TNPSC Current Affairs 3-4 பிப்ரவரி 2021
Click Here to Subscribe for Current Affairs PDF
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
தமிழ்நாடு
☞ செங்கல்பட்டு மாவட்டம், பையனூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளத்தை அமைக்க 3-ம் கட்ட நிதியாக ரூ.3.5 கோடிக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திடம் வழங்கினார்.
☞ சென்னை காவல்துறையில் ‘தோழி’ திட்டம் : பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் - பெண்கள்மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன் காக்க அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்றுமன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க சென்னை காவல்துறையில் ‘தோழி’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
☞ தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான பணியாளர் மக்கள் தொகை விகிதம் 51.4 ஆக உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர தொழிலாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
☞ இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தற்போதுள்ள வட்டாரங்களை பிரித்து, 6 புதிய வட்டாரங்களை (New Circles of Archaeological Survey of India) ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு,
1. குஜராத்தில் வதோதரா வட்டாரத்தை பிரித்து ராஜ்கோட் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
2. மத்தியப் பிரதேசத்தில் போபால் வட்டாரத்தை பிரித்து ஜபல்பூர் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
3. சென்னை மற்றும் திருச்சூர் வட்டாரத்தை பிரித்து திருச்சி வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
4. உத்தரப் பிரதேசம் ஆக்ரா வட்டாரத்தை பிரித்து மீரட் வட்டாரம் 5. உருவாக்கப்பட்டுள்ளது.
5. உத்தரப் பிரதேசம் லக்னோ வட்டாரத்தை பிரித்து ஜான்சி வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
6. மேற்கு வங்கம் கொல்கத்தா வட்டாரத்தை பிரித்து ராய்கன்ச் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : சென்னை மற்றும் திருச்சி வட்டாரங்களின் கீழ் வரும் மாவட்டங்களின் விவரம் வருமாறு,
Chennai Circle : Chennai, Cuddalur, Chengalpet, Dharmapuri, Erode, Kanchchipuram, Karishnagiri, Namakkal, Perambalur, Salem, Thirurvallur, Thirvannamalai, Vellore, Villupuram, tirupathur, Kallakurichi, Puducherry (U.T.).
Tiruchirapalli Circle : Ariyalur, Coimbatore, Dindigal, Karur, Madurai, Nagapattinam, Pudukkotai, Sivaganga, Tanjavur, Theni, Thoothukudi, Tiruchirapalli (Trichy), Thirupur, Kanyakumari, Nilgiri, Thirunelveli, Virudhunagar, Tiruvarur, Ramanathapuram, Tenkasi.
☞ இந்தியாவின் முதல் சதுப்புநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான மையம் (Centre for Wetland Conservation and Management) சென்னையில் அமைக்கப்படவுள்ளது.
☞ சேலத்தை சேர்ந்த இசக்கிராஜ் சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்தியா
☞ இந்திய விமானப் படைக்கு 83 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை எச்.ஏ.எல். நிறுவனத்திடமிருந்து ரூ.48,000 கோடி செலவில் வாங்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் 3-2-2021 அன்று கையெழுத்தானது.
☞ இந்தியாவின் மிகவும் இளம் வயதில் விமானி ஆன பெண் என்ற பெருமையை காஷ்மீரைச் சேர்ந்த 25 வயது ஆயிஷா அஜீஸ் பெற்றுள்ளார்.
☞ ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சி, பெங்களூரில் எலஹங்கா விமானப்படை தளத்தில் 3-2-2021 அன்று தொடங்கி 5-2-2021 வரையில் நடைபெறுகிறது .
☞ ”INSPIRE” (’Innovation in Science Pursuit for Inspired Research’) திட்டம் : கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் சார்ந்த படிப்புகளை படிப்பதற்காக, அவர்களை ஊக்குவிக்கவும் திறமையானவர்களுக்கு பயிற்சி வழங்கவும் அதன் வாயிலாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த துறைகளில் அவர்கள் பணிபுரிந்து நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மனிதவள மேம்பாட்டு ஆற்றலை விரிவுபடுத்தி தரமான மனித வளத்தை கட்டமைக்கும் நோக்கத்துடன் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தினால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.
