Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Post Top Ad

Your Ad Spot

TNPSC Current Affairs in Tamil 7 & 8 March 2021

 TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு 7-8 மார்ச் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழகம்

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடுவதில் தமிழகம் 9-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் முதல் இடத்தையும் குஜராத் 2-வது இடத்தையும், மகாராஷ்டிரா 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

கூ.தக. : இந்தியாவில் கரோனா பரவலைதடுக்க கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் போடப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது. 


இந்தியா

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) மத்திய பிரதேச மாநிலத்தின் ஒருநாள் உள்துறை அமைச்சராக பெண் காவலர்  மீனாட்சி வர்மா  நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய இரயில்வேயின்  அனைத்து பயணிகள் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த உதவி எண்ணாக “139”  எனும் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.  இரயில் பயணத்தின் போது பயணிகளுக்கான அனைத்து வகையான கேள்விகள், உதவி மற்றும் புகார்களுக்கு இந்த ஹெல்ப்லைன் எண்ணைப் பயன்படுத்தலாம்.
”விமண் வில்” (‘Women Will’) என்ற பெயரில் இந்தியாவில்  1 மில்லியன் கிராமப்புற பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கான  பயிற்சிகளை வழங்குவதற்கான  இணைய தள சேவையை  சர்வதேச பெண்கள் தினம் 2021 ஐ முன்னிட்டு கூகுள் (Google)  நிறுவனம் தொடங்கியுள்ளது. 

வெளிநாட்டு உறவுகள்

”மைத்ரி சேது பாலம்” (‘Maitri Setu’ ) : இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள எல்லைப் பகுதி   மற்றும் வங்காளதேசத்திற்கிடையே  ஃபெனி (Feni river) ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டுள்ள ”மைத்ரி சேது” (‘Maitri Setu’ )  பாலத்தை பிரதமர் மோடி அவர்கள் 9-3-2021 அன்று திறந்து வைக்கவுள்ளார். 

உலகம்

பிரான்ஸின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரும் டசால்ட் விமான உற்பத்தி நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான ஆலிவர் டசால்ட் , ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

”பொருளாதார சுதந்திர குறியீடு 2021” (Economic Freedom Index 2021) -ல்  முதல் ஐந்து இடங்களை முறையே சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.  அமெரிக்காவைச் சேர்ந்த ‘Heritage Foundation’ எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பொருளாதார சுதந்திர குறியீட்டில் இந்தியா   121 இடத்தைப் பெற்றுள்ளது. 
☛ கரோனா தடுப்பூசிகளுக்கு காப்புரிமைகள் வழங்கக் கூடாது என்று உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் கோரிக்கை விடுத்துள்ளன. 
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய அரசியல் கட்சி  இலங்கையின்  யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  நோக்கில் தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கும் இந்தியாவில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அதன் தலைவர் வி.முத்துசாமி  தெரிவித்துள்ளார்.  
(செய்தி ஆதாரம்: தி இந்து) 

நியமனம்

ஆசியா - பசுபிக் ஊரக வேலாண்மை கடன் சங்கத்தின் (Asia Pacific Rural and Agricultural Credit Association(APRACA))  தலைவராக ,  இந்தியாவின் நபார்டு (NABARD) அமைப்பின்  தலைவர்  ஜி.ஆர்.சிந்தாலா  (G R Chintala) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

கூ.தக. :  1977 ல் தொடங்கப்பட்ட பசுபிக் ஊரக வேலாண்மை கடன் சங்கத்தின் தலைமையிடம்  தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ளது.  இவ்வமைப்பில் தற்போது  24 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். 

 ☛ ஐக்கிய நாடுகளவையின்  மனித உரிமைக் கவுண்சிலின்   (Advisory Committee of the United Nations Human Rights Council(UNHRC)) ஆலோசனைக் குழுவின் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் எனும் பெருமையை  அஜய் மல்கோத்ரா (Ajai Malhotra) பெற்றுள்ளார். 

இந்திய தொழில் கூட்டமைப்பின்( Confederation of Indian Industry (CII) ) தென் மண்டலத் தலைவராக சி.கே.ரங்கநாதன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.


விளையாட்டு
மேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் மகளிருக்கான 53 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் உலகின் முதல்நிலை வீராங்கனை இடத்தையும் அவா் எட்டினாா்.
46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்,   10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில்  நடிகர் அஜித் குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 
இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெற்று வரும்,  மேட்டியோ பெலிகோன் தரவரிசை சா்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா (Bajrang Punia)  மேட்டியோ பெல்லிகோன் தரவரிசைத் தொடரில் 65 கிலோ பிரிவில்  அடுத்தடுத்து இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றதினால், உலக  தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

அறிவியல் தொழில்நுட்பம்
செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள ‘பொ்சிவரன்ஸ்’ (Perseverance) ஆய்வுக் கலம், சோதனை முறையில் முதல்முறையாக 6-3-2021 அன்று செலுத்திப் பாா்க்கப்பட்டது.33 நிமிஷங்களுக்கு இயக்கப்பட்ட அந்த ஆய்வுக் கலம், சுமாா் 6.5 மீட்டா் தொலைவுக்கு நகா்த்திப் பாா்க்கப்பட்டது. பொ்சிவரன்சின் நகரும் திறன், அதில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கருவிகளின் செயல் திறன் ஆகியவற்றைப் பரிசோதிப்பதற்காக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 
கூ.தக. : செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா அனுப்பிய பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் அந்த கிரகத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது.
வேற்று கிரகத்துக்கு அனுப்பப்பட்டதிலேயே மிகப் பெரியதும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதுமான அந்த ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தின் ‘ஜெஸெரோ’ பள்ளப்பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உயிரினங்களின் கரிமப் படிமங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய, அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை பென்சிவரன்ஸ் ஆய்வுக் கலம் சேகரித்து பூமிக்கு எடுத்து வரவுள்ளது.

முக்கிய தினங்கள்
International Women’s Day  - மார்ச் 8  | மையக்கருத்து 2021 - ”தலைமைத்துவத்தில் பெண்கள்: COVID-19 உலகில் சமமான எதிர்காலத்தை அடைதல்” (Women in leadership:  Achieving an equal future in a COVID-19 world)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot