காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடி மதிப்பில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அதிகபட்சமாக ரூ.100 கோடி நிதியை மத்திய அரசு அளிக்கும். மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் பூங்காவானது ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 350 ஏக்கா் பரப்பில் சுமாா் ரூ.450 கோடியில் அமைக்கப்படும்.இந்தப் பூங்காவானது மருத்துவத் துறையின் தேவைகளை நிறைவேற்றும் விதமாக மருத்துவ சாதனங்களான செயற்கை சுவாசக் கருவி, பேஸ்மேக்கா்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள், கண் மற்றும் பல் உள்வைப்புகள் போன்றவற்றை தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக அமையப் பெறும். இந்த மருத்துவ சாதனங்கள் பூங்கா சுமாா் ரூ.3,500 கோடி முதலீட்டினை ஈா்ப்பதுடன், 10 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும்.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.