நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 1-2 January 2021

 Current Affairs for TNPSC Exams 1-2 January 2021

இந்த நடப்பு நிகழ்வுகளை PDF ஆக Download செய்ய

ஏற்கனவே பதிவு செய்தவர்கள் Click Here

தமிழகம்

ஓவிய, சிற்பக் கலைஞா்களுக்கான ‘கலைச் செம்மல்’விருது தொகையை ரூ.50 ஆயிரத்திலிருந்து  ரூ.1 லட்சமாக உயா்த்தி வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விருதாளா்களின் எண்ணிக்கையை 2-இல் இருந்து 6 ஆக உயா்த்தப்படுவதாகவும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவராக சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.பாஸ்கரன் 31-12-2020 அன்று  பொறுப்பேற்றுக் கொண்டாா்.


இந்தியா

உலகளாவிய வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவாலின் கீழ், ஆறு மாநிலங்களில் ஆறு இடங்களில் (சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தாலா, லக்னோவில் )  சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கு (Light House projects (LHPs)) காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி1-1-2021 அன்று அடிக்கல் நாட்டினார். உத்தரப் பிரதேசம், திரிபுரா, ஜார்கண்ட், தமிழ்நாடு, குஜராத், ஆந்திரப்பிரதேசம், மற்றும் மத்தியப்பிரதேச மாநில முதல்வர்கள் இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


சுங்கச் சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமல்படுத்துவதை பிப்ரவரி 15-ஆம் தேதி வரை ஒத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும்  வகையிலான பாஸ்டேக் (FASTag)முறை  1-1-2020 முதல் கட்டாயம் அமலுக்கு வருவதாககவும், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும்  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லேண்ட்லைனில் இருந்து 10 இலக்கம் கொண்ட செல்போன் எண்ணுக்கு அழைக்கும்போது, முதலில் பூஜ்ஜியம்(0) சேர்த்து மற்ற 10 எண்களை பதிவு செய்து பேசும் முறை ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது


☞ 1984 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து இமயமலையின் இன்னொரு அங்கமாகத் திகழும் காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள பனிபடர்ந்த சியாச்சின் சிகரத்தை கைப்பற்ற முனைந்த போது, பாகிஸ்தானிடமிருந்து சியாச்சின் பனி மலையை பாதுகாத்த கர்னல் புல் குமார் 31-12-2020 அன்று காலமானார். 


வெளிநாட்டு உறவுகள் 

கடல்சார் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் (Maritime Search and Rescue (M-SAR) Operations) ஒத்துழைப்பதற்காக ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய 7 ஆசிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard (ICG)) கையெழுத்திட்டுள்ளது. 

கூ.தக. : கடல்சார் தேடல் மற்றும் மீட்புக்கான சர்வதேச மாநாட்டில் (Convention on Maritime Search and Rescue (SAR)) இந்தியா 1979 ல் கையெழுத்திட்டது, மே 2001 இல்  ஒப்புதல் வழங்கியது. 


இந்தியாவும் பாகிஸ்தானும் 1-1-2021 அன்று இரு நாடுகளிலுள்ள அணுசக்தி நிறுவல்களின் பட்டியலை இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பரிமாறிக்கொண்டன.   இதுபோன்ற பட்டியலை இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல் இது  30 வது முறையாகும்.


ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக நியமிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

கூ.தக. ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரிட்டன், அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இவை தவிர 10 நாடுகள் இரண்டாண்டுக் காலத்துக்கு உறுப்பினராக இருக்கும். அதன்படி இந்தியா இன்று முதல் இரண்டாண்டுகளுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இடம்பெறுகிறது. அது மட்டுமல்லாமல் வரும் ஆகஸ்டு மாதம் முழுவதும் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு இந்தியா தலைவராக இருக்கும்.

