Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டம் (Pradhan Mantri Atmanirbhar Swasth Bharat Yojana (PMASBY))

பிரதமரின் தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தை (Pradhan Mantri Atmanirbhar Swasth Bharat Yojana (PMASBY))   அக்டோபர் 25 அன்று உத்தரப்பிரதசத்தில்  பிரதமர் மோடி அவர்கள் தொடங்கிவைக்கவுள்ளார். 

தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டம் என்பது நாடு முழுவதும் சுகாதார கவனிப்புக்கான அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தும் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.  

நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பொது சுகாதாரக் கட்டமைப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பாட்டு இடைவெளிகளை நிரப்புவது தற்சார்பு ஆரோக்ய இந்தியா திட்டத்தின் நோக்கமாகும்

இதன் மூலம், 5 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சிகிச்சைப் பிரிவு சேவைகள் கிடைக்கும்

அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொது சுகாதார பரிசோதனைக்கூடங்கள் அமைக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பம் மூலம் நோய் கண்காணிப்பு நடைமுறை உருவாக்கப்படவுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot