நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 5-6 January 2021

TNPSC Current Affairs 5-6 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் கட்டப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியன் மணிமண்டபம் 4-1-2021 அன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார், பி.ஹெச்.பாண்டியன் அவர்களது திருவுருவ சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழக சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் அரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசிக்க அனுமதி அளித்து தமிழக அரசு 4-1-2021 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின் குறைதீா் மேலாண்மைத் திட்டத்துக்கு, அம்மா அழைப்பு மைய எண்ணான ”1100” பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 42 வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி 4-1-2021 அன்று பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் வேலையின்மை விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டு உள்ள தகவலில் தேசிய அளவில் நவம்பரில் 6.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பரில் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்கேற்ப வேலையின்மை விகிதம் குறைந்து வந்துள்ளது.முழுஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரலில் வேலையின்மை விகிதம் 49.8 சதவீதமாக இருந்து, ஜூலையில் 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.செப்டம்பரில் 5 சதவீதமாகவும், அக்டோபரில் 2.2 சதவீதமாகவும், நவம்பரில் 1.1 சதவீதமாகவும் வேலையின்மை விகிதம் குறைந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறைகளின் பங்களிப்பு காரணமாக வேலையின்மை விகிதம் குறைந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆ. மாதவன் (86) காலமானார்.

தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், குடும்பத்தினர் இடம் பெயர்ந்ததால் திருவனந்தபுரத்தில் வசித்துவந்தார்.

எழுத்தாளர் ஆ. மாதவனின் முதல் நாவலான புனலும் மணலும், 1970-களில் வாசகர் வட்டத்தால் வெளியிடப்பட்டது. கிருஷ்ணப் பருந்து இவருடைய புகழ்பெற்ற நாவல். தூவானம் என்றொரு குறுநாவலும் எழுதியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் சாலைத் தெருவில் கடை வைத்திருந்த இவர், கடை வீதிப் பின்னணியில் நிறைய கதைகளை எழுதியுள்ளார். 2015 ஆம் ஆண்டு இலக்கியச் சுவடுகள் நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் மாதவன்.

இந்தியா

2021 ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1-ம் தேதி உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் , 59,995 குழந்தைகள் பிறந்திருப்பதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்தடுத்த இடங்களை முறையே சீனம் (35,615), நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161) மற்றும் இந்தோனேசியா (12,336) ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

கேரள மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து , மாநிலப் பேரிடராக கேரள அரசு 5-1-2021 அன்று அறிவித்துள்ளது.

கொச்சி மங்களுரு குழாய்வழி இயற்கை எரிவாயுத் திட்டத்தை, பிரதமர் திரு.நரேந்திரமோடி , காணொலிக்காட்சி வாயிலாக 5-1-2021 அன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். ‘ஒரே தேசம் ஒரே எரிவாயுத் தொகுப்பு‘ (One Nation One Gas Grid) ஐ ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த திட்டத்தின் மூலம், கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கி.மீ. குழாய்வழி கியாஸ் வினியோக அமைப்பின் வழியாக, கொச்சியில் உள்ள, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை மீண்டும் வாயுவாக்கும் முனையத்தில் இருந்து மங்களூருவுக்கு கியாஸ் அனுப்பப்படும். குழாய் வழியாக தினமும் 1.2 கோடி மெட்ரிக் கனமீட்டர் கியாசை அனுப்ப முடியும். கெயில் இந்தியா நிறுவனம் (Gail (India) Limited (GAIL)) இந்த கியாஸ் குழாய் இணைப்பை உருவாக்கியிருக்கிறது.

கோவி‌ஷீல்டு தடுப்பூசி விலை அரசுக்கு ரூ.292 ஆக நிர்ணயத்து சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ”கோவி‌ஷீல்டு” தடுப்பூசியை தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

கூ.தக. : மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள சீரம் நிறுவனம் (Serum Institute of India) சைரஸ் எஸ். பூனவல்லா ( Cyrus S. Poonawalla ) என்பவரால் 1966 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன், தற்போதைய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (Adar Poonawalla ) அடார் பூனவல்லா உள்ளார்.

சாகர்மாலாநீர் விமான சேவையை (Sagarmala Seaplane Services Project) கப்பல் அமைச்சகம் தொடங்கவுள்ளது. அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.நீர் விமான சேவை என்பது இந்தியாவில் கடல் பகுதியிலும், வாய்ப்புள்ள ஆறுகளிலும் தொடங்கப்படும்.

கூ.தக. : குஜராத் மாநிலத்தின் கேவடியா மற்றும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரைக்கு நீர் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி 31-10-2020 அன்று துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் எல்இடி பல்புகள் வழங்கும் திட்டம் (UnnatJyoti by Affordable LEDs for All (UJALA)) மற்றும் தேசிய தெருவிளக்கு திட்டம்(Street Lighting National Programme (SLNP)) ஆகியவை தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளன. இந்த திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார்.

உஜாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதம் 36.69 கோடி எல்இடி பல்புகளை இஇஎஸ்எல் நிறுவனம் வழங்கியது. இதன் மூலம் ஆண்டுக்கு 47.65 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் ஆண்டுக்கு 38.59 மில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றமும் குறைந்துள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தெருவிளக்கு திட்டம் மூலம் நாடு முழுவதும், 1.14 கோடி எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.இதன் மூலம் ஆண்டுக்கு 7.67 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதாகவும், ஆண்டுக்கு 5.29 மில்லியன் டன்கள் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம் குறைக்கப்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டது.

மேற்கு வங்கம் கொல்கத்தாவில், உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்த, 105 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும், உலக வங்கியும் 5-1-2021 அன்று கையெழுத்திட்டுள்ளன. மேற்கு வங்க உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் இட மேம்பாட்டு திட்டம் ஆகியவை ஹூக்ளி ஆற்றில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும், கொல்கத்தா செல்வதற்கான வசதியை மேம்படுத்த இடவசதியைத் திட்டமிடவும், கொல்கத்தா மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், மாநில தளவாட துறை வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவும்.

யமுனை ஆற்றில் அம்மோனியா நைட்ரஜன் பிரச்சனைக்கு கூட்டு கண்காணிப்பு படை ( Joint Surveillance Squad) உருவாக்கம் : யமுனை ஆற்றில் அம்மோனியா நைட்ரஜன் அதிகரிக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது (Central Pollution Control Board (CPCB)) , தில்லி, ஹரியானா மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், நீர்பாசனத்துறை, தில்லி குடிநீர் வாரிய அதிகாரிகளின் கூட்டத்தை ஜனவரி 4ம் தேதியன்று கூட்டியது. இதற்காக, தில்லி, ஹரியானா மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர்பாசனத்துறை, தில்லி குடிநீர் வாரிய துறையினர் அடங்கிய கூட்டு கண்காணிப்பு படையை (Joint Surveillance Squad) உருவாக்க இந்தக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

உலகின் மிக நீளமான ரயில் பிளாட்ஃபார்ம் எனும் பெருமையை கர்நாடகாவின் ஹப்பல்லி ரயில் நிலையம் (ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ரயில் நிலையம்) பெறவுள்ளது . 1500 பிளஸ் மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலமுடன் அமைக்கப்படும் இந்த இரயில் பிளாட்ஃபார்ம் மார்ச் 2021 இல் திறக்கப்படும்.

நான்காவது, உலக ஆயுர்வேத திருவிழா 2021(Global Ayurveda Festival 2021) 12-19 மார்ச் 2021 தினங்களில் கேரள மாநிலத்தினால் மெய்நிகர் மூலம் நடத்தப்படவுள்ளது.

தேசிய நாட்டுப்புற நடனத் திருவிழா 2020 (‘National Folk Dance Festival’ ) 26-31 டிசம்பர் 2020 தினங்களில் ஜம்முவில் நடைபெற்றது.

R P திவாரி குழு : ( R P Tiwari Committee) : மத்திய பல்கலைக்கழகங்களில் அடுத்த கல்வியாண்டில் (ஆகஸ்ட் 2021) முதல் பொது நுழைவுத் தேர்வை (Common Entrance Test(CET) ) இளங்கலை மட்டத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக பல்கலைக்கழக மானிய ஆணையம் (University Grants Commission(UGC)) 7 உறுப்பினர் குழுவை பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ராகவேந்திர (ஆர்) பி திவாரி தலைமையில் அமைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டத்தை (largest floating solar energy project in the world) நர்மதா ஆற்றில் உள்ள ஓம்கரேஷ்வர் அணையில் ( Omkareshwar Dam) இந்திய அரசு கட்ட உள்ளது. ரூ.3000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் 600 மெகாவாட் சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் கொண்ட இந்த திட்டம் 2022- 2023 ஆண்டு காலக்கட்டத்தில் தனது மின் உற்பத்தியைத் தொடங்கும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் உள்ள டிரான்ஸ்-கொழுப்பு அமிலங்களின் ( Trans-Fatty Acids(TFA)) அனுமதிக்கப்பட்ட அளவை 2021 ஆம் ஆண்டில் 3% ஆகவும் , 2022 க்குள் 2% ஆகவும் , தற்போதைய அனுமதிக்கப்பட்ட 5% வரம்பிலிருந்து குறைக்க வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) வெளியிட்டது.