உலகம்

2021 ஆம் ஆண்டின் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் ஓசியானியா (Oceania) . சிறிய பசிபிக் தீவு நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகியவை புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடுகளாகும். அமெரிக்காவிற்கு அருகிலுள்ள ஹவுலேண்ட் மற்றும் பேக்கர் தீவுகள் ஆகிய  குடியேறப்படாத தீவுகள் புத்தாண்டை வரவேற்கும் கடைசி இடங்களாகும். 

ஆஸ்திரேலியாவில் பழங்குடிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தேசிய கீதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


பொருளாதாரம்

இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனைகளின் வளர்ச்சியை அளவிட இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல்   பணப்பரிவர்த்தனை குறியீட்டை (Digital Payments Index)  வெளியிட்டுள்ளது. 

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வளர்ச்சியை  அளவிட மாறுபட்ட மதிப்பீடுகளுடன் பின்வரும் ஐந்து விதமான அளவீடு அம்சங்களை  இந்த குறியீடு கொண்டுள்ளது.

1. கட்டணம் செலுத்துபவர்கள் (Payment enablers )(25%).

2. கட்டண உள்கட்டமைப்பு - தேவை-பக்க காரணிகள் (Payment infrastructure—demand-side factors)  (10%).

3. கட்டண உள்கட்டமைப்பு - வழங்கல் பக்க காரணிகள் (Payment infrastructure—supply-side factors )  (15%).

4. கட்டண செயல்திறன்(Payment performance)  (45%).

5. நுகர்வோர் மையத்தன்மை (Consumer centricity)  (5%).

☞ சர்வதேச நிதிச் சேவைகள் மையங்களின் ஆணையம் (International Financial Services Centres Authority (IFSCA)) , பங்கு ஆணையங்களின் சர்வதேச அமைப்பின் (International Organization of Securities Commissions (IOSCO))  உறுப்பினராகியுள்ளது. 

கூ.தக. : உலகின் பங்கு வர்த்தக சந்தைகளில் 95 சதவீதத்தைச் சென்றடைந்துள்ள பங்கு ஆணையங்களின் சர்வதேச அமைப்பு, உலகின் பங்கு வர்த்தகச் சந்தைகளை ஒன்றிணைப்பதோடு, பங்கு வர்த்தகத் துறையில் சர்வதேசத் தர நிர்ணய அமைப்பாக விளங்குகிறது. இதன் தலைமையிடம் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ளது. 

☞ மத்திய அரசின் கடன் சுமை  செப்டம்பர் 2020 ல் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில்  இறுதி நிலவரப்படி ரூ.107.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும்,  இந்தியாவில் நவம்பர் வரையிலான நிதி பற்றாக்குறை (வருமானத்துக்கும், செலவுக்கும் இடையேயான இடைவெளி)  ரூ.10.75 லட்சம் கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை  கணக்கு கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 2019-20ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு உள்ளாக விற்று முதல் இருக்கும் வர்த்தகர்கள் இனிமேல் காலாண்டுக்கு ஒருமுறைக்கு (3 மாதங்களுக்கு ஒருமுறை) ஜிஎஸ்டி ரிட்டன்-3பி தாக்கல் செய்தால் போதுமானது என்ற புதிய நடைமுறைஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது .  இதற்கு முன்னதாக, மாதம்தோறும் தாக்கல் செய்யப்படும் முறை அமலிலிருந்தது.  


கிரெடிட் கார்டுகளில் கான்டாக்ட் லெஸ் வகை கார்டுகளில் பரிவர்த்தனை செய்வதற்கான வரையறை தற்போதுள்ள  ரூ.2 ஆயிரத்திலிருந்து  ரூ.5 ஆயிரமாக ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் முறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.


சுற்றுசூழல்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food & Agriculture Organization (FAO)) 4 ஆசிய தேயிலை சாகுபடி தளங்களை ’உலகளவில் முக்கியமான விவசாய பாரம்பரிய அமைப்புகள்’(Globally Important Agricultural Heritage Systems (GIAHS)) என அறிவித்துள்ளது. அவற்றின் விவரம் வருமாறு,

(i) பு'யர் பாரம்பரிய தேயிலை வேளாண் அமைப்பு (The Pu’er Traditional Tea Agrosystem), சீனா

(ii) புஜோ மல்லிகை & தேயிலை கலாச்சார அமைப்பு (Fuzhou Jasmine & Tea  Culture System), சீனா

(iii) ஷிசுவோகா  பாரம்பரிய தேயிலை-புல் ஒருங்கிணைந்த அமைப்பு (Traditional tea-grass integrated system in Shizuoka), ஜப்பான்

(iv) ஹ்வாகே-மியோனில் பாரம்பரிய ஹடோங் தேயிலை வேளாண் அமைப்பு (Traditional Hadong Tea Agrosystem in Hwagae-myeon), தென் கொரியா

☞ பாட்னா வானிலை ஆய்வகத்திற்கு (Patna Meteorological Observatory) நூற்றாண்டு கண்காணிப்பு நிலைய அந்தஸ்தை (centennial observing station status) ஜெனீவாவிலுள்ள உலக வானிலை அமைப்பு (World Meteorological Organisation (WMO)), 100 ஆண்டுகளுக்கும் மேலான அதன் நீண்டகால வானிலை ஆய்வுக்கு  இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 1867 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாட்னா வானிலை ஆய்வுக்கூடம் அப்போதைய பிரிட்டிஷ் கார்ப்ஸ் ஆப் இன்ஜினியர்களால் அமைக்கப்பட்ட ஆரம்பகால ஆய்வகங்களில் ஒன்றாகும்.

அறிவியல் / தொழில்நுட்பம்

முழு திட எரிபொருள் கொண்ட ராக்கெட் கட்டத்தை வெற்றிகரமாக வடிவமைத்து, மேம்படுத்தி மற்றும் சோதனை செய்த இந்தியாவின் முதலாவது தனியார் நிறுவனம் எனும் பெருமையை “ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” (Skyroot Aerospace) எனும் ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் பெற்றுள்ளது.  மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் சோதனை வசதியிலிருந்து ‘கலாம் -5’ என்ற திட உந்துவிசை ராக்கெட் இயந்திரத்தை   ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் வெற்றிகரமாக சோதனை செய்ததன் மூலம் இந்த சாதனையைப் படைத்துள்ளது. 

கூதக. :  ஸ்கைரூட் நிறுவனம், ‘விக்ரம்-1’ (‘Vikram-1’) எனப்பெயரிடப்பட்டுள்ள தங்களது முதலாவது ராக்கெட்டை இஸ்ரோ-வின் உதவியுடன் டிசம்பர் 2021 ல் விண்ணில் செலுத்தவுள்ளது. 


விருதுகள்

6 வது டிஜிட்டல் இந்தியா விருதுகள் ( 6th Digital India Awards(DIA)) 2020 ஐ குடியரசுத்தலைவர்  ராம் நாத் கோவிந்த்  அவர்கள் டிசம்பர் 30, 2020 அன்று  வீடியோ கான்பரன்சிங் மூலம் மெய்நிகர் விருது வழங்கும் விழாவில் வழங்கினார்.  7 பிரிவுகளின் கீழ் அரசு நிறுவனங்களின் 24 டிஜிட்டல் ஆளுமை முயற்சிகள் / தயாரிப்புகள் டிஜிட்டல் இந்தியா விருதுகள் 2020 ஐப் பெற்றன. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்   கீழ் உள்ள தேசிய தகவல் மையம் (The National Informatics Centre(NIC) ) விருதுகளை ஆன்லைனில் வழங்க ஏற்பாடு செய்தது. 

இந்த ஆண்டு (2020), தொற்று பிரிவில் புதுமை (Innovation in Pandemic category)  மற்றும்  முன்மாதிரியான தயாரிப்பு ( Exemplary Product category) வகை ஆகிய இரண்டு புதிய உட்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

2020 ஆம் ஆண்டிற்கான விருதுகளின் விவரம் வருமாறு,

(i) ’தங்க ஐகான் விருதை’ (gold icon award) ’டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்கியமைக்காக மத்திய அரசு துறைக்கான பிரிவில் ’ (Excellence in Digital Governance Ministry/Department (Central))  இந்திய அஞ்சல் துறை (Department of Post) வென்றுள்ளது.

