வரைவு மின்சார (பசுமை எரிசக்தி பொதுவான அணுகுமுறையின் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவித்தல்) விதிகள் 2021 (Draft Electricity (promoting renewable energy through Green Energy Open Access) Rules, 2021) ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு,
“பசுமை ஹைட்ரஜன்” என்பது, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தை உபயோகித்து உருவாக்கப்படும் ஹைட்ரஜன் என்று வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் பசுமை ஹைட்ரஜனை வாங்குவதன் மூலம் தங்களது புதுப்பிக்கத்தக்க கொள்முதல் பொறுப்பையும் பூர்த்தி செய்யலாம்.
புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் ஒரு மெகாவாட் ஹவரிலிருந்து தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜனிற்கு இணையாக பசுமை ஹைட்ரஜனின் அளவு கணக்கிடப்படும். மத்திய ஆணையம் இதற்கான நெறிமுறைகளை அறிவிக்கும்.
பசுமை எரிசக்தியை பொதுவாக அணுகுவதற்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்படும் என்று இந்த வரைவு விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை எரிசக்தியை பயன்படுத்த விரும்பும் நுகர்வோருக்கு பசுமை எரிசக்தி பொது அணுகுமுறையை அளிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட ஆணையம் வெளியிடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.