இந்தியாவின் முதலாவது புலம்பெயர்ந்த தொழிலாளளுக்கான மையத்தை ( Migrant Worker Cell) குஜராத்தின் சூரத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் 4-1-2021 அன்று திறந்து வைத்தார். சூரத் முனிசிபல் கார்ப்பரேஷனின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த மையமானது, பல்வேறு தொழில்களில் பணிபுரியும் ஒடியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து குடியேறுபவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ‘தேசிய நகர்ப்புற வாழ்வாதார மிஷன் திட்டத்தின்’ (National Urban Livelihood Mission Scheme) கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

தெற்காசியா எரிசக்திக்கான குழு ”(South Asia Group for Energy (SAGE)) எனும் உயர்மட்ட குழுவை, தெற்காசிய எரிசக்தி பாதுகாப்பு கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக, ராம் வினய் ஷாஹி ( Ram Vinay Shahi) தலைமையில் இந்திய அரசு 5-1-2021 அன்று அமைத்துள்ளது. இது வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் (Research and Information System for Developing Countries (RIS)) மேற்பார்வையில் செயல்படும்.

”TiHAN Foundation– Technology Innovation Hub” என்ற பெயரில் இந்தியாவின் முதலாவது தானியங்கி போக்குவரத்து மற்றும் தரவு முறைமைக்கான ஆய்வு மையம் (Testing hub for Autonomous Navigation & Data Acquisition Systems) ஐ.ஐ.டி. ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

2021 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் , இங்கிலாந்தில் உருமாறிய கோவிட்-19 பரவலின் தீவிரம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

அமெரிக்காவைச் சோ்ந்த மாடா்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

உலகிலேயே முதல் நாடாக, பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள "‘கோவிஷீல்டு’" கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது . இதனை பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவராக ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரான நான்சி பெலோசி 4-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற இணை நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி வழக்குரைஞரான விஜய் சங்கரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

பொருளாதாரம்

கா்நாடக மாநிலம் பெங்களூரில் மின் விநியோக அமைப்பை நவீனப்படுத்தி , மேம்படுத்துவதற்காகவும் , மின்சார விநியோகத்தின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் அதிகரிப்பதற்காகவும், ஆசிய வளா்ச்சி வங்கியுடன் ரூ.730 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்காக பத்தாவது தவணையாக ரூ 6,000 கோடியை மாநில அரசுகளுக்கு 4-1-2021 அன்று வழங்கியிருக்கிறது.

நியமனங்கள்

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தல் 4-1-2021 அன்று பதவியேற்றுக் கொண்டார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

அண்டார்டிகாவிற்கான 40-வது அறிவியல் பயணத்தை இந்தியா (Indian scientific expedition to Antarctica) 5-1-2021 அன்று கோவாவிலுள்ள மோர்முகோ துறைமுகத்திலிருந்து (Mormugao Port) கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. பனிக்கட்டியில் பயணிக்கும் எம்வி விசிலி கோலோவ்நின் (MV Vasiliy Golovnin) என்ற கப்பல், 30 நாட்களில் அண்டார்டிகாவைச் சென்றடையும். 40 உறுப்பினர்கள் அங்கே இறங்கிக்கொள்ள, ஏப்ரல் 2021 மாதம் இந்த கப்பல் மீண்டும் இந்தியா வரும்.

கூ.தக. : இந்தியாவின் 39வது அண்டார்டிகா பயணம் நவம்பர் 2019ல் மேற்கொள்ளப்பட்டது.

உலகின் முதல் மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக்கோளை (World’s first wooden satellite) ஜப்பானின் சுமிட்டோமோ வனவியல் நிறுவனம்(Sumitomo Forestry company) மற்றும் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகம் (Kyoto University of Japan) ஆகியவை இணைந்து 2023 ஆம் ஆண்டில் விண்னில் செலுத்தவுள்ளன. விண்வெளி குப்பை பிரச்சினைக்கு தீர்வாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!