நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

நீதி ஆயோக் - தேசிய பலபரிமாண வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் பீகார் முதலிடம்

 நீதி ஆயோக்  வெளியிட்டுள்ள தேசிய பலபரிமாண வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் 51.91 சதவீத ஏழை மக்களுடன் பிகாா் முதலிடத்தில் உள்ளது.42.16 சதவீத ஏழைகளுடன் ஜாா்க்கண்ட் 2-ஆவது இடத்திலும், 37.79 சதவீத ஏழைகளுடன் உத்தர பிரதேசம் 3-ஆவது இடத்திலும் உள்ளன. மத்திய பிரதேசம்  (36.65 சதவீதம்)  4-வது இடத்திலும், மேகாலயா (32.67 சதவீதம்) 5வது இடத்திலும் உள்ளன.  மேலும் இந்தப் பட்டியலில் கேரளம்(0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%) மற்றும் தமிழ்நாடு (4.89%) உள்ளிட்ட மாநிலங்கள் இறுதி நான்கு இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

இதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. 

கூ.தக.  : சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம், ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்குழந்தைகள் இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு மற்றும் வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட 12 தரவுகளின் அடிப்படையில்     ‘ஆக்ஸ்ஃபோா்டு வறுமை-மனித வளா்ச்சி முன்னெடுப்பு, ஐ.நா. வளா்ச்சித் திட்டம் உள்ளிட்டவை வகுத்த வழிமுறை பின்பற்றி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!