(ii) ‘தொற்றுநோய்களில் புதுமை’(Innovation in Pandemic) என்ற பிரிவில் வெள்ளி ஐகான் விருதை பீகார் அரசாங்கத்தின் ஆப்தா சம்பூர்த்தி போர்ட்டல் (Aapda Sampoorti Portal of Bihar govt) வென்றுள்ளது.

(iii)  உச்சநீதிமன்றத்தின் மின்னாளுமை குழுவின் (E-Committee Supreme Court of India)  ’இ-கோர்ட்டு’ திட்டத்திற்கு (E-Courts project) ’அரசு டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்கியமைக்காக மத்திய அரசு துறைக்கான பிரிவில் ’ பிளாட்டினம் விருது வழங்கப்பட்டுள்ளது.

(iv) தமிழ்நாடு அரசு, பல்வேறு ஈ-கவர்னன்ஸ் பயன்பாடுகளை செயல்படுத்தியதற்காக ’டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்கியமைக்காக மாநில /யூனியன் பிரதேச அரசு  பிரிவில் ’ தங்க ஐகான் விருதை (Gold icon award) வென்றுள்ளது.

(v) உத்தரபிரதேசத்தின் உணவு மற்றும் சிவில் விநியோகத் துறை ’டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்கியமைக்காக மாநில /யூனியன் பிரதேச அரசு  பிரிவில் ’ வெள்ளி ஐகான் விருதை வென்றுள்ளது.

(vi)  ஹரியானா அரசு, ’டிஜிட்டல் ஆளுமையில் சிறந்து விளங்கியமைக்காக மாநில /யூனியன் பிரதேச அரசு  பிரிவில் ’ பிளாட்டின ஐகான் விருதை வென்றுள்ளது.

டிஜிட்டல் இந்தியா விருதுகள் பற்றி:

டிஜிட்டல் இந்தியா விருதுகள் இரண்டாண்டுகளுக்கொரு முறை வழங்கப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் 2014 வரை ’வெப் ரத்னா விருதுகள்’ (Web Ratna Awards) என்று அழைக்கப்பட்டன, மேலும் 2016 சீசனில் இருந்து, இது டிஜிட்டல் இந்தியா விருதுகள் என மறுபெயரிடப்பட்டது. இவ்விருதுகளின் முந்தைய பதிப்புகள் 2010, 2012, 2014, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்டன. 

 

நியமனங்கள்

இந்தியாவின் எஃகு ஆணையத்தின் (Steel Authority of India (SAIL) ) முதல் பெண் தலைவராக சோமா மொண்டல் 1-1-2021 அன்று பொறுப்பேற்றார்.

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும்  தலைமைச் செயல் அதிகாரியாக திரு சுனில் சர்மா 1-1-2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவா் கே. சிவனுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவா் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை இஸ்ரோ தலைவா் மற்றும் செயலா் பதவியில் தொடருவாா். 

முக்கிய தினங்கள்

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation - DRDO) இன்று தனது 63வது நிறுவன தினத்தை 1-1-2021 அன்று கொண்டாடியது.

கூ.தக. : 

958ஆம் ஆண்டு 10 பரிசோதனைக் கூடங்களுடன் தொடங்கப்பட்ட டிஆர்டிஓ -வின் தற்போதைய தலைவராக  டாக்டர். ஜி. சதீஷ் ரெட்டி உள்ளார். 

விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவுக்குப் பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.இத்தகவலை பிசிசிஐ அறிவித்துள்ளது.


இந்தியாவின் 67-வது செஸ் கிராண்ட் மாஸ்டராகியுள்ளார் கோவாவைச் சேர்ந்த 14 வயது லியோன் மெண்டோன்கா.

புத்தகங்கள்

☞ ‘‘தமிழ்நாட்டின் ஈர நிலங்கள்-ஓா் பாா்வை’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - பெ.துரைராசு (தமிழக வனத் துறையின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா்)


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!