TNPSC Current Affairs 5-6 மார்ச் 2021
Click Here to Subscribe for Current Affairs PDF
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
தமிழ்நாடு
☞ 5500-3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்துக்குச் சான்றாக உள்ள முத்திரைகளில் காணப்படும் எழுத்து வகையைச் சேர்ந்த பழங்கால பானை ஓடுகள் ராமநாதபுரத்தில் அரியக் குடி, அரசநகரி, ராஜசிங்கமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தியா
☞ ஷியாம் பிரசாத் முகர்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ( Dr. Syama Prasad Mookerjee Institute of Medical Sciences and Research ) ஐ.ஐ.டி. காரக்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.
☞ இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் தேசிய டால்ஃபின் ஆராய்ச்சி மையம் (National Dolphin Research Centre) பீகாரின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கங்கை நதிக்கரையில் அமைக்கப்படவுள்ளது.
☞ மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில், பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் சிறப்பு மையம்’ (‘Center of Excellence in toys and gaming related areas’) ஐ.ஐ.டி மும்பையில் அமையவுள்ளது.
☞ இந்திய அரசு, மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் இந்தியாவின் முதல் பொம்மை உற்பத்தி திரள் (toy manufacturing cluster) கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ளது.
☞ ராம்ஜெட் என்ற ஜெட் என்ஜின் தொழில்நுட்பத்தில் (Solid Fuel Ducted Ramjet (SFDR) technology) , விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தி, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில்,வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ரஷியாவுடன் இணைந்து இந்தியா இந்த திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை (எஸ்எப்டிஆர்) தொழில்நுட்பத்தை மேம்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
☞ இந்தியாவில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ எடையுடைய உணவை வீணாக்குவதாக ஐநா. சுற்று சூழல் திட்டத்தின் (United Nation Environment Programme (UNEP)) , உணவு வீணாதல் பட்டியல் அறிக்கை 2021 (“Food Waste Index Report, 2021”) எனும் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
☞ இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை (15 ஆகஸ்டு 2020) சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 259 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அளவிலான குழு பிரதமர் மோடி அவர்களைத் தலைமையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில் தேசிய அளவிலான அமலாக்க குழு (National Implementation Committee) அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
☞ பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ‘ஏக் ஒளா் நரேன்’ (மற்றுமொரு நரேன்) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகவுள்ளது . வங்க மொழித் திரைப்பட இயக்குநா் மிலன் பௌமிக், பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கவுள்ளாா். அந்தப் படத்தில் பிரதமா் மோடியின் வேடத்தில் தொலைக்காட்சி நடிகா் கஜேந்திர சௌஹான் நடிக்கவுள்ளாா்.
சர்வதேச நிகழ்வுகள்
☞ சீனா தனது ராணுவ பட்ஜெட்டை ரூ.15 லட்சம் கோடியாக உயர்த்தி உள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகமாகும்.
கூ.தக. : உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.
சீன ராணுவத்தின் தற்போதைய பட்ஜெட் அமெரிக்க ராணுவ பட்ஜெட்டில் 4-ல் ஒரு பங்குக்கு நிகராகும். 2021 ம் ஆண்டுக்கான அமெரிக்க ராணுவ பட்ஜெட் 740.5 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.54 லட்சத்து 75 ஆயிரம் கோடி) ஆகும்.
☞ அமெரிக்காவில் தமிழ் பெண் எம்.பி. பிரமிளா ஜெயபால் நம்பிக்கை தடுப்பு, வணிக மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்தவர்ஆவார்.
விருதுகள்
☞ சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு ‘செராவீக் சா்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமை விருது’ வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
முக்கிய தினங்கள்
☞ மக்கள் மருந்தக தினம் (Janaushadhi Diwas) - மார்ச் 7 . ‘மக்கள் மருந்தகம்- சேவையும், வேலைவாய்ப்பும்’ என்பது இதன் மையக்கருவாகும்.
மக்கள் மருந்தக வாரம் நாடு முழுவதும் மார்ச் 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.
பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana) பற்றி …
தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாக கொண்டு நவம்பர் 2008 -ல் ‘மக்கள் மருந்தக திட்டம்’ ('Jan Aushadhi Scheme' ) என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது செப்டம்பர் 2015 -ல் ‘பிரதம மந்திரி மக்கள் மருந்தக திட்டம்’ ( 'Pradhan Mantri Jan Aushadhi Yojana' (PMJAY).) எனப் பெயர்மாற்றப்பட்டது, பின்னர் நவம்பர் 2016 -ல் ‘பிரதம மந்திரி பாரத மக்கள் மருந்தக திட்டம்’ ( "Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana" (PMBJP).) எனப் பெயர்மாற்றம் செய்யபட்டது.
இந்த திட்டம் மூலம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கடைகளின் மொத்த எண்ணிக்கை 7499-ஐ தொட்டுள்ளது. சந்தை விலையை விட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவான விலையில் இங்கு மருந்துகள் விற்கப்படுவதால், 2020-21 நிதி ஆண்டில் (2021 மார்ச் 4 வரை), ரூ. 3,600 கோடியை பொது மக்கள் சேமித்துள்ளனர்.
☞ 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக (International Year of Millets) ஐ.நா. பொதுச் சபை அறிவித்துள்ளது.
விளையாட்டுகள்
☞ சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் ( International Boxing Association(AIBA) ) முன்னாள் வீரர்கள் மற்றும் சாம்பியன்கள் குழுவின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த மேரி கோம் ( Mary Kom ) நியமிக்கப்பட்டுள்ளார்.
☞ பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடைபெற்ற 3-ஆவது இந்திய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டிகளில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரா் நீரஜ் சோப்ரா 88.07 மீ. தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளாா்.
FOR CURRENT AFFAIRS IMPORTANT QUESTIONS AS QUIZ FORMAT
SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL
WWW.YOUTUBE.COM/PORTALACADEMY
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.