‘EOS-3’ அல்லது GISAT-1 (Geo Imaging Satellite-1) என்ற பெயரிலான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ( (Earth observation satellite)) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 12 ஆகஸ்டு 2021 அன்று GSLV-F10 ராக்கெட் மூலமாக விண்ணுக்கு செலுத்தவுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
EOS-03 செயற்கைக்கோள் இந்திய துணைக்கண்டத்தில் வெள்ளம் மற்றும் சூறாவளிகள் போன்ற இயற்கை பேரழிவுகளை , சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றங்களின் மூலம் கண்காணிக்க உதவும். வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் தொடர்பான முக்கிய தரவுகளை அனுப்பும் இந்த செயற்கைக்கோள் நாள்தோறும் நான்கு முதல் ஐந்து முறை முழு நாட்டையும் படம் பிடிக்கும். மேலும், EOS-03 செயற்கைக் கோளின் மூலம் நீர்நிலைகள், பயிர்கள், தாவர நிலைகள் மற்றும் வனப்பகுதி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணிக்க முடியும்.
2,268 கிலோ எடை கொண்ட இஓஎஸ் செயற்கைக் கோளின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.