இந்தியாவிலேயே முதல் முறையாக 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 5-8-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் எனும் பெயரில் 1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கான திட்டம் தமிழ் நாடு அரசால் தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கு இந்த சேவைகளும், அடுத்து விரைவில் 1 கோடி பேருக்கும் வழங்கப்பட இருக்கிறது.
- இத்திட்டத்தின் மூலம், நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சில அவசியமான சேவைகள் வழங்கப்படவுள்ளன.
- சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பலரும் ஆஸ்பத்திரிகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். இதைபோல உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.
- 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்சினைகள், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள், ஆகியவற்றைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கியப் பணி.
- இதில், பொது சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, அவர்களின் சேவையை ஆற்ற இருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.