நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 7-8 January 2021

TNPSC Current Affairs 7-8 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குழந்தைவேலின் பதவி காலத்தை மறு உத்தரவு வரும் வரையில் அல்லது புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை நீட்டித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா

உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி பேட் வழங்கும் திட்டத்தினை பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

கேரளத்தில் 10,000 மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி முதல் "பசுமை' வளாகங்களாக அறிவிக்கப்படவுள்ளன .

அரசு அலுவலகங்களின் அன்றாட நடவடிக்கைகளில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாத பொருள்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே பசுமை அலுவலகங்களை ஏற்படுத்துவதன் நோக்கம் ஆகும்.

இந்த பசுமை நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக ஹரிதா கேரளம் இயக்கம் என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான 6-ஆவது சுற்று ஏலம், வரும் 1 மார்ச் 2021-ஆம் தேதி முதல் தொடங்குகிறது . 2,251.25 மெகா ஹொ்ட்ஸ் அலைவரிசையில் வரும் 700, 800, 900, 2,100, 2,300, 2,500 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த அலைக்கற்றைகளின் அடிப்படை விலை ரூ.3.92 லட்சம் கோடியாகும்.

மின்சாரத்தால் இயங்கும் 1.5 கி.மீ நீள உலகின் முதல் இரட்டை அடுக்கு பெட்டக ரயில் போக்குவரத்து (first double stack long-haul container train), மேற்கு பிரத்யேக சரக்குப் பாதையில் (Western Dedicated Freight Corridor) , ஹரியானாவின் புதிய அட்டலி (New Ateli) மற்றும் இராஜஸ்தானின் புதிய கிஷன்கர்க் (New Kishanganj) இடையே தொடங்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் (Avian Influenza) கட்டுப்பாட்டு மையம் அமைப்பு : இந்தியாவில் சில மாநிலங்களில் காகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகளிடம், பறவைக் காய்ச்சல் (Avian Influenza) ஏற்பட்டுள்ளதால், இவற்றை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை அமல்படுத்தவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் தில்லி கிரிஷி பவனில் (தொலைபேசி எண். 011-23382354) தேசிய அளவிலான கட்டுப்பாட்டு உதவி மையத்தை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஏற்படுத்தியுள்ளது.

'காமதேனு கெள விக்யான் பிரச்சார் பிரசார்' என்ற பெயரில் உள்நாட்டுப் பசுக்கள் குறித்து ஆன்லைனில் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுவோருக்குப் பரிசு, சான்றிதழ்கள் வழங்க உள்ளதாக காமதேனு ஆயோக் அறிவித்துள்ளது. ஆரம்பப் பள்ளி மாணவர்கள், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நான்கு தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.

கூ.தக. : 2019-ல் உருவாக்கப்பட்ட தேசிய காமதேனு ஆயோக் அமைப்பு, பசுக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. மத்திய மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காமதேனு ஆயோக்கின் தலைவராக வல்லபாய் கத்ரியா உள்ளார்.

அசாம் மாநிலத்தில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் முதலாவது மற்றும் உலகின் ஏழு ஆய்வகங்களில் ஒன்றான ‘தொற்றுநோய்க்கு தயார்நிலைக்கான கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பின்’ ( Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) ஆய்வகம் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ள மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ( Translational Health Science & Technology Institute (THSTI)) அமைக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமானது மத்திய பயோடெக்னாலஜி துறையின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.

கூ.தக. : ‘தொற்றுநோய்க்கு தயார்நிலைக்கான கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பின்’ ( Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) ஆய்வகம் என்பது பொது, தனியார் மற்றும் சிவில் அமைப்புகளுக்கிடையேயான ஒரு புதுமையான கூட்டாண்மை ஆகும், இது எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளை உருவாக்க 2017 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் தொடங்கப்பட்டது.

சவுரவ் யாதவ் versus உத்தரப்பிரதேச மாநில அரசு (Saurav Yadav versus State of Uttar Pradesh case) இடையேயான வழக்கில் செங்குத்து மற்றும் கிடைமட்ட இட ஒதுக்கீடு (vertical and horizontal reservations) முறையை உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை பரிந்துரைத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சீர்திருத்தங்களை (Urban Local Bodies reforms) நிறைவு செய்த நாட்டின் மூன்றாவது மாநிலமாக தெலங்கானா ஆனது. இதன் மூலம், திறந்தவெளி சந்தைகளின் மூலம் ரூ.2,508 கோடி கூடுதல் நிதியைத் திரட்டுவதற்கான தகுதியை அம்மாநிலம் பெற்றுள்ளது.

