“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
அதைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா” என்று பாரதியின் புகழைப் பாடியவர் - கவிமணி தேசிக விநாயகம்
-----------------------------------
“பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;
காடு கமழும் கற்பூரச் சொற்கோ;
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்; நாட்டில்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;
அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்;
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்” - என்று பாரதியின் புகழைப் பாடியவர் - பாவேந்தர் பாரதிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.