உலக சுகாதார அமைப்பு பொதுமக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், கோவிட்-19 வைரஸ் வகைகளை கிரேக்க எழுத்துகளின் (Greek Alphabet) வரிசையில் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா ...... என வரிசைப்படுத்துகிறது. இவைகள் பின்வருமாறு குறிக்கப்படுகின்றன.
Alpha (B.1.1.7)
Beta (B.1.351)
Gamma (P.1),
Delta (B.1.617)
இவைகளில் B.1.617 எனப்படும் டெல்டா வகை (Delta (B.1.617) ) அக்டோபர் 2020 ல் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இதற்கு B1.617.1, B.1.617.2 மற்றும் B.1.617.3 என மூன்று துணைவகைகள் (subtypes) உள்ளன. இவைகளில் ”B.1.617.2” வகை “டெல்டா பிளஸ்” (Delta Plus) என அழைக்கப்படுகிறது. இந்த வகையே பாதிப்பு ஏற்படுத்த தக்கதாக கருதப்படுகிறது.
‘டெல்டா பிளஸ்’ வகையானது ‘டெல்டா வகையை’ விட கூடுதலாக உருமாறியுள்ளது. இதன் உருமாறுதல் “K417N mutation” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம், சார்ஸ்-கொரோனா வைரஸ் 2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ்களுக்கு
‘காப்பா(Kappa)
- B.1.617.1’ மற்றும்
‘டெல்டா (Delta)
-B.1.617.2’ என நான்கெழுத்து கிரேக்க எழுத்துகளின் பெயரை உலக சுகாதார நிறுவனம் சூட்டியது. மேலும், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று
உப ரகங்களில், டெல்டா ரகம் (பி.1.617.2 ) மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார
நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.கப்பா (பி.1.617.1 ) உப ரக வைரஸின் பரவல் மிகக் குறைவாக உள்ளதால் அதனை
கவனிக்கப்பட வேண்டிய ரகமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.பி.1617.3 என்ற பெயரிடப்படாத மூன்றாவது உப ரக வைரஸ் மிக மிக குறைவாகவே
கண்டறியப்பட்டுள்ளதால், அது எந்த பிரிவிலும் சேர்க்கப்படவில்லை.
கூ.தக.
: கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல் முதன் முறையாக
கண்டறியப்பட்டது. பின்னர் மூன்ற உப ரகங்களாக இது பிரிந்தது. இவற்றில் பி.1.617.2 என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று
பெயர் சூட்டியது. பி.1.617.1
ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இங்கிலாந்து
நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் (‘UK variant’) -க்கு ‘ஆல்ஃபா’ (‘Alpha’)(B.1.1.7) என்று பெயரிடப்பட்டுள்ளது.
Can you upload the current affairs in English too sir?! Your contents are good. It will be useful for many aspirants writing exams in English.
பதிலளிநீக்குHi, thank you for ur appreciations...regret for the inconvinience , at present its not possible for english current affairs....planning to start it in future
நீக்கு