☞ இந்தியாவில் அணு மின்சக்தி : இந்தியாவில் தற்போது 22 அணு உலைகள் 6,780 மெகாவாட் திறனுடன் செயல்பாட்டில் உள்ளதாகவும். மேலும் 12 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனவும். 2031ம் ஆண்டுக்குள், அணு மின்சக்தி திறன் 22,480 மெகாவாட் திறனை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய அணுசக்தி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
☞ இந்தியாவில், 2018-19-ஆம் ஆண்டில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.8 சதவீதமாகும்.
கூ.தக. : இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த வருடாந்திர தொழிலாளர் ஆய்வு தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது.
☞ 2030 ம் ஆண்டுக்குள் , பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலந்து விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது . இதற்காக, கரும்பு மற்றும் உணவு தானியங்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளது.
☞ மக்களாட்சி குறியீடு 2020 (Democracy Index 2020) ல் இந்தியா 53 வது இடத்தைப் பெற்றுள்ளது. Economist Intelligence Unit எனும்அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே நார்வே, ஐஸ்லேண்ட் மற்றும் ஸ்வீடன் நாடுகள் பெற்றுள்ளன.
☞ கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் 1600 டன் லித்தியம் ( lithium) படிவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
☞ 2020-ம் ஆண்டின் சிறந்த இந்தி வார்த்தையாக, சுயசார்பு இந்தியாவை குறிக்கும் ’ஆத்மநிர்பார்தா’ (“Aatmanirbharta”) என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு மொழிகள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இந்த வார்த்தைக்கான ஆங்கில அர்த்தம் ’ Self-Reliance’ (சுய சார்பு) என்பதாகும்.
வெளிநாட்டு உறவுகள்
☞ கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையத் திட்டம் அமைக்கும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்துள்ளது .
கூ.தக. : கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கன்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியா, ஜப்பான் நாடுகள் செய்து வந்தன.
இந்நிலையில் திடீரென இந்தஒப்பந்தத்தை இலங்கை ரத்துசெய்துள்ளது.
☞ குறைந்த வருவாய் கொண்ட 100 நாடுகளுக்கு வேண்டிய 110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவிடம் இருந்து யுனிசெப் அமைப்பு கொள்முதல் செய்கிறது .இதன்படி, குறைவான மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 100 நாடுகளுக்காக தலா 3 அமெரிக்க டாலர்கள் (ரூ.218) மதிப்பிலான 110 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை யுனிசெப் அமைப்பு கொள்முதல் செய்ய உள்ளது என தெரிவித்து உள்ளது.
☞ ‘யுத் அபியாஸ்’ ( ‘Yudh Abhyas’) என்ற பெயரில் இந்தியா - அமெரிக்கா இராணுவங்களிடையேயான 16 வது கூட்டு இராணுவ ஒத்திகை 8-16 பிப்ரவரி 2021 தினங்களில் இராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறுகிறது.
Country |
Exercise |
ADMM Plus Countries |
ADMM Plus Exercise |
Australia |
AUSINDEX |
KAKADU |
|
Black Carillon (Multi-lateral) |
|
Bangladesh |
IN-BN CORPAT (Annual) |
IN-BN BILAT (Annual) |
|
IN-BN SF Exercise (Annual) |
|
Brazil & South Africa |
IBSAMAR |
France |
VARUNA |
Indonesia |
IND-INDO CORPAT |
(Bi-annual) |
|
(Coordinated Patrol) |
|
IND-INDO BILAT |
|
IONS |
IONS Working Group Exercise (Multilateral) |
Japan |
JIMEX |
EOD J2A (Multilateral) |
|
Malaysia |
IN-RMN BILAT |
Maldives |
Ex EKATHA |
Myanmar |
IMCOR |
IN-MN BILAT |
|
Oman |
Naseem-al-Bahr |
Qatar |
Za’ir Al Bahr |
Russia |
INDRA NAVY |
Singapore |
SIMBEX |
Singapore & Thailand |
India, Singapore, Thailand Trilateral Exercise (SITMEX) |
Sri Lanka |
SLINEX |
IN-SLN SF Exercise |
|
Thailand |
INDO-THAI CORPAT |
UAE |
IN-UAEN BILAT |
UK |
KONKAN |
USA |
SPITTING COBRA (IN-USN EOD Exercise) |
SANGAM(IN-USN SF Exercise) |
|
IMX |
|
CUTLASS Express (Multilateral) |
|
RIMPAC (Multilateral) |
|
USA & Japan |
MALABAR |
USA, Japan & Australia |
MALABAR |
Vietnam |
IN-VPN BILAT |
Friendly Foreign Countries |
MILAN (Multilateral) |
Western Pacific Naval Symposium |
WPNS Exercise (Multilateral) |
சர்வதேச நிகழ்வுகள்
☞ உயிர் எரிபொருளால் இயக்கப்படும் உலகின் முதல் வணிகரீதியான ராக்கெட்டை அமெரிக்காவைச் சேர்ந்த சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ’ப்ளூஷிஃப்ட் ஏரோஸ்பேஸ்’ (bluShift Aerospace) உருவாக்கியுள்ளது.
