நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் | முக்கிய தகவல்கள்

 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 1-12-2021 அன்று ஒப்புதல் அளித்தார்.

கூ.தக. :

மத்திய அரசு கொண்டுவந்த  3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி   19-11-2021 அன்று அறிவித்த நிலையில்  24-11-2021 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்  29-11-2021 அன்று  ஒப்புதல் அளித்துள்ளன.

வேளாண் சட்டங்கள்  - முக்கிய தகவல்கள்

  • ஜீன் 5, 2020 இல் மத்திய அரசால்  மூன்று புதிய வேளாண் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன்.
  • செப்டம்பர் 14, 2020  அன்று  பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  இந்த சட்டம்    செப்டம்பர் 17, 2020 - இல்    மக்களவையிலும்,  செப்டம்பர் 20, 2020 - -இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன. 
  • இந்த  சட்டங்கள் செப்டம்பர் 27, 2020 அன்று ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டது. 
  • வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராகப்  பதவி வகித்த  ஹர்சிம்ரத் கவுர் பாதல் செப்டம்பர் 18, 2020  அன்று  பதவி ராஜினாமா செய்தார். 
  • விவசாயிகளின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் 8-12-2020 அன்று நடைபெற்றது. 
  • வேளாண் சட்டங்கள் தொடர்பாக  உச்சநீதிமன்றம் நியமித்த குழு  (Committee on Farm Laws appointed by Supreme Court)  :   புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்வதற்காக சமரசக் குழுவை  உச்சநீதிமன்றம்  12 ஜனவரி 2021 அன்று  அமைத்தது. இந்த  குழுவில் வேளாண் பொருளாதார நிபுணர் பிரமோத் குமார் ஜோஷி, ஷேத்காரி சங்கடன தலைவா் அனில் கன்வாட், வேளாண் விளைபொருள்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாட்டி ஆகியோா் இடம்பெற்றிருந்தனர் ( நான்காவது உறுப்பினரான பூபிந்தா் சிங் மான், தொடக்கத்திலேயே குழுவில் இருந்து விலகிக் கொண்டாா்)  . இக்குழு,    தனது அறிக்கையை மாா்ச் 19, 2021 அன்று  தாக்கல் செய்தது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!