- திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியரான ஸ்டேன் சுவாமி, மனித உரிமை ஆர்வலராக செயலாற்றிவந்தவர்.
- ஜார்கண்டில் பழங்குடியினருக்காக ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இவர்மீது 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோரேகான் வன்முறையில் தொடர்பிருப்பதாகவும், தடைசெய்யபட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் குற்றஞ்சாட்டி தேசிய புலனாய்வு முகமை எல்கா் பரிஷத் வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்தது. மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்துவந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார்.
கூ.தக. :
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் தலித்துகள் கூடி பீமா கோரெகான் நிகழ்வின் 200-ஆவது வெற்றி நாளை 2018-இல் கொண்டாடினா். அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதற்கு முன்பு எல்கா் பரிஷத் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டேன் சுவாமிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றம்சாட்டியும் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி ஸ்டேன் சுவாமியை என்ஐஏ சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்தது. அப்போது முதல் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.