TNPSC Current Affairs 13-14 மார்ச் 2021
Click Here to Subscribe for Current Affairs PDF
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
தமிழ்நாடு
☞ தமிழ் நாவலாசிரியரும் எழுத்தாளருமான இமையத்திற்கு, அவரது ‘செல்லாத பணம்’ எனும் நாவலுக்காக, 2020-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னடத்தில் ‘ஸ்ரீபாகுபலி அஹிம்சா திக்விஜயம்’ பெருங்கவிதை நூலை எழுதிய முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி, ஆங்கிலத்தில் ‘வென் காட் இஸ் எ டிராவலா்’ என்ற கவிதை நூலை எழுதிய அருந்ததி சுப்பிரமணியம் உள்பட 20 பேருக்கு சாகித்திய அகதமி விருது 2020 அறிவிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : எழுத்தாளா் இமையத்தின் இயற்பெயா் சி.வெ. அண்ணாமலை. கடலூா் மாவட்டம் கழுதூரில் விவசாயக் குடும்பத்தைச் சோ்ந்தவா். இவரது ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘பெத்தவன்’ ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு கடலூா் மாவட்டத்திலிருந்து சாகித்ய அகாதெமி விருதை எழுத்தாளா் ஜெயகாந்தன் ‘சில நேரங்களில் சில மனிதா்கள்’ என்ற நாவலுக்காக கடந்த 1972-ஆம் ஆண்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.
☞ தமிழ்த் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக் குறைவால் காலமானார் . இயற்கை, ஈ, பேராண்மை,புறம்போக்கு என்னும் பொதுவுடமை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன், ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'பூலோகம்' திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
மேலும், விஜய்சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 'லாபம்' திரைப்படத்தையும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். இவரது 'இயற்கை' திரைப்படம் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
☞ தேர்தல் மன்னன் பத்மராஜன் 216-வது முறையாக எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இவர், அதிக முறை தொடர்ந்து போட்டியிட்டு லிம்கா, கின்னஸ் போன்ற சாதனைப் புத்தகங்களில் சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார். இதனால் தேர்தல் மன்னன் பத்மராஜன் எனவும் அழைக்கப்படுகிறார்.
இந்தியா
☞ அனைவரையும் கவரும் விதத்திலான வளா்ச்சியைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக பிரைஸ் வாட்டா்கூப்பா்ஸ் (பி.டபிள்யூ.சி.) நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
☞ இந்திய சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகவுள்ளதைச் சிறப்புப்படுத்தும் நோக்கிலான கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக, குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள சபா்மதி ஆசிரமத்திலிருந்து ‘சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம்’ நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி அவர்கள் 12-3-2021 அன்று தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையை நினைவுகூரும் வகையில், 81 போ் கொண்ட குழு புறப்பட்டது. ஆமதாபாதிலிருந்து தண்டி கடற்கரை வரையிலான 386 கி.மீ. தூரத்தை இவா்கள் 25 நாட்களில் நிறைவு செய்வாா்கள். ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி இந்த யாத்திரை நிறைவடையும்.
நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்குக் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களானது 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன
கூ.தக. : மகாத்மா காந்தியடிகள் கடந்த 1930-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி உப்பு மீது விதிக்கப்படும் வரியை ரத்து செய்யக் கோரி சபா்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி கடற்கரைக்குப் பாத யாத்திரை மேற்கொண்டாா்.
☞ மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகளை மாநில தோ்தல் ஆணையா்களாக நியமிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
☞ 4 வது ‘உலக ஆயுர்வேதா திருவிழா’ (Global Ayurveda Festival) 12-19 மார்ச் 2021 தினங்களில் மெய்நிகர் வழியில் நடைபெறுகிறது.
☞ ரூ.30,000/- வரையிலான ஊதியமுள்ள தனியார் வேலை வாய்ப்புகளில் மாநிலத்திலுள்ளவர்களுக்கு 75% முன்னுரிமை வழங்குவதற்கான திட்டத்திற்கு ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
☞ ’மேரா ரேஷன் மொபைல் ஆப்’ (“Mera Ration Mobile App” ) என்ற பெயரில் ‘ஒரு தேசம் ஒரே ரேஷன் அட்டை’ (‘One Nation-One Ration Card’ ) முறைமைக்கான மொபைல் செயலியை மத்திய அரசு 12-3-2021 அன்று வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் உதவியுடன் பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உணவு தானிய அளவு, சமீபத்திய பரிவர்த்தனைகள் மற்றும் அவர்களின் ஆதார் இணைப்பு நிலை பற்றிய விவரங்களை எளிதாக சரிபார்க்க முடியும். புலம்பெயர்ந்த பயனாளிகள் விண்ணப்பத்தின் உதவியுடன் தங்கள் இடம்பெயர்வு விவரங்களையும் பதிவு செய்யலாம்.
