Current Affairs for TNPSC Exams 9-10 February 2021
Click Here to Subscribe for Current Affairs PDF
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
தமிழகம்
☞ கிருபானந்தவாரியார் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கூ.தக. : எம்.ஜி.ஆருக்கு ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார்
இந்தியா
☞ TP ராஜேந்திரன் குழு (TP Rajendran committee) : விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் குறிப்பிடப்படும் 27 பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க தொழில்துறையின் ஆட்சேபனைகளை மறுஆய்வு செய்ய இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் உதவி இயக்குநர் ஜெனரல் TP ராஜேந்திரன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
☞ உத்தரப்பிரதேச அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான நிலங்களையும் குறிக்க 16 இலக்க தனித்துவமான எண்ணை வழங்கும் முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலத்திற்கான 16 இலக்க தனித்துவ எண்களின் முதல் ஆறு இலக்கங்கள் நிலத்தின் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டவை. வரிசையில் அடுத்த 4 இலக்கங்கள் நிலத்தின் தனித்துவமான அடையாளத்தை தீர்மானிக்கும். 11 முதல் 14 வரையிலான இலக்கங்கள் நிலத்தின் பிரிவுகளின் எண்ணிக்கையாக இருக்கும். கடைசியாக, 2 இலக்கங்களில் நிலத்தின் வகை (குடியிருப்பு, விவசாய மற்றும் வணிக ) தொடர்பான விவரங்கள் இருக்கும்.
☞ தேசிய பருவமழை திட்டம் (National Monsoon Mission) :
வெளிநாட்டு உறவுகள்
☞ உலகின் முதல் எரிசக்தி தீவை (world’s first energy island ) உருவாக்கும் திட்டத்திற்கு டென்மார்க் நாடு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த எரிசக்தி தீவு ‘வடகடல்’ (North Sea) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
பொருளாதாரம்
☞ பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு : விவசாயிகளின் பயிா் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயிா் காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு அதிகளவிலான பயனை உறுதி செய்யவும், பிரதமரின் பயிா் பாதுகாப்பு திட்டத்துக்கு 2021-22 ஆம் நிதியாண்டில், மத்திய அரசு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டு ஒதுக்கீட்டை விட ரூ. 305 கோடி அதிகம்.
கூ.தக. : பிரதமரின் பயிா்க் காப்பீட்டு பயிா் காப்பீடு திட்டத்துக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, குறைந்த ப்ரீமியம் தொகையில், அதிக அளவிலான பாதுகாப்பை வழங்கும் திட்டமாக கருதப்பட்டது. இந்த திட்டம், உலகளவில் மிகப் பெரிய பயிா் பாதுகாப்பு திட்டமாக உள்ளது.
விருதுகள்
☞ அமெரிக்காவில் உள்ள ஆன்மிகம், பேச்சுவாா்த்தை, சேவைக்கான நாா்த்ஈஸ்டா்ன் பல்கலைக்கழகத்தின் சா்வதேச குடியுரிமைத் தூதராக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் அங்கீகரிக்கப்பட்டுள்ளாா்.
அறிவியல் / தொழில்நுட்பம்
☞ உலகின் முதல் பொதுமக்களுக்கான விண்வெளி பயண திட்டத்தை (World’s first all civilian mission to space) அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX ) அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ‘இன்ஸ்பிரேஷன் 4’ (Inspiration4) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) என்பவரின் தலைமையில் இந்த விண்வெளி பயணத் திட்டம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து தொடங்கப்படும்.
☞ அக்னிலெட் (Agnilet) 3டி அச்சிடப்பட்ட தனியார் ராக்கெட் இஞ்சின் சோதனை வெற்றி : சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் தயாரித்துள்ள உயர் நிலை அரை-கிரையோஜெனிக் ராக்கெட் இயந்திரமான அக்னிலெட்டை (Agnilet) வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஐ.ஐ.டி-மெட்ராஸில் சோதிக்கப்பட்டுள்ள இது 3D அச்சுப்பொறியின் ஒரு ஓட்டத்தில், ஒரு பாகமாக முற்றிலும் 3D அச்சிடப்பட்டுள்ள ஒரு தனித்துவமான ராக்கெட் இயந்திரமாகும்.
இதைத் தவிர, அக்னிகுல் காஸ்மோஸ் இந்தியாவின் முதல் தனியார் சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனமான அக்னிபான் (Agnibaan) என்ற ராக்கெட்டை உருவாக்கி வருகிறது, இது 100 கிலோ வரை எடையை 700 கிமீ வரை குறைந்த பூமியின் சுற்றுப்பாதையில் கொண்டு செல்லக்கூடிய திறன் கொண்டது.
☞ இந்தியாவின் முதலாவது புவிவெப்ப திட்டம் (Geothermal Project) லடாக்கின் புகா (Puga) கிராமத்தில் தொடங்கப்படவுள்ளது. ஓ.என்.ஜி.சி. (Oil and Natural Gas Corporation (ONGC) ) மற்றும் லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.
☞ ’Bellatrix Aerospace’ எனும் பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சிறியரக செயற்கைக் கோள்களை தாங்கி சென்று விண்வெளியில் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் நிறுத்ததுவதற்கான ‘ஸ்பேஸ் டாக்சியை’ (space taxi) உருவாக்கி வருகிறது.
நியமனங்கள்
☞ மத்திய புலனாய்வு அமைப்பின் (Central Bureau of Investigation(CBI)) இடைக்கால இயக்குநராக (interim director) பிரவீண் சின்கா (Praveen Sinha) நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தகங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.