நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளிலும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கென, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

கூ.தக. :   நீதியரசர் பி.கலையரசன் குழு ... 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில்  இட ஒதுக்கீடு வழங்குவதற்காக  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் அவர்கள் தலைமையில்  மார்ச்  2020 ல்  ஆணையம்  ஒன்றை தமிழ்நாடு அரசு அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் கடந்த  8 ஜூன் 2020  தேதியன்று தனது பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. அதில் 10 சதவீதத்திற்குக் குறையாமல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என்றும் ஐந்தாண்டுகள் கழிந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அளவிடலாம் என்றும் பரிந்துரைத்தது.  இதையடுத்து, தமிழக அரசு  2020-21 கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க  15-9-2020 அன்று சட்டம்  நிறைவேற்றப்பட்டது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!