Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உலக வர்த்தக அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தரக் குழு - சர்வதேச வணிகத்திற்கான இந்திய நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டத்திற்கான மையம் இடையே ஒப்பந்தம்

 உலக வர்த்தக அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தரக் குழு( Permanent Mission of India to the WTO (PMI)) , சர்வதேச வணிகத்திற்கான இந்திய நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டத்திற்கான மையம் (Centre for Trade and Investment Law (CTIL) ) , மற்றும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச மற்றும் வளர்ச்சி கல்விக்கான பட்டப்படிப்பு நிறுவனத்தில் (Graduate Institute of International and Development Studies, Geneva.)  இயங்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான மையத்திற்கு  இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை  18-8-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டம் ஆகிய துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்டத்திற்கான மையம் மற்றும் வர்த்தக துறையின் பணியாளர்களுக்கு மதிப்புமிக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot