடிமை அமைப்பாக தேர்வு செய்துள்ளது. மிர்சாபூர் சிறப்பாக செயல்படும் நகராட்சி அமைப்பாக தேர்வு செய்யபட்டுள்ளது. மலிஹாபாத் லக்னோவும் நகர் பஞ்சாயத்தில் முதல் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

👉பீகார் முதலமைச்சரின் செயலகம்(Chief Minister Secretariat), தேசிய தகவல் மையம் (National Informatics Centre) மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை(Disaster Management Department) ஆகியவை 2020 ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா விருதுகளில் “தொற்றுநோய் பிரிவில்”( Pandemic Category) வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச உணவு மற்றும் சிவில் வழங்கல் துறை 2020 டிஜிட்டல் இந்தியா விருதை “டிஜிட்டல் ஆளுமையின் சிறப்பு”(Excellence in Digital Governance) விருதை வென்றுள்ளது.

வெளியுறவு 

👉இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே எஃகு தொழில் துறையில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம் டிசம்பர் 22, 2020 அன்று கையெழுத்தானது.

👉இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)) மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு, வங்களாதேஷ் (Border Guard Bangladesh (BGB)) இடையேயான 5 நாள் இயக்குநர் ஜெனரல் (Director General (DG)) நிலை எல்லை ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் 51 வது சுற்று   22-26 டிசம்பர் 2020 தினங்களில்  அசாமின் குவஹாத்தியில் நடைபெற்றது. 40 ஆண்டுகளில் முதல் முறையாக டெல்லிக்கு வெளியே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

👉‘நிமோசில்’ (Pneumosil) எனப்படும் நுரையீரல் அழற்சிக்கான நாட்டின் முதல் தடுப்பு மருந்தை (Pneumococcal Conjugate Vaccine) பில் அண்டு மெலிந்தா கேட்ஸ் ஃபவுண்டேஷனுடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டிட்டியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.

👉உத்தரபிரதேச அரசு கான்பூரில் இந்தியாவின் முதல் மெகா லெதர் பூங்காவை நிறுவ திட்டமிட்டுள்ளது.

👉இந்தியாவின் முதலாவது லித்தியம் சுத்திகரிப்பு நிலையம் குஜராத்தில் அமைக்கப்பட உள்ளது. 

👉சர்வதேச அறிவியல் வெளியீட்டு நிறுவனமான(International Scientific publishing company) நேச்சர் ரிசர்ச்(Nature Research) வெளியிட்டுள்ள 'நேச்சர் இன்டெக்ஸ் 2020 செயற்கை நுண்ணறிவு'(Nature Index 2020 Artificial Intelligence) படி, 2015-2019 காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து அதிக வெளியீடுகளைக் கொண்ட 25 நாடுகளின் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தைப் பிடித்தது (91,563 வெளியீடுகளுடன்). இந்த பட்டியலில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இராண்டாவது இடத்திலும் உள்ளன.  

சுற்றுச்சூழல் 

👉இந்தியாவின் முதல் வெப்ப காற்று பலூன் சஃபாரி மத்தியப் பிரதேச பந்தவ்கர் புலி காப்பகத்தில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

👉இந்தியாவில் உள்ள எட்டு கடற்கரைகளில் சர்வதேச நீலக்கொடியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் காணொலி மூலம் 28.12.2020 அன்று ஏற்றினார். 

33 கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அமைப்பால் வழங்கப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான முத்திரையே நீலக்கொடி சான்று ஆகும். 

குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், டையூவில் உள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள காசர்கோட் மற்றும் பதுபித்ரி, கேரளாவை சேர்ந்த கப்பாட், ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசா மாநிலத்தின் கோல்டன் பீச் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபரை சேர்ந்த ராதாநகர் கடற்கரை ஆகிய எட்டு கடற்கரைகள் இந்த நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

விளையாட்டு 

👉இந்திய ஹாக்கி வீராங்கனை நமிதாவுக்கு ‘ஏகலைவன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா். அவருக்கு பட்டயம், கோப்பை, ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

👉ஐசிசியின் தசாப்தத்துக்கான பரிசளிப்பு விழா காணொலி வாயிலாக 28.12.2020 அன்று நடைபெறுகிறது. ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு கேப்டனாக கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

👉இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி மைதானத்தை (20,000 பேர் அமரகூடிய ) ஒடிசாவின் ரூர்கேலா நகரில்  அமைக்கவுள்ளதாக ஒடிசா  முதல்வர் நவீன் பட்நாயக் 2020 டிசம்பர் 25 அன்று அறிவித்தார். 

கூ.த.: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்புகள் ’(International Hockey Federations’(FIH)) 2023 ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை ஒடிசாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

👉உலக கால்பந்து விருதுகள் நிகழ்ச்சியில், ‘நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரா்’ விருது போா்ச்சுகீசிய கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

👉இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது கொடுக்கப்பட்டுள்ளது.

புத்தகம் 

👉“அயோத்யா”  ('Ayodhya' )என்ற புத்தகத்தை மாதவ் பண்டாரி (Madhav Bhandari) எழுதியுள்ளார்.

👉’In Pursuit of Justice: An Autobiography’   எனும் பெயரில் நீதியரசர்  ராஜீந்தர் சச்சரின்  (Justice Rajindar Sachar ) சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. 


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!