வெளிநாட்டு உறவுகள்
☞ ஈரான் நாட்டிற்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
☞ முதலாவது, இந்திய எரிசக்தி அலுவலகம் (India Energy Office (IEO)) ரஷியாவின், மாஸ்கோ நகரில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு இடையில் எரிசக்தி துறையில் பரஸ்பர முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் மூலம், இந்தியாவின் சிறந்த எண்ணெய் நிறுவனங்களான, ஓ.என்.ஜி.சி விதேஷ் (ONGC Videsh) , இந்தியன் ஆயில் (IndianOil) , கெயில் (GAIL) , ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Ltd) மற்றும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (Engineers India Ltd) ஆகியவை எரிசக்தி துறையில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான பொதுவான தளமாக இதைப் பயன்படுத்த முடியும்.
☞ ”குவாட் நாடுகள்” (QUAD countries) , 2022 ஆம் ஆண்டிற்குள், 1 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளை ஆசியா மற்றும் இந்தோ-பசுபிக் நாடுகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளன.
கூ.தக. : குவாட் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் - அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான்
☞ ’பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பின் ’பொருளாதார மற்றூம் வர்த்தக பிரச்சனைகளுக்கான தொடர்பு குழுவின்’ (BRICS Contact Group on Economic and Trade Issues (CGETI)) முதலாவது கூடுகை இந்தியாவின் தலைமையில் 9-11 மார்ச் 2021 தினங்களில் நடைபெற்றது.
சர்வதேச நிகழ்வுகள்
☞ ஈக்குவடார்(Ecuador) நாட்டிலுள்ள சாங்காய் எரிமலை ( Sangay volcano) 11-3-2021 அன்று வெடித்தது .
☞ சொமாலியா நாட்டில் உடனடியாக தேர்தலை நடத்துமாறு ஐக்கியநாடுகளவையின் பாதுகாப்பு சபை (United Nations Security Council (UNSC)) அந்நாட்டின் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
முக்கிய தினங்கள்
☞ உலக சிறுநீரக தினம் 2021 (World Kidney Day 2021) - மார்ச் 11 (ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று அனுசரிக்கப்படுகிறது)
அறிவியல் & தொழில்நுட்பம்
☞உயர் வளிமண்டல பரப்பில் நிலவும் காற்று மற்றும் பிளாஸ்மா அயனிகள் தொடர்பான ஆய்வுக்காக இஸ்ரோ சார்பில் ‘ஆர்எச்-560 (RH-560) ரக சவுண்டிங் ராக்கெட் ’ ( sounding rocket ) ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 12-3-2021 அன்று வெற்றிகரமாக ஏவப் பட்டது.
புவி பரப்புக்கு மேல் உள்ள உயர் வளிமண்டலத்தில் வீசக்கூடிய காற்று, பிளாஸ்மா அயனிகளின் செயல்பாடு ஆகியவற்றில் நிலவும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக இந்த ராக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.
கூ.தக. : இஸ்ரோவிடம் ஆர்எச்-200, ஆர்எச்-300, ஆர்எச்-560 என 3 விதமான சவுண்டிங் ராக்கெட்கள் உள்ளன. இது 2 நிலைகளைக் கொண்டது. இவற்றின் மூலம் 100 கிலோ வரையிலான ஆய்வுக் கருவிகளை அதிகபட்சம் 475 கி.மீ. தூரம் கொண்ட புவியின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்த முடியும். அதன்படி, கடந்த 1965-ம்ஆண்டு முதல் இதுவரை இஸ்ரோசார்பில் 100-க்கும் மேற்பட்ட சவுண்டிங் ராக்கெட்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
விளையாட்டுகள்
☞ இந்திய மகளிா் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், சா்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்றுவித போட்டிகளையும் சோ்த்து) 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளாா் . உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் நடைபெற்ற , தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 36 ரன்கள் பெற்றதையொட்டி இந்த சாதனையை நிறைவு செய்துள்ளார்.
☞ கோவாவில் நடைபெற்ற, இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி , நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பகான் அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
What about the updates?
பதிலளிநீக்கு