Current Affairs for TNPSC Examinations 11-12 February 2021
Click Here to Subscribe for Current Affairs PDF
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
தமிழகம்
☞ சிவகங்கை மாவட்டம், கீழடி, மணலூா், கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் 13-2-2021 அன்று தொடக்கி வைக்கிறார்.
கூ.தக. : சிவகங்கை மாவட்டம், கீழடி பள்ளிச் சந்தை திடலில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, 4, 5 மற்றும் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அப்போது கிடைத்த தொல்பொருள்கள் அனைத்தும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
☞ தமிழகத்தில் 9-ம் வகுப்பு மற்றும் கல்லூரி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பெரியார் ‘யுனெஸ்கோ’ விருது பெற்றதாக உள்ள தகவலை நீக்கக் கோரும் மனுவை 12 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க பள்ளி, கல்லூரி பாடப் புத்தகக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
☞ எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம் (78) காலமானார். 'இதயக்கோயில்', 'அகலிகை காத்திருந்தாள்', 'பாட்டுடைத் தலைவி', 'அவள் வருவாளா?', 'என்னைக் கொன்றவன் நீ' ஆகியவை இவருடைய நாவல்களில் குறிப்பிடத்தகுந்தவை.
☞ இந்தியாவின் முதல் பொம்மை கண்காட்சி (Indian Toy Fair) 27 பிப்ரவரி 2021 முதல் 2 மார்ச் 2021 வரை மெய்நிகர் வழியாக நடைபெறவுள்ளது.
☞ ஹைதராபாத் மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக நகர மேயர்,துணை மேயர் பதவிகளுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த விஜயலட்சுமி மேயராகவும், இதே கட்சியை சேர்ந்த லதா துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
☞ கூ ("KOO") செயலி பற்றி : இந்தியாவில் இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ள ’கூ’ ("KOO") சமூக ஊடகச் செயலியானது பெங்களூருவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்திய அரசின் ‘சுயசார்பு இந்த்யா (ஆத்மனிர்பர்) சவால் 2020 ல் வெற்றி பெற்ற செயலிகளில் இதுவும் ஒன்றாகும். டிவிட்டர் (twitter) செயலிக்கு மாற்றாகக் கருதப்படும் இந்த செயலி தற்போது, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகமாகியிருக்கிறது.
☞ உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாடு 2021 (World Sustainable Development Summit 2021) 10-12 பிப்ரவரி 2021 தினங்களில் காணொளி வாயிலாக நடைபெறுகிறது . ‘ நமது பொது எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான சுற்றுச்சூழல்’ (Redefining our common future: Safe and secure environment for all) எனும் மையக்கருத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை , இந்தியாவைச் சேர்ந்த ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் ( The Energy and Resources Institute (TERI)) நடத்துகிறது.
☞ 33 நாடுகளில் இருந்து 328 செயற்கைகோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது என்று மக்களவையில் மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்தர சிங் தெரிவித்துள்ளார்.
☞ கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் நடந்து வரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில், ஹொய்சாலா கட்டடக் கலையில் கட்டப்பட்ட சமண கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
☞ தற்சார்பு இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘இனிப்பு புரட்சி’ (Sweet Revolution as part of Atmanirbhar Bharat Abhiyaan) : நாட்டின் ஒருங்கிணைந்த விவசாய அமைப்பில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கத்திற்கு ரூ. 500 கோடியை மூன்று வருடங்களுக்கு (2020-12 முதல் 2022-23) வரை அரசு ஒதுக்கியுள்ளது. , தேசிய தேனீ வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம், அறிவியல் பூர்வமான தேனீ வளர்ப்பின் மூலம் ‘இனிப்பு புரட்சி’ இலக்கை எட்டுவதை லட்சியமாகக் கொண்டுள்ள்து.
☞ இந்தியாவின் முதல் தொழில் வழித்தடமாக தில்லி, மும்பை, தொழில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
☞ ’திவ்யா-திருஷ்டி 2021’ (“Divya-Drishti 2021”) என்ற பெயரில் இந்திய இராணுவத்தின் தேசிய அளவிலான மாநாடு இணைய வழியில் 11-2-2021 அன்று நடைபெற்றது.
☞ அழுத்தமூட்டப்பட்ட எரிவாயுவில் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட நாட்டின் முதல் டீசல் டிராக்டரை (India’s first CNG Tractor) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி 12-2-2021 அன்று அறிமுகப்படுத்துகிறார். ராவ்மத் டெக்னோ சொல்யூஷன்ஸ் மற்றும் டொமசெட்டோ அக்கில் இந்தியா ( Rawmatt Techno Solutions & Tomasetto Achille India) ஆகியவற்றால் மாற்றியமைக்கப்பட்ட இந்த டிராக்டர் , செலவுகளை குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த உதவுவதோடு, ஊரக இந்தியாவில் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும்.
☞ கடல்சார் இந்திய மாநாடு-2021-இன் இரண்டாவது பதிப்பு 2-4 மார்ச் 2021 தினங்களில் நடைபெறவுள்ளது. 24 பங்குதார நாடுகளிலிருந்து சுமார் 20,000 பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
உலகம்
☞ ”பாபா் ஏவுகணை” : தரையிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தரை இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாபா் ஏவுகணையை பாகிஸ்தான் 11-2-2021 அன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
☞ சீனாவில் பிபிசி வேல்ட் நியூஸ் தொலைகாட்சிக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் உண்மைக்கு புறம்பான விதத்தில் செய்தி வெளியிட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
☞ மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
☞ சவுதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டளாரான லூஜின் அல் ஹத்லால் 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
☞ சீனாவில்2020-ஆம் ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் குறைந்துள்ளள்ளது.
☞ சதுர கிலோமீட்டர் வரிசை ஆய்வகம் (‘Square Kilometre Array’) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய கதிரியத் தொலைநோக்கியை (World’s Largest Radio Telescope) நிறுவுவதற்கு Square Kilometre Array Observatory (SKAO) Council ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்தப்படும். Australia, Canada, China, India, Italy, New Zealand, South Africa, Sweden, Netherlands மற்றும் England நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட Square Kilometre Array Observatory (SKAO) Council ன் தலைமையிடம் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் (University of Manchester) அமைந்துள்ளது.
☞ ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய 'நம்பிக்கை' ( ‘ஹோப்’ ) விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை 9-2-2021 அன்று சென்றடைந்தது. கடந்த ஆண்டு ஜூலை 2020 மாதம் 19-ம் தேதி ஜப்பான் நாட்டிலிருந்து இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அல் அமால்” என்று அரபு மொழியில் பெயரிடப்பட்ட (நம்பிக்கை) இந்த விண்கலம், 1.3 டன் எடை கொண்டதாகும். இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தானேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.ஐக்கிய அரபு அமீரகம் உருவாகி 2021-ம் ஆண்டுடன் 50-வது ஆண்டு ஆகியது என்பதால், அதன் நினைவாக இந்த நம்பிக்கை விண்கலம் செவ்வாய் கிரகத்தை அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
☞ தமிழக வீரா் டி.நடராஜன், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ளதையடுத்து, விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாட இருந்த அவா், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். பிசிசிஐ கேட்டுக் கொண்டதை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
☞ துபையில் நடைபெறும் சா்வதேச பாரா தடகள கிராண்ட் ஃப்ரீ போட்டியில் ஆடவருக்கான வட்டு எறிதல் பிரிவில் (எஃப்-44) இந்தியாவின் தேவேந்தா் குமாா் தனது 2-ஆவது முயற்சியில் 50.61 மீட்டா் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றாா். அதே பிரிவில் மற்றொரு இந்தியரான பிரதீப் 41.77 மீட்டா் தூரம் எறிந்து 2-ஆம் இடம் பிடித்தாா். மகளிருக்கான நீளம் தாண்டுதலில் (எஃப்46/47) இந்தியாவின் நிமிஷா சுரேஷ் 5.25 மீட்டா் தூரம் கடந்து தங்கத்தை தனதாக்கினாா்.
☞ உலக பருப்புகள் தினம் (World Pulses Day) - பிப்ரவரி 10
☞ தேசிய குடற்புழு நீக்கல் தினம் (National Deworming Day) - பிப்ரவரி 10
☞ அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம்(International Day of Women and Girls in Science) - பிப்ரவரி 11
☞ நிதி எழுத்தறிவு வாரமாக ( Financial Literacy Week 2021 ) 8-12 பிப்ரவரி 2021 தினங்களை இந்திய ரிசர்வ் வங்கி அனுசரிக்கிறது.
☞ உலக யுனானி தினம் (World Unani Day) - பிப்ரவரி 11 (தலைசிறந்த யுனானி அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான “ஹக்கீம் அஜ்மல் கானின்” (Hakim Ajmal Khan) பிறந்த தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.)
☞ மிஸ் இந்தியா 2020 பட்டத்தை தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி வென்றுள்ளார். இதன் மூலம், டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.மானசாவை அடுத்து அரியானாவைச் சேர்ந்த மனிகா சிஷோகந்த் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மன்யா சிங் ஆகிய இருவரும் ரன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புத்தகங்கள்
☞ ‘The Terrible, Horrible, Very Bad Good News’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மேக்னா பாண்ட் (Meghna Pant)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.