Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழக பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் - மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு

 தமிழக பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் பற்றி  மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ.) வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், மாணவ- மாணவிகளில் 2019-20-ம் கல்வியாண்டில் இடைநிற்றல் விகிதத்தை பார்க்கும்போது, முதலாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் 1.1 சதவீதமும், 6 முதல் 8-ம் வகுப்புகளில் 0.4 சதவீதமும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 9.6 சதவீதமும் இருக்கிறது. இதன்மூலம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் தான் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பது தெரியவருகிறது. இதில் 13 சதவீத மாணவர்களும், 6 சதவீத மாணவிகளும் அடங்குவார்கள்.

இதேபோல் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தக்கவைத்தல் விகிதத்தை (ரெட்டன்சென் ரேசியோ) பார்க்கும்பொழுது, தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5- ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 94 பேர்தான் 5-ம் வகுப்பு வரை படித்து முடிக்கிறார்கள். நடுநிலை பள்ளிகளில் (1 முதல் 8-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 86 பேர்தான் 8-ம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.

அதேபோல், உயர்நிலைப்பள்ளிகளில் (1 முதல் 10-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 82 பேர்தான் 10-ம் வகுப்பை முடிக்கிறார்கள். மேல்நிலைப்பள்ளிகளில் (1 முதல் 12-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 பேரில் 68 பேர் மட்டும் தான் 12-ம் வகுப்பு வரை படித்து முடிக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot