Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை”சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 29-9-2021 அன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைவார்கள். பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கச் செய்தல், நோய்களுக்கான பரிசோதனை மற்றும் உடல்நலம் குறித்த ஆலோசனை வழங்குதல், அதிநவீன பரிசோதனை சாதனங்களால் நோய்களை கண்டறிதல், நோய்கண்டவர்களுக்கு உடனடி சிகிச்சைஅளித்தல், சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல்நல மேம்பாடு மற்றும் தனிநபர் ஆரோக்கியத்தை உருவாக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" செயல்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1250 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இம்முகாம்களில் பன்முனை மருத்துவ பரிசோதனை, கண், பல், காது- மூக்கு தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். ஒவ்வொரு மாதமும், வருமுன் காப்போம் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டிய இடங்களை தேர்வு செய்து, எந்தெந்த நாட்களில், எந்தெந்த மருத்துவக்குழு, எந்தெந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து முகாம்கள் நடத்தப்படும். போக்குவரத்து வசதி அதிகமில்லாத இடங்களிலும் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமின் போதும் நல்வாழ்வு பற்றிய கண்காட்சி, கிராமப்புற புரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். மக்கள் எளிதில் மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் முகாமிலேயே சிகிச்சையும், இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும். தொடர் சிகிச்சை தேவைப்படின், நோயின் தன்மையைப் பொருத்து எந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற செல்ல வேண்டும் என்ற விபரங்களுடன் அடையாள அட்டைகள் வழங்கப்படும். தொடர் சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு தேவைப்படும் விவரங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் முகாம் வாரியாக கணினியில் பதியப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்திட்ட முகாம்கள் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு பொது சுகாதாரம், மருத்துவக் கல்வி, மருத்துவம் மற்றும் ஊரகநலப் பணிகள், குடும்ப நலம், இந்திய மருத்துவம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகம், கண்பார்வை இழப்பு தடுப்பு நிறுவனம், தமிழ்நா மருத்துவ சேவை கழகம், சமூக நலத்துறை, கல்வித்துறை, ஊரகவளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை போன்ற அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot