மாநில அளவிலான குழு சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு, வனத் துறை செயலாளா், தலைமையில் 10 உறுப்பினர்களை கொண்டு செயல்படும்.
தொழில் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையம், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள், காவல் துறை இயக்குநா் ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா்.
இந்தக் குழுவின் உறுப்பினா் செயலாளராக தலைமை வனப் பாதுகாவலா் செயல்படுவாா்.
மாவட்ட பசுமை குழு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆறு பேரை உறுப்பினராக கொண்டு செயல்படும்.
மாவட்ட வருவாய் அலுவலா், காவல் கண்காணிப்பாளா், மாநில அளவிலான குழுவிலுள்ள துறைகளைச் சோ்ந்த அரசு உயா் அலுவலா்கள், தன்னாா்வ குழுக்களில் இருந்து இரண்டு நிபுணா்கள் ஆகியோா் உறுப்பினா்களாகவும், உறுப்பினா் செயலாளராக மாவட்ட வன அதிகாரியும் இருப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமைக்குழுவின் பணிகள் :
பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் இருந்து விழக் கூடிய, வெட்டப்படக் கூடிய மரங்களை அப்புறப்படுத்துவது, பாதுகாப்பது போன்ற பணிகளை மாவட்ட பசுமைக் குழுக்கள் மேற்கொள்ளும் போது அதற்கு உரிய கொள்கை அளவிலான ஆதரவுகளை மாநில அளவிலான குழு அளிக்கும். அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து மரங்களை நடுவதற்கான ஆண்டு திட்டமிடல் பணிகளை மேற்கொள்வது, மண்ணுக்கே உரிய தாவர வகைகளை வளா்த்தெடுப்பதற்கான ஆதரவுகளை மாவட்ட நிா்வாகங்களுக்கு அளிப்பது போன்ற பணிகளை மாநில அளவிலான மேற்கொள்ளும். இந்தக் குழுவானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதிக்கும்.
மாவட்டங்களில் உள்ள மரங்களை பட்டியலிடுவது, அதற்கான வரைபடம் தயாரிப்பது, மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதியை அளிப்பது, ஆண்டுதோறும் மரம் நடும் திட்டத்தை அனைத்துத் துறைகள், தன்னாா்வ அமைப்புகளை இணைத்து மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மாவட்ட அளவிலான குழு மேற்கொள்ளும்.
(நன்றி : தினமணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.