நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வெளிப்படையான விவாதத்திற்கு தலைமை தாங்கும் முதல் இந்திய பிரதமர் - நரேந்திர மோடி

 9 ஆகஸ்ட் 2021 ஆம் தேதி நடைபெறும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்   (UN Security Council (UNSC) ) கடல் பாதுகாப்பு குறித்த வெளிப்படையான விவாதத்திற்கு ( open debate on maritime security)  பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியப் பிரதமர் ஒரு வெளிப்படையான விவாதத்திற்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 கூ.தக. : ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தனது இரண்டு ஆண்டு காலத்தை ஜனவரி 1, 2021 அன்று தொடங்கியது. இது UNSC இல் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியாவின் ஏழாவது முறையாகும். முன்னதாக, இந்தியா 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, மற்றும் 1991-92 ஆகிய ஆண்டுகளில்ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்தது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!