சர்வதேச ஒருங்கிணைந்த கல்வி மாநாடு ‘எஜுகான் 2020’ (‘EDUCON 2020’)-ஐ காணொலி வாயிலாக 7-1-2021 அன்று மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ தொடங்கி வைத்தார். பஞ்சாபின் பதிண்டா மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச கல்வி ஆராய்ச்சி சங்கம் ஆகியவை இந்த இரண்டு நாள் மாநாட்டை நடத்துகின்றன. ”சர்வதேச அமைதியை மீட்டெடுப்பதற்காக இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கல்வி குறித்த தொலைநோக்கு பார்வை” (Envisioning Education for Transforming Youth to Restore Global Peace) என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும்.

16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு 2021 (Pravasi Bharatiya Divas Convention 2021) 9 ஜனவரி 2021 அன்று நடத்தப்படுகிறது. வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் முன்னணி நிகழ்ச்சியான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும், அவர்களை ஈடுபடுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில், சுரிநாம் அதிபர் மேன்மைமிகு திரு சந்திரிகாபெர்சாத் சந்தோக்கியின் சிறப்புரை இடம்பெறும். 2021 ஜனவரி 8 அன்று இளைஞர்களுக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு “இந்தியா மற்றும் வெளிநாட்டு இந்தியர்களில் இருந்து இளம் சாதனையாளர்களை ஒன்றிணைத்தல்” (Bringing together Young Achievers from India and Indian Diaspora) என்னும் தலைப்பில் மெய்நிகர் முறையில் நடைபெறும்.

மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் ஓம்கரேஷ்வர் அணையில் (Omkareshwar dam) கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய 600 மெகாவாட் மிதக்கும் சூரிய ஆற்றல் திட்டம் (World’s Largest Floating 600 Megawatt (MW) Solar Energy Project ) 2022-23 ஆம் ஆண்டளவில் மின் உற்பத்தியைத் தொடங்க உள்ளது.

கங்காபுரம் கிஷான் ரெட்டி குழு (Gangapuram Kishan Reddy Committee) : லடாக் யூனியன் பிரதேசத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்தைப் பாதுகாக்க ஒரு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவிற்கு மத்திய இணை அமைச்சர் கங்காபுரம் கிஷன் ரெட்டி தலைமை தாங்குவார், மேலும் லடாக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் இக்குழுவில் உறுப்பினராக இருப்பார்கள். லடாக்கின் வளர்ச்சியில் குடிமக்களின் பங்களிப்பை இந்த குழு உறுதி செய்யும்.

வெளிநாட்டு உறவுகள்

“குறிப்பிட்ட திறன்மிகு பணியாளர்” ("Specified Skilled Worker") தொடர்பான அமைப்பு முறையை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பிற்கான இந்தியா- ஜப்பான் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 6-1-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. செவிலியர் பணி, கட்டிட தூய்மைப் பணி, சரக்கு கையாளும் தொழில், இயந்திரங்கள் உற்பத்தி, மின்னணு மற்றும் மின்சக்தி தகவல் தொடர்பான தொழில், கட்டுமானம், கப்பல் கட்டுதல், வாகன பராமரிப்பு, வான்வழிப்பயணம், விடுதி, விவசாயம், மீன்வளம், உணவு மற்றும் குளிர்பான உற்பத்தி, உணவு சேவை தொழில் உள்ளிட்ட 14 தொழில் துறைகளில், தகுதியுள்ள, திறன்மிகு இந்திய தொழிலாளர்கள், ஜப்பான் நாட்டில் பணிபுரிவதற்கு இந்த உடன்படிக்கை வழிவகுக்கும்.

அமெரிக்க கேப்பிடல் போராட்டம் 2021 (United States Capitol Protests, 2021) : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனின் வெற்றியை எதிர்த்து டிரம்பின் ஆதரவாளர்கள் 6 ஜனவரி 2021 அன்று, "அமெரிக்காவை பாதுகாப்போம்" (Save America) என்ற பெயரில் பேரணியை நடத்தினர். இறுதியில் எதிர்ப்பாளர்கள் அமெரிக்காவின் வாசிங்க்டன் டி.சி.யில் உள்ள கேபிடல் கட்டிடத்தை ஆக்கிரமித்தனர். ஒரு கட்டத்தில் போராட்டம் தீவிரமடைந்து நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

சர்வதேச நிகழ்வுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு 7-1-2021 அன்று வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு அவரது வெற்றி நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார்.

பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் உயா்நிலை நிர்வாகக் குழுக்களில், ஒரு பெண்ணாவது இடம் பெற்றிருக்க வேண்டியது ஜொ்மனி நாட்டில் கட்டாயமாக்கப்படுகிறது .இதுகுறித்து அந்த நாட்டு அரசு உருவாக்கியுள்ள புதியச் சட்டத்தில், 4 அல்லது அதற்கு மேற்பட்ட செயல்குழு உறுப்பினா்களைக் கொண்ட நிறுவனங்களில், குறைந்தது ஒரு உறுப்பினராவது பெண்ணாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.நிறுவனங்களில் ஆண்-பெண் பாகுபாட்டைக் குறைக்கும் வகையில் இந்த அதிரடிச் சட்டம் வரையப்பட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 4 சதவிகிதம் வளர்ச்சி அடைய வாய்ப்பு இருப்பதாக உலக வங்கி கூறி உள்ளது.

சீனாவின் இணைய விற்பனைதளமான அலிபாபா நிறுவனம் தனது இசை ஒலிபரப்பு தளமான சியாமி மியூசிக்கை மூடுவதாக அறிவித்துள்ளது . கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சியாமிக் மியூசிக் தளத்தை 2013ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனம் வாங்கியது.

பொருளாதாரம்

”டிஜிட்டல் பணபரிமாற்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிகளுக்கான” (Payment Infrastructure Development Funds) செயல்பாட்டு வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது . அடுக்கு -3 முதல் அடுக்கு -6 மையங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிக டிஜிட்டல் பணபரிமாற்ற உள்கட்டமைப்பை நிறுவுவதே இந்த நிதிகளின் முக்கிய நோக்கமாகும்.

ரிசர்வ் வங்கி வழங்கிய முக்கிய வழிகாட்டுதல்கள்:

டிஜிட்டல் பணபரிமாற்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிகளுக்காக, பி பி கனுங்கோ தலைமையில் ரிசர்வ் வங்கி ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. ஆலோசனைக் குழு அடிப்படையில் நிதிகளை நிர்வகிக்கும். மறுபுறம், இந்த நிதிகள் ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படும்.

”டிஜிட்டல் பணபரிமாற்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி” 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு செயல்பட உள்ளது. இந்த நிதியில் 345 கோடி ரூபாய் மொத்த முதலீடு (corpus) உள்ளது. இதில் 250 கோடியை ரிசர்வ் வங்கியும், 95 கோடி ரூபாயும் இந்தியாவில் செயல்படும் கார்டு நெட்வொர்க்குகள் (card networks) வழங்கும்.

இந்தியாவின் முதலாவது அரசு நிதியுதவி உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையை (Infrastructure Investment Trust (InvIT) ) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India (NHAI)) 2021 மார்ச்சிற்குள் செயல்படுத்த உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு 5, 000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 5-6 சாலை திட்டங்களுக்கு மாற்றுவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அரூப் குமார் கோஸ்வாமி (Arup Kumar(A.K.) Goswami) 6-1-2021 அன்று பதவியேற்றார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

‘சந்திரயான்-3’, சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ செயற்கைகோள் மற்றும் சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்தும் புதிய வகை எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை 2021 ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

”சுவஸ்த் வாயு” (Swasth Vayu Non-invasive Ventilator) என்ற பெயரில் பெங்களூரில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு-தேசிய வானூர்தி ஆய்வகத்தை (CSIR - National Aerospace Laboratories (NAL)) சேர்ந்த விஞ்ஞானிகள், "CSIR - Institute of Genomics and Integrative Biology (CSIR-IGIB)" நிறுவனத்தின் மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள உடலில் செலுத்த வேண்டிய தேவையில்லாத சுவாசக் கருவிக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது.இதை 35 சதவீதம் வரை பிராணவாயு உதவி தேவைப்படும் கொவிட் நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்று சான்று வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகள்

அனைத்திந்திய செஸ் கூட்டமைப்பின் (All India Chess Federation) தலைவராக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கபூர் தேர்ந்தெடுக்கபப்ட்டுள்ளார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“Right Under our Nose” எனும் புத்தகத்தின் ஆசிரியர் - R கிரிதரண் (R Giridharan )

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!