தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள “இ-முன்னேற்றம்” மற்றும் “தகவல் தொழில்நுட்ப நண்பன்” ஆகிய இரண்டு வலைத்தளங்களையும், “கீழடி- தமிழிணைய விசைப்பலகை” மற்றும் “தமிழி – தமிழிணைய ஒருங்குறி மாற்றி” ஆகிய இரு தமிழ் மென்பொருள்களையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 22.10.2021 அன்று தொடங்கி வைத்தார்.
“இ-முன்னேற்றம்” இணையதளம் பற்றி ...
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, சுமார் ஒரு இலட்சம் கோடிக்கான 200 முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இத்திட்டங்களின் வளர்ச்சிகளை மீளாய்வு செய்து அவற்றைக் கண்காணிப்பதற்காக “இ-முன்னேற்றம்” என்ற வலைத்தளம் (https://emunnetram.tn.gov.in/) தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு திட்டம் குறித்த விவரங்களான, பணி ஒப்பந்தமான நாள், தொடங்கப்பட்ட நாள், நடைபெறும் இடம், நிதி நிலைமை, மாதாந்திர அடிப்படையில் திட்டத்தின் வளர்ச்சி, நிதிநிலைமையின் வரையறை, பணிவளர்ச்சியின் தொடர் புகைப்படம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மேலும், முக்கிய அரசுத் துறைகளின் செயல்பாடுகளை இதன் வழியே கண்காணித்திடவும் இயலும். துறைத்தலைமை அலுவலகங்கள் அவ்வப்போது திட்டங்களின் வளர்ச்சியினைத் தெரிவிப்பதற்கும், நெருக்கடியான பொருண்மைகள் மற்றும் தாமதத்திற்கான காரணங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைத் தெரிவிப்பதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழடி-விசைப்பலகை மென்பொருளானது தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்’99 விசைப்பலகை (Tamil’99 Keyboard), ஒலிபெயர்ப்பு விசைப்பலகை (Phonetic Keyboard), பழைய தட்டச்சு விசைப்பலகை (Old Typewriter Keyboard) ஆகிய மூன்று விதமான கணினி விசைப்பலகைகளின் அமைப்பில் செயல்படும்.
“தமிழி-தமிழிணைய ஒருங்குறி மாற்றி” (Tamizhi –Unicode Converter) மென்பொருளானது, வானவில் மற்றும் பிற தமிழ் எழுத்துருக்களில் (Fonts) தட்டச்சு செய்யப்பட்ட .doc, .docx, .rtf, .xls, .xlsx, .ods, .ppt, .pptx போன்ற அமைப்புகளில் உள்ள உரைநடை (Text), கோப்பு (File) மற்றும் கோப்புறை (Folder) ஆவணங்களை "தமிழ் ஒருங்குறி"க்கு மாற்றும் தன்மையுடையது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இம்மென்பொருட்களைக் கட்டணமின்றி தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்திலிருந்து (www.tamilvu.org/unicode) பதிவிறக்கம் செய்திட இயலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.