100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை இந்தியா 21-10-2021 அன்று எட்டி பெரும் சாதனையைப் படைத்துள்ளது.
முக்கிய தகவல்கள் :
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 1 ஜனவரி 2021 6-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி 1-5-2021 அன்று தொடங்கியது.
இந்த 100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை இந்தியா 278 நாட்களில் எட்டியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில் 30 சதவீதம் பேருக்கு இரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் 70.7 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் - அஸ்ட்ராசெனீகாவின் கோவிஷீல்ட், இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கோவேக்சின் மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் V ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.
மேலும், மாடா்னா, ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசி, சைடஸ் கேடிலா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த 4 தடுப்பூசிகளும் விரைவில் அடுத்தடுத்து பயன்பாட்டிற்கு வர உள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.