☞ அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஜெப் பெசோஸ் அறிவித்துள்ளார்.
நியமனங்கள்
☞ மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) பொறுப்பு இயக்குநராக பிரவீண் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளாா். இவருக்கு முன்னர் சிபிஐ இயக்குநராக பதவி வகித்து வந்தவர் ரிஷிகுமாா் சுக்லா.
☞ தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : தஞ்சாவூரிலுள்ள உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வேம்பு. அமெரிக்கா, சிலிக்கன் பள்ளத்தாக்கில் பணியாற்றி வந்த அவர், கிராமப்புறங்களைத் தொழில்நுட்பம் சார்ந்து வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, சோஹோ என்னும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கினார். தற்போது அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஜப்பான் உட்பட எட்டு நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - அஜித் தோவல்
முக்கிய தினங்கள்
☞ உலக புற்றுநோய் தினம் - பிப்ரவரி 4
☞ உலக சதுப்புநில தினம் (World Wetlands Day) - பிப்ரவரி 2
☞ `சவுரி சவுரா’ நிகழ்வின் நூற்றாண்டு விழா பிப்ரவரி 4 அன்று கொண்டாடப்படுகிறது. . இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வான `சவுரி சவுரா’ சம்பவம் நடந்து 2021 பிப்ரவரி 4 அன்றுடன் நூறு ஆண்டுகள் ஆகின்றன.
கூ.தக. ` சவுரி சவுரா’ சம்பவம் 1922 பிப்ரவரி 4 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் ஐக்கிய மாகாணத்தின் , கோரக்பூர் மாவட்டத்திலுள்ள ( தற்போதைய உத்தரப்பிரதேசம்) சவுரி சவுராவில் நடந்தது.
ஒத்துழையாமை இயக்கத்தின்போது காந்தியடிகள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், எனினும் வன்முறைகள் பல இடங்களில் தொடர்ந்தன. 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள் உத்தரப்பிரதேஷத்தில் செளரி செளரா என்னும் இடத்தில் (கோரக்பூர்) ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணியின் போது காவலர்கள் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால், கோபம் அடைந்த விவசாயிகள் துப்பாக்கி சூட்டிற்கு எதிராக காவல் நிலையத்தை தீயிட்டு எரித்தனர். இதில் 22 காவலர்கள் உயிரிழந்தனர். இதனை கண்டு வருத்தமடைந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக கைவிட்டார். இந்த சம்பவத்தின் காரணமாக பிரிட்டிஷாரால் 172 இந்தியர்கள் தூக்கில் போடப்பட்டனர்.
☞ மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 52வது நினைவு தினம் - பிப்ரவரி 3, 2022 அன்று அனுசரிக்கப்பட்டது.
கூ.தக. : அண்ணா பிறந்த தினம் - 15 செப்டம்பர் 1909 | இறந்த தினம் 3 பெப்ரவரி 1969
விளையாட்டுகள்
☞ விஜய் ஹசாரே ஒருநாள் போட்டிக்கான தமிழக அணியில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இடம்பிடித்துள்ளார்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☞ “The Little Book of Encouragement” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - தலாய்லாமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.